வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு
Showing posts with label சொன்னது நடந்தது. Show all posts
Showing posts with label சொன்னது நடந்தது. Show all posts

PostHeaderIcon இன்றைய அரசியலை அன்றே சொன்னார் அய்யா!

        அன்பான அன்புக்கொடி பிள்ளைகளுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


"சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும்!, பொய்யரோடு அன்பு பொருந்தி இருக்காதே மெய்யரோடு அன்பு மேவியிரு என்மகனே!"
         


             இன்றைய அரசியல் நிலைமைகளை பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது ஒன்றும் இல்லை. தந்திரம்,ஊழல்,லஞ்சம் என கூறிக் கொண்டே போகலாம்.ஆம் அத்துனை இழிவான நிலைதான் இன்று உலகம் முழுவதும் காணப்படுகிறது .மக்களை ஏமாற்றி மக்கள் பணத்தை சுரண்டும் ராசாக்களும் ,மந்திரிகளும் பெருகிவிட்டனர்.
                 மக்களின் நலனுக்காக தான் சுய உடைமைகளை இழந்த மன்னர்கள் இருந்த காலம் மாறி ,தன் மற்றும் தன் குடும்ப நலனுக்காக மக்களை ஏமாற்றும் மன்னர்களின் கலிகாலம் தான்  இது என்பது எல்லோரும் உணர்ந்த ஒன்றுதான் .இதை யார்தான் மாற்றுவது? யாராலும் முடியாது, பழையவர்களை  மாற்றி புதியவர்களை அமைத்தாலும் இதுதான் நடக்கும் என்பதில் ஐயமில்லை.

                ஒரு சாதாரண மனிதன் ஒரு சான்றிதழை அரசு அலுவகங்களில் பெறுவதற்கு படும் பாடு ஒன்றே இன்றைய அரசியலையும் அதன் தன்மைகளையும் விளக்கி விடும். எதற்கு எடுத்தாலும் கைக்கூலி(லஞ்சம்) என்றாகி விட்டது.தன் நலனை மட்டுமே நினைத்து கொண்டு ஏழைகளின் துன்பங்களை உணராது இத்தகைய செயல்களை செய்கின்றனர்.இது மாறுமா? என்றால் நிச்சயம் கேள்விகுறிதான்,

                இத்தகைய இழி நிலைமை நாட்டில் நடக்கும்  என்று நம் அய்யா அன்றே பின்வருமாறு கூறியுள்ளார்,

"வையகத்தில் ராஜனவன் கைக்கூலி நடத்தியே 
வாங்கிடுவான்  பேசிடுவான் ஞாய பிழையாக "

 இன்று நடக்கும் இந்த நிலையை தெளிவாக சொல்கிறார் நம் அய்யா .மன்னனே கைக்கூலி வாங்கித்தான் மக்களுக்கு ஒரு நன்மையை செய்வான் என்கிறார்.மேலும் பேசிடுவான் ஞாய பிழையாக என்கிறார். இதற்கு கைக்கூலி கிடைத்தால்  அதற்காக ஞாய நெறிகளை மறந்து  பொய்யாகவும் பேசுவான் என்று அர்த்தமாகும் ,இன்றைய நடப்புகளும் அப்படிதானே உள்ளது.
ஒரு நாட்டின் மன்னனே இவ்வாறு இருக்க அவனுக்கு கிலே  உள்ள மந்திரிகள் எப்படி இருப்பார்கள் .அவர்களின் நிலைமையையும் அய்யா பின்வருமாறு உரைக்கின்றார்,
"நாடுதனில் ராசாக்கள் பாவிகளாய்  நாள்தோறும்
வந்து பாசாங்குமந்திரியும் பாவிகளாய் கூசாமல் 
பெண்ணாலும் பொன்னாலும் நிலங்கரையில் 
மண்ணாலும் நித்தம் மடிவார்"
எவ்வளவு தெளிவாக கூறுகின்றார் .பல்வேறு துறைகளை பிரித்து ஒவ்வொரு துறைக்கும் ஒரு மந்திரியை வைக்கிறார்கள்,மக்களுக்கு நன்மை செய்ய .ஆனால் இன்றைய மந்திரிகள் இந்த துறையை விட அந்த துறையில் அதிக லஞ்சம் கிடைக்குமே என்று எண்ணுகிறார்களே தவிர மக்களை எண்ணிப்பார்ப்பதில்லை.பணத்துக்காகவும்.பெண் சுகத்துக்காகவும்  , நிலத்துக்காகவும்  ஏங்கியே மடிவார்கள் என்று அய்யா கூறுகின்றார்.இதுதான் இன்றைய நிகழ்வு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அய்யா உண்டு!

PostHeaderIcon கோட்டையது அழியுதப்பா குச்சிக் கட்டை மதிலாகும்!


"கோட்டையது அழியுதப்பா குச்சிக் கட்டை மதிலாகும்!"
அன்பான அன்புக்கொடி பிள்ளைகளே அய்யா வைகுண்டர் நம் முன்னோர்களுக்கும்,நமக்கும்,நம்முடைய சந்ததியினருக்கும் பயன்படும் விதமாகவும்,கொடிய கலியிலிருந்து நம்மைக் காத்துக் கொண்டு தரும யுக வாழ்வை பெற்று வைகுண்டர் திருவடியைச் சேரவும் அருளிதந்த அற்புதங்களும்,அதிசயங்களும் நிறைந்த பொக்கிசங்கள் தான் அகிலதிரட்டும்,அருள்நூலும் ஆகும்.

இவ்வரிய பொக்கிசங்களில் வைகுண்டர் இதற்கு முந்தய யுகச் செய்திகளையும், கலியுக முடிவினை பற்றியும்,அக்காலத்தில் நடைபெறும் சம்பவங்களையும் கூறியுள்ளார்.அவற்றுள் ஒன்றை பற்றி காண்போம்.

நாம் வாழும் இந்த உலகம் பல்வேறு நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் சிறு சிறு குறுநிலங்களாகவும் பிரிக்கப் பட்டு பல்வேறு மன்னர்களால் ஆண்டுவரப் பட்டது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.ஒவ்வொரு குறுநில மன்னர்களும் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களை பிற எதிரி நாட்டு மன்னர்களிடம் இருந்து காத்து தன் மக்களுக்கு எவ்வித துயரமும் இல்லாதவாறு ஆண்டு வந்தனர்.
அவ்வாறு தனது நாட்டை பிற நாட்டிடம் இருந்து பாதுகாக்கவும்,எல்கைகளை நிர்ணயிக்கவும் மிகப் பெரிய கோட்டைகளை கட்டி வைத்திருந்தனர்.ஆங்கிலேயரின் பிரங்கிகளுக்கே சாவல் விட்ட அக்கோட்டைகளின் வலிமை நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் இத்தகைய வலிமை மிக்க கோட்டைகள் இப்பொழுது எங்கே? அவற்றின் நிலை என்ன ஆனது?அவைகள் பெரும்பாலும் இருந்த இடம் தெரியாது அழிந்து விட்டன.அந்த கோட்டைகளின் நிலைதான் என்ன? அவைகள் என்ன ஆனது? என்று பார்த்தால் அந்த கோட்டைகள் இருந்த இடமெல்லாம் ஒரு குச்சிக் கட்டை தொங்கிக் கொண்டு இருக்கிறது .ஆம் அந்த குச்சிக் கட்டை வேறு ஒன்றும் இல்லை ஒவ்வொரு மாவட்டங்களின் எல்லைகளிலோ,மாநிலங்களின் எல்லைகளிலோ உள்ள "check post" தான் அந்த குச்சிக் கட்டை ஆகும்.அதன் அமைப்பை பார்க்கும் போது இது உண்மை என்பது விளங்கும்.

இத்தகைய மிகப் பெரிய கோட்டைகளின் நிலைமை வெறும் குச்சிக் கட்டையாக மாறும் என்பதை அய்யா வைகுண்டர் கூறியுள்ளார்.

"கோட்டையது அழியுதப்பா குச்சிக் கட்டை மதிலாகும்"

இதை வேறு விதமாகவும் நாம் காணலாம் இங்கு கோட்டை என்பது மனிதர்கள்,கலியின் மாய வினைகளில் இருந்து தங்களை காத்து கொள்ள அகத்தில் கட்டிய கலிக்கு எதிரான கோட்டையைக் குறிக்கும். இக்கோட்டையின் வலிமையானது முந்தய காலங்களில் மிகவும் அதிகமானதாகவும், அதனை தகர்க்க நினைக்கும் கலியின் சக்திகளை தாங்கி கொள்ளும் திறன் மிக்கதாகவும் இருந்தது.

அனால் இத்தகைய வலிமை மிக்க கோட்டையானது கலியின் உச்சக்கட்டத்தில் தன் வலிமையை இழந்து ,எந்த நேரத்திலும் உடைந்து விடகூடிய வலிமை குறைந்த ஒரு குச்சிக் கட்டையாகிவிடும் என்பதை இவ்வரியின் மூலம் வைகுண்டர் உரைக்கின்றார்.

இந்த குச்சிக் கட்டை மீண்டும் கோட்டையாக மாற என்னதான் வழி ? ஏதேனும் வழி உள்ளதா என்றால் உண்டு ,அதுதான்

அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா!


அய்யா உண்டு!

PostHeaderIcon அயோத்தியா பட்டினம் தான் அழியுதப்பா என்மகனே!



             அய்யா வழி அன்பர்கள் இந்த தலைப்பை பார்த்த உடனேயே புரிந்து கொண்டிருப்பார்கள் ,பிறரும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.ஆம் அன்பர்களே இந்த வசனம் இன்று  தற்போதைய அயோத்தியின் நிலைமையை பார்த்து விட்டு யாரோ ஒருவர் சொன்ன வசனம் அல்ல. அப்படி சொல்வது ஒன்றும் பெரிய விசயமும் அல்ல.ஆனால் இன்றைய இந்த அயோத்தியின் நிலைமையை கிட்டத்தட்ட 190 ஆண்டுகளுக்கு முன்னரே அய்யா வைகுண்டர் தன் அருள் நூலில் கூறியிருக்கிறார் என்பது மிக பெரிய விசயமாகும் . 
  "இன்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி பாடுகின்றேன்
 அயோத்தியா பட்டணந்தான் அழியுதப்பா என்மகனே"
என்ற இந்த வரிகள் வைகுண்டர் தந்தவைகளாகும். 
           இந்த அயோத்தியில் என்ன பிரச்சினை நடக்கிறது,எங்கிருந்து வந்தது இந்த அயோத்தி என்று பார்ப்போம்.அயோத்தி என்பது ராமன் பிறந்த இடம் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும். 
             பிரம்மா தனது புத்திரனை (ஸ்வாயம்புவமனு) அழைத்துக் கொண்டு, இருவரும் வைகுண்டம் சென்றடைந்தார்கள். அங்கு ஸ்ரீமந் நாராயணனை தரிசித்து வணங்கினார்கள். அவரிடம் விஷயம் சம்பந்தமாக அவசியமான அறிவுரைகள் கூறி, வழிகாட்ட வேண்டினர். ஸ்ரீமந் நாராயணன் அவர்களின் பிரார்த்தனையைக் கேட்டு அதற்காக வைகுண்டத்தின் மத்தியிலிருந்து (அயோத்தி) என்னும் ஒரு சிறு பாகத்தை எடுத்து, பிரம்மா மூலமாக பிரும்மாவின் முதல் குமாரன் மனுச் சக்கரவர்த்திக்குப் பரிசாக அளித்தார். ஸ்ரீமந் நாராயணனின் அறிவுரைப்படி, ஸ்வாயம்புவமனு அதை எடுத்துக் கொண்டு வந்து, பூலோகத்தில் புனிதமான ஸரயூ நதியின் தென்கரையில்  ஸ்தாபிதம் செய்தார். தோற்றுவாய் அயோத்யா (கோசல தேசம்) மனித குல நாகரீகத்தின் (ஆதி ஸ்ரோத்) ஆதிமூலமாக விளங்கியது. என்பது இந்துகளின் பார்வையில் அயோத்தின் வரலாறு ஆகும்.
       இந்த அயோத்தியில் சூரிய குலம் தோன்றி அக்குலத்தில் நாராயணர் ஸ்ரீ ராமனாக பிறந்து உத்தமனாக வாழ்ந்து ராவண வதம் செய்தார் என்பது வரலாறு.
           மேலும் 1528ஆம் ஆண்டு மிர் பக்கி என்னும் முகலாய படைத்தலைவனால் கட்டப்பட்ட பாபர் மசூதி இருந்த பகுதி இந்த அயோத்தி என்பது முஸ்லிம்  மக்களின் நம்பிக்கையாகும்.
                           இந்த இருவரின் நம்பிக்கை மற்றும் மத வெறியே இன்றைய அயோத்தியின் பிரச்சினை. இந்த பிரச்சினையில் பல்லாயிர கணக்கில் உயிர்கள் பறிபோனது தான் பரிதாப விஷயம்.
இதையே வைகுண்டர் ,
"நான்பெரிது நீ பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று
வான்பெரிது என்று அறியாமல் மாழ்வார் வீன்வேதமுல்லோர்"  
இந்த சொத்து சண்டை இன்று நேற்றல்ல 1855ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை அங்கு பல மதக்கலவரங்களாக வெடித்த வண்ணம் உள்ளது. சரி! நீதிமன்றத்தின் மூலமாவது இதற்கு ஒரு தீர்வு பிறக்கும் என காத்திருந்தால்...’புதிய’நீதியால் மறுபடியும் கலவரங்கள் உண்டாக வாய்ப்பிருப்பதாக நீதிபதிகளும் பீதி கொள்வதால் நீதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்படி நீதிமன்றங்களே வாய்தா வாங்கும் இந்த வழக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விட பழமையானது. ஆம்! இதன் முதல் வழக்கு 1885 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபீர் தாஸ் என்பவரால் அப்பகுதியில் கோயில் கட்ட அனுமதி கேட்டு தொடரப்பட்டது.மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட அந்த வழக்கு அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

1949ஆம் ஆண்டு உள்ளூர் சாது ஒருவனின் கைங்கர்யத்தால் அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டு ஒரு பெரும்கலவரம் நடந்தேறி அதற்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது. அதை தொடர்ந்து அப்பகுதியின் நுழைவாயிலை அடைத்து வழிபாட்டு அனுமதியை மறுத்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகந் ராமசந்திர தாஸ்பரமஹன்ஸ் என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

12ஆண்டுகள் கழித்து 1961ஆம் ஆண்டு உத்திரபிரதேச மத்திய சன்னி வக்பு வாரியத்தின் சார்பாக முகமது அன்சாரி என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் 1996ஆம் இந்த நான்கு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
        அயோத்யா நிலம் தொடர்பான வழக்கில் தற்போது நீதிபதிகள் தீர்ப்பை வாசித்து விட்டனர் . சர்ச்சைக்குள்ளான நிலத்தை 3 பாகங்களாக பிரித்து வக்ப் போர்ட், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகியோருக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலைமை 3 மாதங்களுக்கு தொடர வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
                 பல்வேறு பலிகளை கண்ட இப்பிரச்சினை இத்தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வருமா அல்லது இன்னும் பிரச்சினை கிழம்புமா என்பது கேள்விக்குறி தான்.இதைத்தானே வைகுண்டர் அன்றே "அயோத்தியா பட்டினந்தான்  அழியுதப்பா என்மகனே!" என்கிறார்.
                                                                    அய்யா உண்டு 

PostHeaderIcon பெட்டைகோழி சேவலாக மாறியது!

" பெட்டை கோழி சிறகுதட்டி கூவவும் தான் கண்டேனடா "

            . 

  சிலிகுரி, மே 24: ஆண்கள் பாலியல் மாற்றம் காரணமாக அறுவை சிகிச்சையில் பெண்ணாக மாறிவிடுவது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், முட்டையிட்டு குஞ்சு பொறித்த பெட்டைக் கோழி ஒன்று சேவலாக மாறி பெட்டைக் கோழிகளை தேடி சென்று வரும் சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் நடந்துள்ளது.
               மேற்குவங்க மாநிலம் கமட் செங்கிரபாந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹஜிருதீன் முகமது. இவருடைய வீட்டில் கோழிகளை வளர்த்து வந்தார். அதில் கோழி ஒன்று இயற்கையாகவே ஏற்பட்ட மாறுபாடுகளின் காரணமாக சேவலாக மாறி உள்ளது. இந்த கோழி, ஆறு மாதங்களுக்கு முன்பு முட்டையிட்டு குஞ்சு பொறித்துள்ளது.அதன்பின்பு அதனிடம் சிறிது, சிறிதாக மாற்றங்கள் தென்பட ஆரம்பித்தது. 

                       அதன் தலையில் கொண்டை வளர ஆரம்பித்தது.திடீர், திடீரென பெட்டைக் கோழிகளை துரத்தியது. பெட்டைக் கோழிக்கான தன்மை மாறி சேவலுக்கான தன்மை அதனிடம் ஏற்பட்டது தெரியவந்தது. தனக்கென ஒரு பெட்டை கோழிகள் கூட்டத்தை சேர்த்து கொண்டு திரிந்தது. அதனிடம் எந்த சேவல் அண்டினாலும் அதை கொத்தி துரத்தியது. சேவல்கள்தான் இதுபோன்று செய்யும்.
                       மேலும், சேவலுக்குரிய இனவிருத்தி உறுப்பும் அதனிடம் வளர ஆரம்பித்துள்ளது. இச்செய்தி பரவியவுடன் கால்நடைத் துறை அதிகாரிகள் ஹஜிருதீன் வீட்டுக்குச் சென்று, சேவலாக மாறிய கோழியை ஆராய்ந்தனர். அவர்களுக்கும் இது பெரும் ஆச்சரியமாக இருந்தது.
இந்தியாவில் இதுபோன்று கோழி ஒன்று இயற்கையாகவே சேவலாக மாறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இதுபோன்று ஒரு கோழி சேவலாக மாறியதாக அமெரிக்க பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது தெரியவந்துள்ளது.
                             இந்த அதிசய சேவலை ஆராய்வதற்காக அதை தங்களிடம் தருமாறு கால்நடை துறை அதிகாரிகள் ஹஜிருதீனிடம் கேட்டனர். ஆனால், அதிசய சேவலை பார்க்க வரும் மக்கள் காசு தருவதால், அதை அதிகாரிகளிடம் தர மறுத்துவிட்டார்.

தினகரன் செய்தி:

                    நண்பர்களே இந்த செய்தியில் இத்தகைய சம்பவம் இரண்டு முறை நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வேறு எங்காவது நடந்து உள்ளதா? 
                      மூன்றாம் முறையும்  நடந்து இருக்கிறது. ஆம் நண்பர்களே வேறு எங்கும் இல்லை நம் தமிழகத்தில்தான் ,திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள மேலப்பட்டியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அருள் நூலில்,
                     "சாவல்கோழியல்லோ கூவுமென்றுசொல்லுவார்கள் பெட்டை
                      தானுமே கூவக்கண்டேன் சிவனே அய்யா"
என்று சாட்டு நீட்டோலையிலும்,
'கோவென்று பெட்டை கோழி கூவிவிடும்"

என்று நடுத்தீர்வை உலாவிலும்,
  அகிலத்திரட்டில் ,
"பெட்டை கோழி சிறகுதட்டி கூவவும் தான் கண்டேனடா" 
       என்று அய்யா வைகுண்டர் கூறியுள்ளதை ஒருமுறை நினைத்து பாருங்கள்.அய்யா சொன்ன ஒவ்வொரு விஷயங்களும் சரியான நேரங்களில் நடந்து கொண்டே வருவதற்கு இது ஒரு சாட்சியல்லவா?
                     

           மேற்கு வங்கத்தில் நடந்தது போலவே மேலப்பட்டியிலும் நடந்துள்ளது.நான்கு முறை அடை காத்து  குஞ்சு பொரித்து வந்த பெட்டைக் கோழி சிறிது நாட்களாகவே தன் உடலமைப்பிலும் ,நடத்தையிலும் மாற்றம் கண்டுள்ளது.நாளடைவில் தலையில் கொண்டை  முளைத்துள்ளது.தினந்தோறும் முட்டையிட்ட கோழி தற்போது தினமும் அதிகாலையிலேயே சிறகுதட்டி  கூவுகிறதாம் இந்த கோழி.
அய்யாவின் வார்த்தைகள் இங்கு நிறைவேறி இருப்பதை காணுங்கள். 
நன்றி:ayyasivachandran.com

PostHeaderIcon அழிவுகள் விபரம்

"காளி வெள்ளம் வருகுதப்பா கப்பல் செய்து வைத்திடுங்கோ "


அழிவுகள் விபரம்

அய்யா வைகுண்டர் கலி முடியும் காலத்தில் நடக்கும் உலக நிகழ்வுகளை அகிலத்திரட்டு,அருள்நூலில் கூறியுள்ளார்.

பிவரும் வரிகளை காண்போம், 

" பெருங்காற்றினால் அழிவு
வெள்ளத்தால் அழிவு 
பேய்மாராட்டத்தால் அழிவு 
பெருஞ்சுரத்தால்  அழிவு 
சம்மாரியால் அழிவு
காளிவெள்ளத்தால் அழிவு
நஞ்சுதின்று கொலைபட்டளிவு
பெண்ணாலே ஆணழிவு 
ஆணாலே பெண்ணழிவு "

மேற்கண்ட வரிகள் அருள்நூலில் அதிகார பத்திரத்தில் உள்ளவை ஆகும்.
இன்றைய உலகின் நடப்புகளுக்கும், இவ்வரிகளுக்கும் உள்ள ஒற்றுமையை எவராலும் மறுக்க முடியாது என்பதே உண்மை .
ஆம் அனைத்தும் அய்யாவின் வாக்குப்படியே நடந்த உண்மைகளாகும், பெரும் காற்றினால் எத்தனையோ முறை உலகில் அழிவு ஏற்பட்டுள்ளது, அதுபோல மழையாலும்,வெள்ளத்தாலும் ஏற்படாத பதிப்புகளே இல்லை எனலாம்.
இன்றைய உலகில் மக்கள் பல செய்ய தகாத செயல்களை செய்து பின் அதற்காக மனம் வருந்தி விஷமருந்தி சாகும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இதற்கும் மேலாக காமம், பணம்,போன்றவற்றின் மேலுள்ள  ஆசைகளாலும்
தங்களுக்குள்ளே கொலை செய்து சாகும் நிகழ்வுகளும்,ஆண்களால் பெண்களும், பெண்களால் அண்களும் கொலை செய்யப்படுவது எளிதான செயலாகி விட்டது.இத்தனை கொடிய சம்பவங்களை முன்கூட்டியே வைகுண்டர் வகுத்ததை அருள் நூல் விளக்குகிறது.
பின்வரும் உதாரணங்கள் அய்யாவின் வாக்குகளுக்கு சான்றாக இருப்பதை காண்க .
                                                           
                                                     அய்யா உண்டு


  • 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் 


டிசம்பர் 2004ல் சுமாத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆகும். 9.3 புள்ளிகள் ரிக்டர் அளவில் வாய்ந்த நிலநடுக்கம் வரலாற்றில் நிலநடுக்கப் பதிவுக் கருவியில் ரிக்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையாக நிலநடுக்கம் ஆகும்.

இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா,மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய நாடுகளை தாக்கியதுடன் 225,000 பேர் உயிரிழந்தனர்.  
    








  • இது  மட்டுமல்ல  இன்னும்  நிறைய  உண்டு  அவைகளை  இனிவரும்  வாரங்களில்  காண்போம் 

அய்யா  உண்டு 

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter