வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon உச்சிப்படிப்பு

சிவசிவா அரிகுரு சிவசிவா 
சிவசிவா ஆதிகுரு சிவசிவா 
மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம் 
அல்லா இல்லல்லா இறைசூல் மகிழல்லா சிவசிவா சிவமண்டலம் 
அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம்


நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம் 
பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவமண்டலம் 
திருவுக்கும் சடைகுறு சிவசிவா சிவமண்டலம் 
செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம் 


சந்நியாசி குரு சிவசிவா சிவமண்டலம் 
மகாகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம் 
அரி சங்காரகுரு சிவசிவா சிவமண்டலம் 
மகாகுரு  சிவசிவா சிவகுருமண்டலம் 


மண்டலம் குருமண்டலம் மாயன் குருமண்டலம் 
குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருகுண்டலம்  
சங்கநிதி குண்டலம் தரணி குருகுண்டலம் 
தரணியது குண்டலம் தரணி புகழ்  குண்டலம் 


சிவசிவா எங்கும் நிறைந்தவர் ஏகமயமாய்  நின்றவர் சிவசிவா 
ஏகக்  குருவாகப்  படைத்து  அது  நிறைந்தவர்  சிவசிவா 
படைத்து  நிறைந்தவர்  பாலன்  வடிவு  கொண்டவர் 
பங்காளர் பங்காளர் பாருலோகம்  அளந்தவர் 


அளந்தவர் திருமால் ஆதிகுரு சந்நியாசி 
சிவசிவா சந்நியாசி செந்தில்வேல் வடிவுமவர் 
செந்தில்வேல் சந்நியாசி செந்தில் வேலவர் 
வடிவும் புகழ்படைத்தவர் மாய நிறமானவர் அவர் சிவசிவா 


கங்கை கண்ணானவர் காரணம் நிறைந்தவர் 
நிறைந்து நிறைந்தவர் ஏகமெல்லாம் நிறைந்தவர் 
எங்கும் நிறைந்தவர் ஏகமாய் நின்றவர் 
மண்டலம் புகழ்படைத்த மாயன்குரு சந்நியாசி 


சிவசிவா தந்தேனன்னாய் தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய்      
சிவசிவா  த....ம்.....அ.....சி.....அரி நன்றாகக் குருவே துணை 
சிவசிவா தந்தேனன்னாய் தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய்


சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய் தன்னானாய்  
சிவசிவா தானானோம் தானானோம் தானானோம் தானானோம்  
சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம்  
சிவசிவா தந்தேனனம் தந்தேனனம்  தந்தேனனம்  தந்தேனனம் 


மகாலிங்கம்,சிவலிங்கம்,
குருலிங்கம்,திருலிங்கம்,
ஏகாலிங்கம்,ஏக்காலிங்கம்,
அரிலிங்கம்,லிங்காலிங்கம்,
சொக்காலிங்கம்,சுகாலிங்கம்,
ஆதிலிங்கம்,அருள்லிங்கம்,
        அடங்காலிங்கம்.





9 comments:

. said...

Could you please explain about UCHI PADIPPU...?

ANBUKODI said...

friend i will post the explaination of utchipadippu soon

Unknown said...

Could u record this and Upload in Website?

Sarath selvi said...

Thankyou for posting ayya uchipadippu... Could you please post the pdf format of uchi padippu with downloading facility.

N-Shrawz said...

அல்லா இல்லல்லா இறைசூல் மகிழல்லா சிவசி Allah is nothing but a good luck

Anonymous said...

Ayya undu

Rohind said...

அய்யா உண்டு 🙏🏻 My humble request is to translate uchipadipu in english too

Rohind said...

Translate in the sense just to write it in tanglish...like.....Siva siva ariguru siva siva

Anonymous said...

Pdf

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter