வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon பெட்டைகோழி சேவலாக மாறியது!

" பெட்டை கோழி சிறகுதட்டி கூவவும் தான் கண்டேனடா "

            . 

  சிலிகுரி, மே 24: ஆண்கள் பாலியல் மாற்றம் காரணமாக அறுவை சிகிச்சையில் பெண்ணாக மாறிவிடுவது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், முட்டையிட்டு குஞ்சு பொறித்த பெட்டைக் கோழி ஒன்று சேவலாக மாறி பெட்டைக் கோழிகளை தேடி சென்று வரும் சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் நடந்துள்ளது.
               மேற்குவங்க மாநிலம் கமட் செங்கிரபாந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹஜிருதீன் முகமது. இவருடைய வீட்டில் கோழிகளை வளர்த்து வந்தார். அதில் கோழி ஒன்று இயற்கையாகவே ஏற்பட்ட மாறுபாடுகளின் காரணமாக சேவலாக மாறி உள்ளது. இந்த கோழி, ஆறு மாதங்களுக்கு முன்பு முட்டையிட்டு குஞ்சு பொறித்துள்ளது.அதன்பின்பு அதனிடம் சிறிது, சிறிதாக மாற்றங்கள் தென்பட ஆரம்பித்தது. 

                       அதன் தலையில் கொண்டை வளர ஆரம்பித்தது.திடீர், திடீரென பெட்டைக் கோழிகளை துரத்தியது. பெட்டைக் கோழிக்கான தன்மை மாறி சேவலுக்கான தன்மை அதனிடம் ஏற்பட்டது தெரியவந்தது. தனக்கென ஒரு பெட்டை கோழிகள் கூட்டத்தை சேர்த்து கொண்டு திரிந்தது. அதனிடம் எந்த சேவல் அண்டினாலும் அதை கொத்தி துரத்தியது. சேவல்கள்தான் இதுபோன்று செய்யும்.
                       மேலும், சேவலுக்குரிய இனவிருத்தி உறுப்பும் அதனிடம் வளர ஆரம்பித்துள்ளது. இச்செய்தி பரவியவுடன் கால்நடைத் துறை அதிகாரிகள் ஹஜிருதீன் வீட்டுக்குச் சென்று, சேவலாக மாறிய கோழியை ஆராய்ந்தனர். அவர்களுக்கும் இது பெரும் ஆச்சரியமாக இருந்தது.
இந்தியாவில் இதுபோன்று கோழி ஒன்று இயற்கையாகவே சேவலாக மாறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இதுபோன்று ஒரு கோழி சேவலாக மாறியதாக அமெரிக்க பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது தெரியவந்துள்ளது.
                             இந்த அதிசய சேவலை ஆராய்வதற்காக அதை தங்களிடம் தருமாறு கால்நடை துறை அதிகாரிகள் ஹஜிருதீனிடம் கேட்டனர். ஆனால், அதிசய சேவலை பார்க்க வரும் மக்கள் காசு தருவதால், அதை அதிகாரிகளிடம் தர மறுத்துவிட்டார்.

தினகரன் செய்தி:

                    நண்பர்களே இந்த செய்தியில் இத்தகைய சம்பவம் இரண்டு முறை நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வேறு எங்காவது நடந்து உள்ளதா? 
                      மூன்றாம் முறையும்  நடந்து இருக்கிறது. ஆம் நண்பர்களே வேறு எங்கும் இல்லை நம் தமிழகத்தில்தான் ,திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள மேலப்பட்டியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அருள் நூலில்,
                     "சாவல்கோழியல்லோ கூவுமென்றுசொல்லுவார்கள் பெட்டை
                      தானுமே கூவக்கண்டேன் சிவனே அய்யா"
என்று சாட்டு நீட்டோலையிலும்,
'கோவென்று பெட்டை கோழி கூவிவிடும்"

என்று நடுத்தீர்வை உலாவிலும்,
  அகிலத்திரட்டில் ,
"பெட்டை கோழி சிறகுதட்டி கூவவும் தான் கண்டேனடா" 
       என்று அய்யா வைகுண்டர் கூறியுள்ளதை ஒருமுறை நினைத்து பாருங்கள்.அய்யா சொன்ன ஒவ்வொரு விஷயங்களும் சரியான நேரங்களில் நடந்து கொண்டே வருவதற்கு இது ஒரு சாட்சியல்லவா?
                     

           மேற்கு வங்கத்தில் நடந்தது போலவே மேலப்பட்டியிலும் நடந்துள்ளது.நான்கு முறை அடை காத்து  குஞ்சு பொரித்து வந்த பெட்டைக் கோழி சிறிது நாட்களாகவே தன் உடலமைப்பிலும் ,நடத்தையிலும் மாற்றம் கண்டுள்ளது.நாளடைவில் தலையில் கொண்டை  முளைத்துள்ளது.தினந்தோறும் முட்டையிட்ட கோழி தற்போது தினமும் அதிகாலையிலேயே சிறகுதட்டி  கூவுகிறதாம் இந்த கோழி.
அய்யாவின் வார்த்தைகள் இங்கு நிறைவேறி இருப்பதை காணுங்கள். 
நன்றி:ayyasivachandran.com

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter