வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon அயோத்தியா பட்டினம் தான் அழியுதப்பா என்மகனே!



             அய்யா வழி அன்பர்கள் இந்த தலைப்பை பார்த்த உடனேயே புரிந்து கொண்டிருப்பார்கள் ,பிறரும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.ஆம் அன்பர்களே இந்த வசனம் இன்று  தற்போதைய அயோத்தியின் நிலைமையை பார்த்து விட்டு யாரோ ஒருவர் சொன்ன வசனம் அல்ல. அப்படி சொல்வது ஒன்றும் பெரிய விசயமும் அல்ல.ஆனால் இன்றைய இந்த அயோத்தியின் நிலைமையை கிட்டத்தட்ட 190 ஆண்டுகளுக்கு முன்னரே அய்யா வைகுண்டர் தன் அருள் நூலில் கூறியிருக்கிறார் என்பது மிக பெரிய விசயமாகும் . 
  "இன்னும் ஒருகாண்டம் எடுத்தெழுதி பாடுகின்றேன்
 அயோத்தியா பட்டணந்தான் அழியுதப்பா என்மகனே"
என்ற இந்த வரிகள் வைகுண்டர் தந்தவைகளாகும். 
           இந்த அயோத்தியில் என்ன பிரச்சினை நடக்கிறது,எங்கிருந்து வந்தது இந்த அயோத்தி என்று பார்ப்போம்.அயோத்தி என்பது ராமன் பிறந்த இடம் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும். 
             பிரம்மா தனது புத்திரனை (ஸ்வாயம்புவமனு) அழைத்துக் கொண்டு, இருவரும் வைகுண்டம் சென்றடைந்தார்கள். அங்கு ஸ்ரீமந் நாராயணனை தரிசித்து வணங்கினார்கள். அவரிடம் விஷயம் சம்பந்தமாக அவசியமான அறிவுரைகள் கூறி, வழிகாட்ட வேண்டினர். ஸ்ரீமந் நாராயணன் அவர்களின் பிரார்த்தனையைக் கேட்டு அதற்காக வைகுண்டத்தின் மத்தியிலிருந்து (அயோத்தி) என்னும் ஒரு சிறு பாகத்தை எடுத்து, பிரம்மா மூலமாக பிரும்மாவின் முதல் குமாரன் மனுச் சக்கரவர்த்திக்குப் பரிசாக அளித்தார். ஸ்ரீமந் நாராயணனின் அறிவுரைப்படி, ஸ்வாயம்புவமனு அதை எடுத்துக் கொண்டு வந்து, பூலோகத்தில் புனிதமான ஸரயூ நதியின் தென்கரையில்  ஸ்தாபிதம் செய்தார். தோற்றுவாய் அயோத்யா (கோசல தேசம்) மனித குல நாகரீகத்தின் (ஆதி ஸ்ரோத்) ஆதிமூலமாக விளங்கியது. என்பது இந்துகளின் பார்வையில் அயோத்தின் வரலாறு ஆகும்.
       இந்த அயோத்தியில் சூரிய குலம் தோன்றி அக்குலத்தில் நாராயணர் ஸ்ரீ ராமனாக பிறந்து உத்தமனாக வாழ்ந்து ராவண வதம் செய்தார் என்பது வரலாறு.
           மேலும் 1528ஆம் ஆண்டு மிர் பக்கி என்னும் முகலாய படைத்தலைவனால் கட்டப்பட்ட பாபர் மசூதி இருந்த பகுதி இந்த அயோத்தி என்பது முஸ்லிம்  மக்களின் நம்பிக்கையாகும்.
                           இந்த இருவரின் நம்பிக்கை மற்றும் மத வெறியே இன்றைய அயோத்தியின் பிரச்சினை. இந்த பிரச்சினையில் பல்லாயிர கணக்கில் உயிர்கள் பறிபோனது தான் பரிதாப விஷயம்.
இதையே வைகுண்டர் ,
"நான்பெரிது நீ பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று
வான்பெரிது என்று அறியாமல் மாழ்வார் வீன்வேதமுல்லோர்"  
இந்த சொத்து சண்டை இன்று நேற்றல்ல 1855ஆம் ஆண்டு துவங்கி இன்றுவரை அங்கு பல மதக்கலவரங்களாக வெடித்த வண்ணம் உள்ளது. சரி! நீதிமன்றத்தின் மூலமாவது இதற்கு ஒரு தீர்வு பிறக்கும் என காத்திருந்தால்...’புதிய’நீதியால் மறுபடியும் கலவரங்கள் உண்டாக வாய்ப்பிருப்பதாக நீதிபதிகளும் பீதி கொள்வதால் நீதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்படி நீதிமன்றங்களே வாய்தா வாங்கும் இந்த வழக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விட பழமையானது. ஆம்! இதன் முதல் வழக்கு 1885 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் மகந்த் ரகுபீர் தாஸ் என்பவரால் அப்பகுதியில் கோயில் கட்ட அனுமதி கேட்டு தொடரப்பட்டது.மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட அந்த வழக்கு அப்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

1949ஆம் ஆண்டு உள்ளூர் சாது ஒருவனின் கைங்கர்யத்தால் அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டு ஒரு பெரும்கலவரம் நடந்தேறி அதற்கு நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளது. அதை தொடர்ந்து அப்பகுதியின் நுழைவாயிலை அடைத்து வழிபாட்டு அனுமதியை மறுத்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகந் ராமசந்திர தாஸ்பரமஹன்ஸ் என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

12ஆண்டுகள் கழித்து 1961ஆம் ஆண்டு உத்திரபிரதேச மத்திய சன்னி வக்பு வாரியத்தின் சார்பாக முகமது அன்சாரி என்பவரால் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் 1996ஆம் இந்த நான்கு வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
        அயோத்யா நிலம் தொடர்பான வழக்கில் தற்போது நீதிபதிகள் தீர்ப்பை வாசித்து விட்டனர் . சர்ச்சைக்குள்ளான நிலத்தை 3 பாகங்களாக பிரித்து வக்ப் போர்ட், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகியோருக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலைமை 3 மாதங்களுக்கு தொடர வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
                 பல்வேறு பலிகளை கண்ட இப்பிரச்சினை இத்தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வருமா அல்லது இன்னும் பிரச்சினை கிழம்புமா என்பது கேள்விக்குறி தான்.இதைத்தானே வைகுண்டர் அன்றே "அயோத்தியா பட்டினந்தான்  அழியுதப்பா என்மகனே!" என்கிறார்.
                                                                    அய்யா உண்டு 

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter