வருகைக்கு நன்றி!
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
Showing posts with label அகிலம். Show all posts
Showing posts with label அகிலம். Show all posts
சம்பூரண தேவன் மற்றும் பரதேவதையின் பிறப்பு
சம்பூரண தேவன் மற்றும் பரதேவதையின் பிறப்பு
சம்பூரண தேவனும் பரதேவதையும் அகிலத்திரட்டில் முக்கிய இடம் வகின்றனர்.பகவான் விஷ்ணு ஏழுலோக தேவர்களையும் தன் அவதார நோக்கத்திற்காக கலியுகத்தில் படைக்க திட்டமிடுகின்றார். அதன்படி ஏழுலோகதேவர்களும் அதற்கு சம்மதித்து பிறக்கலாயினர் .ஆனால் சொர்க்கலோகத்தை சேர்ந்த சம்பூரண தேவன் எமலோகத்தை சேர்ந்த பரதேவதை என்ற பெண் மீது கொண்ட காதலால் பிறக்க மறுக்கிறான் .அவளையும் தன்னோடு சேர்த்து பிறக்க செய்ய வேண்டும் என்கிறான்.அதை கேட்ட விஷ்ணு எமகுலத்தை சேர்ந்த பெண்ணை மணக்க இருவரும் சேர்ந்து ஒரு தவம் செய்ய வேண்டும் எனவும் அத்தவதில் நீ நினைப்பவைஎல்லாம் கிட்டும் என்றும் கூறி அனுப்புகிறார். அதனை அகிலம்,
சம்பூரண தேவனின் மறுப்பு
"மூவருரை மாறாமல் மூர்க்கமுள்ள தேவரெல்லாம்
போகும் பொழுதில் பொன்னுலகத் தேவர்தன்னில்
தாவும்பெரிய வொரு சம்பூரணத் தேவன்
பரதேவதை யான பார்மறலி தன்னுகத்தில்
உரமான தேவியவள் உடைய மன்னனைநீக்கித்
தெய்வச்சம் பூரணனுஞ் சேர்ந்தவளோடே நடப்பாள்
மாயவளை மாய்கையினால் மாறியவன் பேசினனே
நான்பிறக்கப் போணுமென்றால் நண்ணுதலை என்னோடு
தான்பிறக்கச் சொல்லித் தாரம் போலாக்குவீரால்
நான்பிறக்கப் போவேன் நாரணரே யல்லாது
தான்பிறக்கப் போவதற்க்குச் சங்கடங்க லுண்டும்மையா"
நாராயணர் தவம் செய்ய சொல்லல்
"கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால்
வேளமொத்த தேவா மிகுந்ததவஞ் செய்திடுநீ
மேலாக வேணுமென்று மேல்லியரும்னல்தவசு
காலால் கனலேழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல்
தவசியிரு பெரும் தார்பரியமாக நின்று
சிவசுவசம் பெருக்கி சிறந்ததவம் செய்டிடச்சொல்
நின்ற தவத்தில் நிலையை நினைத்ததெல்லாம்
அன்றுங் களுக்கு அருளுவே நானுமேன்று
சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து"
என்றுரைக்கிறது.
இவ்வாறு தேவனும் ,தேவதையும் தவத்தில் நின்ற போது அதனை சோதிக்க விஷ்ணு,தன்னுடன் சிவன் மற்றும் இந்திரனை அழைத்து வந்தார்.அப்போது இந்திரன் தன் தலையில் விஷ்ணுவின் இரத்தின திருமுடியை அணிந்திருந்தான்.அதைக்கண்ட சம்பூரண தேவன் தன்னைமறந்து திருமுடியின் மீது ஆசைக் கொண்டு தன் தேவியிடம் கண்களால் பேசினான்."பெண்ணே நான் அந்த திருமுடியை அணிந்து சிம்மாசனத்தில் உன்னுடன் அமர்ந்து கன்னியர் பெற்ற சான்றோர்களை ஆட்சி செய்ய வேண்டும் என்றான்"இவ்வாறு மனம் தடுமாறிய சம்பூரண தேவனிடம் விஷ்ணு நீயும் ,பரதேவதையும் பூமியில் பிறந்து ,பரதேவதை தன் முதல் கணவனை பிரிந்து உன்னுடன் வந்து வாழ்வாள்,பின்னும் நீ சில காலம் முன்வினை பயனால் நோய்வாய்ப்பட்டு பின் உன்னுள் நீயே நானாகி தருமலோகம் ஆழ வைப்பேன் என்று கூறி இருவரையும் பூமியில் பிறவிசெய்தனர். சம்பூரண தேவனின் ஆசை
"கண்டு சம்பூரணனுங் கைமறந்து நிஷ்டையது
பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான்
மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில்
தானாகிய மான சங்குசரத் தங்கமுடி
என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு
தென்தலைவ ரத்தினச் சிங்கா சனமீதில்
இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப்
பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை
எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள்
வல்லான நீத வையகத்தை ஆண்டிருந்தால்"
பின் சம்பூரண தேவன் பூமியில் முத்துக்குட்டி என்னும் பெயரோடு தற்போதைய சாமிதோப்பு ஊரில் பிறக்கின்றார்.பரதேவதையும் அவ்வாறே எம வழியில் பிறந்து முன்வினையால் முதல் கணவனுக்கு ஊழியம் செய்து பின் முத்துக்குட்டியை மணக்கின்றாள்.அவளின் பூலோகப் பெயர் திருமாலம்மாள் ஆகும் .
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சம்பூரணதேவனை சோதிக்க ஏன் இந்திரன் திருமுடி சூடி,விஷ்ணுவுடன் வர வேண்டும்,சம்பூரண தேவனை முடியின் மீது இச்சைக் கொள்ள வைக்க வேண்டும். என்னென்றால் தவத்தில் நினைப்பதை தருவதாக விஷ்ணு கூறினார். எனவே இவ்வாறு தேவனை நினைக்க செய்கின்றார்.ஏன்னெனில் கலியை மூவராலும நேரடியாக நின்று அழிக்க முடியாது எனவே விஷ்ணு கலியழிக்க எடுத்து கொண்ட ஆயுதம் தான் சம்பூரண தேவன்.இதனை அகிலம்,
"மாமுனியே நீகேளு வஞ்சக நீசக்கலியை
நான்முனின்று கொல்ல ஞாயமில்லை கேட்டிடுநீ"
"முனின்று கொல்ல மூவரா லுமரிது
பின்னின் றவனவனால் பேசாதே மாழவைப்பேன் "
என்கிறது.
சான்றோர் பிறப்பு
அன்பான அன்புக்கொடி மக்களே அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டின் சிறப்புகளையும் அதன் சில பகுதிகளையும் அர்த்தங்களையும் பற்றி காண்போம்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூல் அய்யாவழியின் புனித நூல்கள் ஆகும். இவற்றுள் அகிலத்திரட்டு அம்மானை முதன்மை புனித நூலாகவும், அருள் நூல் இரண்டாம் நிலை புனித நூலாகவும் கருதப்படுகிறது. அய்யாவழி புராணத்தின் அடிப்படையில், உலகம் உண்டானது முதல் தற்போது நடப்பவைகளும், இனி நடக்கப்போவதுமான முக்கால சம்பவங்களை, நாராயணர் லட்சுமி தேவியிடம் கூறுவதை அய்யாவின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் கேட்டு, இங்கே அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதாக அகிலத்திரட்டு அமைந்திருக்கிறது. இது கலியை அழிக்க இறைவன் உலகில் எடுத்த அவதாரத்தை மையப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அகிலத்திரட்டின் முதற்பகுதியான முந்திய யுகங்களைப்பற்றி கூறும் பகுதி இந்து புராணங்களுடன் நிறைய சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறது. மேலும் பல கடவுளர்களையும், கோட்பாடுகளையும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் பெருவாரியானவைகளை திருத்தியமைத்திருக்கிறது. அய்யாவழியின் யுகங்களும், அவதாரங்களும் எண்ணிக்கையில் இந்து சமயத்திலிருந்து மாறுபடுகிறது. அய்யாவழியில் கலி உருவகப்படுத்தப்படுகிறது.அகிலத்தின் இரண்டாம் பகுதி, கலி யுகத்தில் கலியை அழிக்க இறைவன் அவதரித்த செய்தியை உலகுக்கு கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஏகாபரன், வைகுண்டராக அவதரிக்கிறார். வைகுண்ட அவதாரம் மிகவும் பிந்திய காலகட்டத்தில் நிகழ்ந்திருப்பதாததால் அவர் வரலாற்றில் வெகுவாக அறியப்படுகிறார். அவர் நிகழ்த்திய பெரும்பாலான அவதார இகனைகள் வரலாற்றில் இடம்பெறுகின்றன.
சான்றோர் பிறப்பு பற்றி காண்போம்.
"அரிகோண மாமலையில் அயோதவமுர்த கெங்கை
பரிகோண மாமலையின் பகுத்துரைக்க கூடாது "
அரிகோண மாமலை எனும் சிறப்பு மிக்க இடத்தில்தான் நம் சான்றோரின் பிறப்பு நிகழ்கிறது.மேற்கண்ட வரிகள் அம்மலையின் பெருமைகளை சொல்ல சொல்ல திகையாது என்பதை உணர்த்துகிறது.
"அவ்வனத்திலுள்ள அமுர்த கெங்கையானதிலே
குளித்து விளையாடிக் கூபந் தனிலிறங்கி
களித்து மகிழ்ந்து கையில்நீர் தான்திரட்டி
ஈசருட முடியில் இட்டுக்கரங் குவித்து
வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கு மாமடவார் "
மேலுள்ள வரிகள் சான்றோரின் தாய்மாரான சப்த கன்னியரை பற்றி கூறுகின்றது.சப்த மாதர்கள் அரிகோண மாமலையில் உள்ள அமிர்த கெங்கையில் நீர் திரட்டி ஈசனுடைய முடியில் இட்டு சேவிக்கும் பணி செய்தனர்.
"எழு மடவும் எண்ணெண்ணு மிப்படியே
நாளு முறையாய் நடத்திவரும் நாளையிலே
மாலறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசியென"
"பலநாளு மீசுரர்க்குப் பாவையரே நீங்களுந்தான்
செலந்திரட்டி மேன்முடியில் செய்தீ ரனுஷ்டனம்
இனியெனக்கு நீங்கள் எல்லோரும் மிக்கவந்து
கணிநீர்தனையு மெந்தலையில் கவிழுமென்றா ரெம்பெருமாள் "
இவ்வாறாக விஷ்ணுவானவர் கன்னியரை கேட்க மறுப்பு தெரிவித்த கன்னியர் ஏளனமாய் பேச ,விஷ்ணு பெருகுளிர் காற்றை வீச செய்தார்.அதை தாங்க முடியாத கன்னியர்கள் நெருப்பாய் நின்ற விஷ்ணுவை அணைத்து குளிர்காய தன் கற்பிழந்து ஏழு குழந்தைகளை பெற்றனர்.அவர்களே தெய்வகுல சான்றோர்கள் ஆவர்.இவ்வாறு பிள்ளைகளை ஈன்ற கன்னியர்கள் கற்பிழந்த காரணத்தால் கயிலையை மறந்து வனத்தில் தவமிருக்க சென்றனர்.
"நல்லதென மாமுனிவன் நளினமுடன் மகிழ்ந்து
செல்ல மகவான சிறுவர் தனைவளர்க்க
மாகாளி என்ற வடப் பத்திரகாளி
ஒகாளி என்ற உயர்ந்த பிலககாரி "
பின் வைகுண்டர் தன் தங்கையான வட பத்திரகாளியானவளை வரவழைத்து ஏழு பிள்ளைகளை வளர்க்க சொல்கிறார்.அப்பிள்ளைகளை வைத்து எதிரியான தக்கனை காளி அளிக்கின்றாள்.மேலும் பல தொழில்களையும் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கின்றாள் .
கலியனின் பிறப்பு
கலியனின் பிறப்பு பற்றிக் காண்போம்,
"முன்பிறந்த குறோணி உடலாறு துண்டதிலே
தன்பிறவி யோடறு தான்பிறந்தான் சூத்திரமாய்
மண் தானுடம்பு வந்துதித் தோன்றனக்கு
விண் தானுடம்பு விலாசக் குருவோடு
சலந்தா னுடம்புக்கு உறுதி தைரியங்கள்
வலந்தா னிளகி வன்னியோ டுங்கூடி
கலந்து திரண்ட கட்டைமுண்ட மானதுக்கு
பிலந்தூக்கு வாயு பிராணன் காணம்மனை"
இவ்வாறாக அகிலத்தில் நாராயணர் கலிநீசனின் தன்மை பற்றிக் கூறுகின்றார்.முதலாம் யுகமான நீடிய யுகத்தில் பிறந்த குறோணியின் கடைசி துண்டான ஆறாவது துண்டு தானாகவே பூமியில் இருந்து வெடித்து பிறந்து கலியனாக வருகிறது என்று அகிலம் கூறுகின்றது. இவ்வாறு பிறந்த கலியனுக்கு மண்தான் உடம்பு,சலத்தை போன்ற குருதிதான் உடம்புக்கு பலமாகும்.இந்த கலியனுக்கு உயிர் வாயு ஆகும்.ஒன்பது ஓட்டைகளை கொண்ட உடம்பை உடையவனின் கூடானது காற்று அடைத்த பாண்டமாகும்,காற்று வெளியேறி விட்டால் விறகுக்கும் ஆகாது அவனின் உடம்பு.இதை அகிலம் பின்வருமாறு கூறுகின்றது,
"ஆர்க்க எலும்பு அடைக்கும் நரம்புடனே
மூர்க்க தசையும் உதிரப் புனலுடம்பும்
மண் தண்ணீரோடு வகைக்காக பாண்டமிது "
"ஓட்டை மடத்துக்கு ஒன்பது கொந்துடனே
வீட்டை பிரித்தால் விறகுக்கு மாகாது"
இவ்வாறு பிறந்த நீசன் தலை பூமியில் புதைந்து எழ முடியாமல் கிடந்தவனை கவையை கொண்டு பூமிதனில் எறிந்தனர்.பின்னர் கலியன் சிவனை சந்தித்து அவரின் சக்திகளின் மீது சந்தேகம் கொள்கிறான் ,அவனிடம் நந்தி தேவர் வரம் கேட்க சொல்கிறார் ,கலியன் பல்வேறு வரங்களை கேட்கிறான் .முதலில் அவன் சக்தி தேவியின் அழகில் மயங்கி அவளை போல பெண்ணொருத்தியை கேட்கிறான் .உடனே அவனது விலா எலும்பை எடுத்து கலிச்சியை படைக்கிறார்.அதன் பின் கலியன் பல வகையான வரங்களை சிவனிடம் கேட்டு பெருகின்றான்.இவ்வாறு கலியன் பெரும் வரங்கள் அனைத்தும் உலக மக்களையும் , உலகையும் சீர்குலைக்க தக்கதாகவே உள்ளது.
கலியன் கேட்ட வரங்கள்
- மாயவனாரின் திருமுடி, சக்கரம் மற்றும் இரதம்.
- சிவனுடைய வெண்ணீறு
- அந்தணரின் பிறப்பு
- சக்திக்குரிய வலக்கூறு
- சிவனின் மூல மந்திரம்
- சக்தி மூல மந்திரம்
- தவத்துக்குரிய மூல மந்திரம்
- பிரம்ம தேவரின் மூல மந்திரம்
- நாராயணரின் மூல மந்திரம்
- இலட்சுமியின் மூல மந்திரம்
- தெய்வ சக்திகளின் மூல மந்திரம்
- காலனின் மூல மந்திரம்
- காமாட்சி மூல மந்திரம்
- கன்னி சரஸ்வதி மூல மந்திரம்
- காளி தன் மூல மந்திரம்
- கணபதியின் மூல மந்திரம்
- சுப்பிரமணியரின் மூல மந்திரம்
- கிங்கிலியர் தன் மூல மந்திரம்
- ஆயிரத்து எட்டு அண்டத்துக்குரிய மூல மந்திரம்
- கூடு விட்டு கூடு பாயிம் வித்தை
- நாட்டை அழித்து நகரில் கொள்ளை அடித்தல்
- உலகம் அனைத்தையும் தூங்க வைக்கும் தந்திரம்
- அயர்த்தி மோகினியின் கரு (உற்பத்தி விதி)
- ஆவடக்கு மோகினி உருவாக்கும் வித்தை
- அழைக்க வெகு மோகினியை கட்டுப்படுத்தும் இரகசியம்
- ஆண்களையும் பெண்களையும் பிரிக்கும் தந்திரம்
- கோள்களின் செயல்பாடுகளை பயன்படுத்தி குடிகெடுக்கும் தந்திரம்
- உலகம் அனைத்தும் இயங்காவண்ணம் ஏகம் தனை ஸ்தம்பிக்கச்செய்யும் வலிமை
- மந்திர வித்தைகள் மற்றும் அதன் கரு
- பூசை விதிமுறைகள்
- புவனச்சக்கரத்தின் இயக்க கட்டுப்பாடு
- தீட்சை விதிமுறைகள் மற்றும் சிவ விதி
- நீர் மற்றும் கனல் ஆகியவற்றின் மேல் மிதக்கும் வித்தைகள்
- கலையை ஆட்சி செய்யும் வித்தை
- மிருகங்களை கட்டுப்படுத்தி வேலை வாங்கும் வித்தை
- வாதைகளை கட்டுப்படுத்தும் திறமை
- அட்ட-கர்மங்களிடத்தும் ஆதிக்கம் செலுத்தும் தன்மை
- மொட்டைக் குறளியை ஏவல் செய்யப் பணிக்கும் உரிமை
- மந்திரஜாலம், இந்திரஜாலம் மற்றும் மாய்மாலத் தந்திரம்
- தனக்கு இடையூறு செய்யும் கோள்களை அறிய உதவும் குளிகை
- வரும் நோய்களை தீர்க்க வைத்திய சாஸ்திரம்
- தந்திரத்துக்கான சாஸ்திர வகைகள்
- சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரின் வடிவம்
- தனது முற்பிறப்பை அறியும் அறிவு
- தேவர்களின் பிறப்பு இரகசியம்
- பறக்கும் குளிகை
- சிவனை அழைக்கும் குளிகை
- அனைத்தையும் கண்காணாமல் மறைக்கும் குளிகை
- திருமாலை அழைக்கும் குளிகை
- மாயாஜாலம் செய்யும் குளிகை
- சக்தியை வரவளைக்கும் குளிகை
- வேதங்களை வரவளைக்கும் குளிகை
- காளிதனை வேலைவாங்கும் குளிகை
- கூளிப்பேய் கணங்களை அழைத்து ஏவல் செய்யப் பணிக்கும் குளிகை
- தேவரையும் வானவரையும் வரவழைக்கும் குளிகை
- மூவரையும் அழைத்து வேடிக்கை காட்டும் குளிகை
- தனக்கு பழி செய்தவரை வெல்லும் குளிகை
- தலைவிதி முதலியவற்றை அறியப் பயன்படும் குளிகை
Subscribe to:
Posts (Atom)
இதை படித்தீர்களா?
உதவுங்கள்
அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அன்புக்கொடி மக்கள்
அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.
அய்யாவழி வலைதளங்கள்
எங்களை தொடர்பு கொள்ள.....
EMAIL ID:anbukodi.co.cc@gmail.com
Mobile:8754563500