வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon வைகுண்டரை பற்றி பைபிள் என்ன கூறுகிறது?

அன்பான அய்யா வழி பிள்ளைகளுக்கு அன்பான வணக்கங்கள்,அய்யாவின் அருள் எங்கும் நிறைந்து தருமம் மலரட்டும் அய்யா உண்டு! அன்பர்களே இந்த பதிப்பில் அய்யா வைகுண்டரின் வருகைப் பற்றி கிருஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் என்ன கூறுகிறது என பார்ப்போம்.

நமது அய்யா வழியில்
அனைத்து இறைகளும் ஒன்றுதான் நானே விஷ்ணுவாகவும்,சிவமாகவு
ம்,பிரம்மமாகவும்.இயேசுவாகவும்,அல்லாவாகவும் இருக்கின்றேன் என்ற கருத்தை உணர்த்துகிறார் வைகுண்டர் .அப்படியெனில் கிருஸ்தவர்களின் விவிலியத்தில் அய்யா வைகுண்டரை பற்றி எங்கேயாவது கூறப் பட்டு உள்ளதா எனபார்த்த போது,அய்யா எனக்கு காட்டிய சில வரிகள் அவரின் வார்த்தைகள் உண்மை என்பதை எனக்கு தெளிவாக உணர்த்தியது.
ஆம் அன்பர்களே அவ்வரிகள் நம் அய்யாவின் அவதார வருகையை தெளிவாக உணர்த்துகின்றன,அவைகள் அய்யாவின் குணங்களையும்,அவர் விஞ்சை பெறுவதையும் அவரின் உபதேசங்கள் பற்றியும் கூறுகின்றன.இயேசுவின் இரண்டாம் வரு
கையை நோக்கி காத்திருக்கும் கிருஸ்தவர்கள் ,அவரின் இரண்டாம் வருகையின் போது உலகில் பல அக்கிரமங்கள் ,அநியாயங்கள் நடக்கும் என்கின்றனர்.விவிலியத்தில் இயேசு கிருஸ்துவே தன் இரண்டாம் வருகையை கூறுகின்றார்.

யோவான் அதிகாரம் 16

"நான் உங்களுக்கு உண்மையை சொல்லுகிறேன்;நான் போகிறது உங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்;நான் போகாதிருந்தால்,தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்;நான் போவேனாகில் அவரை உங்களிடத்து அனுப்புவேன்."

இதில் தான் போகப் போவதாகவும் போனபின் இந்த கலி உலகில் மக்கள் படும் கஷ்டங்களை கண்டு மனம் வருந்தி ,அவர்களை தேற்ற ஒருவர் வரயிருக்கிறார் ,நான் சென்றால் அவரை அனுப்புவேன் என்று கூறுகிறார்.இங்கு கலியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பட்ட துன்பங்களையும் ,அதனை கண்டு வருந்திய வைகுண்டர் அவர்களின் துயரங்களை கண்டு அவர்களை தேற்றியதை நினைவில் கொள்க.

"அவர் வந்து பாவத்தைக் குறித்தும் ,நீதியைக் குறித்தும்,நியாயத்தீர்ப்பைக் குறித்தும்,உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்"

"இன்னும் அநேககாரியங்களைக் நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது,அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்க மாட்டீர்கள்"


இவ்வரிகளில் வரப்போகிறவர் பாவத்தின் தன்மைகளைக் குறித்தும்,அதன் விளைவுகள் குறித்தும்,நீதியைக் குறித்தும் ,வரவிருக்கும் நடுத்தீர்ப்பைக் குறித்தும் உங்களுக்கு கூறுவார்.மேலும் உங்களைளிடம் உள்ள குறைகளை குறித்து கண்டிப்பார் என்கிறது.
மேலும் நான் இன்னும் நிறைய விஷயங்கள் பற்றி கூறவேண்டும் ஆனால் அதை நீங்கள் இப்பொழுது தாங்க மாட்டீர்கள் .எனவே அவைகள் பற்றி வரப்போகிறவர் கூறுவார் என்று கிருஸ்து கூறுகின்றார்.

இங்கு வைகுண்டர் தன் மக்களிடத்து கூறிய உபதேசங்களும்,அறிவுரைகளும்,எச்சரிக்கைகளும் மேற்கூரியதாகவே அமைவதை காணுங்கள்.மேலும் வைகுண்டர் தன் மக்களிடம் மண்டிக் கிடந்த குறைகளையும்,மூடநம்பிக்கைகளையும் குறித்து கண்டித்தார்.வைகுண்டர் தன் சீடர்களிடம் பாவத்தின் தன்மைகளைக் குறித்தும்,அதன் விளைவுகள் குறித்தும்,நீதியைக் குறித்தும் ,வரவிருக்கும் நடுத்தீர்ப்பைக் குறித்தும் கூறினார் என்பது அனைவரும் அறிந்ததே.

"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது ,சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;அவர் சுயமாய் பேசாமல்,தான் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி,வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்"

"அவர் என்னுடையதிலிருந்து எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமை படுத்துவார்"
"பிதாவினுடயவைகள் யாவும் என்னுடையவைகள்;அதினாலே என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்"

என்ற வரிகளில் "சத்திய ஆவி " அதாவது சத்திய ஆத்மாவாகிய அவர் (வைகுண்டர்) வந்து சத்திய வழிகளில் உங்களை நடத்துவார். அவர் தன் சொந்த கருத்துக்களை உங்களுக்கு சொல்லாமல் தான் கேள்வி பட்ட விசயங்களை உங்களுக்கு கூறுவார்.இதன் படியே வைகுண்டர் தான் சொந்த கருத்துக்களை கூறாமல் தன் தந்தையாகிய விஷ்ணுவிடம் தான் கேட்ட விஞ்சைகளை பற்றி மக்களிடம் கூறினார். இதைத்தான் விவிலியமும் "அவர் என்னுடையதிலிருந்து எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமை படுத்துவார்"
"பிதாவினுடயவைகள் யாவும் என்னுடையவைகள்;அதினாலே என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்" என்று கூறுகிறது.

மேலும் அகிலமும்
"மீளா சிலுவையிலே முள்ளால் அடிகள்பட்டு
மறித்து பிறந்தது போல் மாயக் குருநாதன்"
என்ற வரியில் வைகுண்டர் கிருஸ்துவின் மறுவருகை என்பதையே குறிக்கிறது.
அப்படியெனில் விவிலியத்தில் கூறப்படும் பிதாவும்,விஷ்ணுவும் ஒருவரா? என்ற கேள்வி எழும்.அய்யாவின் அகிலத்தையும்,பண்டையபுரானங்களையும் ஆராயும் போது இருவரும் ஒருவரே என்பது விளங்கும்.விஷ்ணு,பிதா என்பதெல்லாம் மனிதனால் வைக்கப்பட்ட நாமங்களாகும்.இது பற்றி என்னுடைய அடுத்த பதிப்பில் காண்போம்.
அய்யா உண்டு!

4 comments:

Senthil said...

Very good analysis. Needs more research work for deriving a concrete proof. Good attempt. All the Best

ANBUKODI said...

நன்றி senthil அய்யா உண்டு

Parthibanmtech said...

திவ்ய வாசகனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம்

22 அதிகாரம்

4. அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்..

this was in bible........

http://www.tamil-bible.com/lookup.php?Book=Revelation&Chapter=22&Verse=&Kjv=0

http://www.youtube.com/watch?v=QXF38O9g8xo&feature=related

see this links....
Parthiban...

Santonkulam said...

Very nice Explanation. Thank You

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter