வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon கோட்டையது அழியுதப்பா குச்சிக் கட்டை மதிலாகும்!


"கோட்டையது அழியுதப்பா குச்சிக் கட்டை மதிலாகும்!"
அன்பான அன்புக்கொடி பிள்ளைகளே அய்யா வைகுண்டர் நம் முன்னோர்களுக்கும்,நமக்கும்,நம்முடைய சந்ததியினருக்கும் பயன்படும் விதமாகவும்,கொடிய கலியிலிருந்து நம்மைக் காத்துக் கொண்டு தரும யுக வாழ்வை பெற்று வைகுண்டர் திருவடியைச் சேரவும் அருளிதந்த அற்புதங்களும்,அதிசயங்களும் நிறைந்த பொக்கிசங்கள் தான் அகிலதிரட்டும்,அருள்நூலும் ஆகும்.

இவ்வரிய பொக்கிசங்களில் வைகுண்டர் இதற்கு முந்தய யுகச் செய்திகளையும், கலியுக முடிவினை பற்றியும்,அக்காலத்தில் நடைபெறும் சம்பவங்களையும் கூறியுள்ளார்.அவற்றுள் ஒன்றை பற்றி காண்போம்.

நாம் வாழும் இந்த உலகம் பல்வேறு நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் சிறு சிறு குறுநிலங்களாகவும் பிரிக்கப் பட்டு பல்வேறு மன்னர்களால் ஆண்டுவரப் பட்டது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.ஒவ்வொரு குறுநில மன்னர்களும் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களை பிற எதிரி நாட்டு மன்னர்களிடம் இருந்து காத்து தன் மக்களுக்கு எவ்வித துயரமும் இல்லாதவாறு ஆண்டு வந்தனர்.
அவ்வாறு தனது நாட்டை பிற நாட்டிடம் இருந்து பாதுகாக்கவும்,எல்கைகளை நிர்ணயிக்கவும் மிகப் பெரிய கோட்டைகளை கட்டி வைத்திருந்தனர்.ஆங்கிலேயரின் பிரங்கிகளுக்கே சாவல் விட்ட அக்கோட்டைகளின் வலிமை நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் இத்தகைய வலிமை மிக்க கோட்டைகள் இப்பொழுது எங்கே? அவற்றின் நிலை என்ன ஆனது?அவைகள் பெரும்பாலும் இருந்த இடம் தெரியாது அழிந்து விட்டன.அந்த கோட்டைகளின் நிலைதான் என்ன? அவைகள் என்ன ஆனது? என்று பார்த்தால் அந்த கோட்டைகள் இருந்த இடமெல்லாம் ஒரு குச்சிக் கட்டை தொங்கிக் கொண்டு இருக்கிறது .ஆம் அந்த குச்சிக் கட்டை வேறு ஒன்றும் இல்லை ஒவ்வொரு மாவட்டங்களின் எல்லைகளிலோ,மாநிலங்களின் எல்லைகளிலோ உள்ள "check post" தான் அந்த குச்சிக் கட்டை ஆகும்.அதன் அமைப்பை பார்க்கும் போது இது உண்மை என்பது விளங்கும்.

இத்தகைய மிகப் பெரிய கோட்டைகளின் நிலைமை வெறும் குச்சிக் கட்டையாக மாறும் என்பதை அய்யா வைகுண்டர் கூறியுள்ளார்.

"கோட்டையது அழியுதப்பா குச்சிக் கட்டை மதிலாகும்"

இதை வேறு விதமாகவும் நாம் காணலாம் இங்கு கோட்டை என்பது மனிதர்கள்,கலியின் மாய வினைகளில் இருந்து தங்களை காத்து கொள்ள அகத்தில் கட்டிய கலிக்கு எதிரான கோட்டையைக் குறிக்கும். இக்கோட்டையின் வலிமையானது முந்தய காலங்களில் மிகவும் அதிகமானதாகவும், அதனை தகர்க்க நினைக்கும் கலியின் சக்திகளை தாங்கி கொள்ளும் திறன் மிக்கதாகவும் இருந்தது.

அனால் இத்தகைய வலிமை மிக்க கோட்டையானது கலியின் உச்சக்கட்டத்தில் தன் வலிமையை இழந்து ,எந்த நேரத்திலும் உடைந்து விடகூடிய வலிமை குறைந்த ஒரு குச்சிக் கட்டையாகிவிடும் என்பதை இவ்வரியின் மூலம் வைகுண்டர் உரைக்கின்றார்.

இந்த குச்சிக் கட்டை மீண்டும் கோட்டையாக மாற என்னதான் வழி ? ஏதேனும் வழி உள்ளதா என்றால் உண்டு ,அதுதான்

அய்யா சிவசிவ சிவசிவ அரகர அரகரா!


அய்யா உண்டு!

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter