வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon இன்றைய அரசியலை அன்றே சொன்னார் அய்யா!

        அன்பான அன்புக்கொடி பிள்ளைகளுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


"சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும்!, பொய்யரோடு அன்பு பொருந்தி இருக்காதே மெய்யரோடு அன்பு மேவியிரு என்மகனே!"
         


             இன்றைய அரசியல் நிலைமைகளை பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது ஒன்றும் இல்லை. தந்திரம்,ஊழல்,லஞ்சம் என கூறிக் கொண்டே போகலாம்.ஆம் அத்துனை இழிவான நிலைதான் இன்று உலகம் முழுவதும் காணப்படுகிறது .மக்களை ஏமாற்றி மக்கள் பணத்தை சுரண்டும் ராசாக்களும் ,மந்திரிகளும் பெருகிவிட்டனர்.
                 மக்களின் நலனுக்காக தான் சுய உடைமைகளை இழந்த மன்னர்கள் இருந்த காலம் மாறி ,தன் மற்றும் தன் குடும்ப நலனுக்காக மக்களை ஏமாற்றும் மன்னர்களின் கலிகாலம் தான்  இது என்பது எல்லோரும் உணர்ந்த ஒன்றுதான் .இதை யார்தான் மாற்றுவது? யாராலும் முடியாது, பழையவர்களை  மாற்றி புதியவர்களை அமைத்தாலும் இதுதான் நடக்கும் என்பதில் ஐயமில்லை.

                ஒரு சாதாரண மனிதன் ஒரு சான்றிதழை அரசு அலுவகங்களில் பெறுவதற்கு படும் பாடு ஒன்றே இன்றைய அரசியலையும் அதன் தன்மைகளையும் விளக்கி விடும். எதற்கு எடுத்தாலும் கைக்கூலி(லஞ்சம்) என்றாகி விட்டது.தன் நலனை மட்டுமே நினைத்து கொண்டு ஏழைகளின் துன்பங்களை உணராது இத்தகைய செயல்களை செய்கின்றனர்.இது மாறுமா? என்றால் நிச்சயம் கேள்விகுறிதான்,

                இத்தகைய இழி நிலைமை நாட்டில் நடக்கும்  என்று நம் அய்யா அன்றே பின்வருமாறு கூறியுள்ளார்,

"வையகத்தில் ராஜனவன் கைக்கூலி நடத்தியே 
வாங்கிடுவான்  பேசிடுவான் ஞாய பிழையாக "

 இன்று நடக்கும் இந்த நிலையை தெளிவாக சொல்கிறார் நம் அய்யா .மன்னனே கைக்கூலி வாங்கித்தான் மக்களுக்கு ஒரு நன்மையை செய்வான் என்கிறார்.மேலும் பேசிடுவான் ஞாய பிழையாக என்கிறார். இதற்கு கைக்கூலி கிடைத்தால்  அதற்காக ஞாய நெறிகளை மறந்து  பொய்யாகவும் பேசுவான் என்று அர்த்தமாகும் ,இன்றைய நடப்புகளும் அப்படிதானே உள்ளது.
ஒரு நாட்டின் மன்னனே இவ்வாறு இருக்க அவனுக்கு கிலே  உள்ள மந்திரிகள் எப்படி இருப்பார்கள் .அவர்களின் நிலைமையையும் அய்யா பின்வருமாறு உரைக்கின்றார்,
"நாடுதனில் ராசாக்கள் பாவிகளாய்  நாள்தோறும்
வந்து பாசாங்குமந்திரியும் பாவிகளாய் கூசாமல் 
பெண்ணாலும் பொன்னாலும் நிலங்கரையில் 
மண்ணாலும் நித்தம் மடிவார்"
எவ்வளவு தெளிவாக கூறுகின்றார் .பல்வேறு துறைகளை பிரித்து ஒவ்வொரு துறைக்கும் ஒரு மந்திரியை வைக்கிறார்கள்,மக்களுக்கு நன்மை செய்ய .ஆனால் இன்றைய மந்திரிகள் இந்த துறையை விட அந்த துறையில் அதிக லஞ்சம் கிடைக்குமே என்று எண்ணுகிறார்களே தவிர மக்களை எண்ணிப்பார்ப்பதில்லை.பணத்துக்காகவும்.பெண் சுகத்துக்காகவும்  , நிலத்துக்காகவும்  ஏங்கியே மடிவார்கள் என்று அய்யா கூறுகின்றார்.இதுதான் இன்றைய நிகழ்வு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அய்யா உண்டு!

2 comments:

Anonymous said...

Good Good.............

Anonymous said...

very nice....its really true

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter