வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon சம்பூரண தேவன் மற்றும் பரதேவதையின் பிறப்பு

"முனின்று கொல்ல மூவரா லுமரிதுபின்னின் றவனவனால் பேசாதே மாழவைப்பேன்"


             சம்பூரண தேவன் மற்றும்  பரதேவதையின் பிறப்பு  

            சம்பூரண தேவனும் பரதேவதையும் அகிலத்திரட்டில் முக்கிய இடம் வகின்றனர்.பகவான் விஷ்ணு ஏழுலோக  தேவர்களையும் தன் அவதார நோக்கத்திற்காக கலியுகத்தில் படைக்க திட்டமிடுகின்றார். அதன்படி ஏழுலோகதேவர்களும் அதற்கு சம்மதித்து பிறக்கலாயினர்  .ஆனால் சொர்க்கலோகத்தை சேர்ந்த சம்பூரண தேவன் எமலோகத்தை சேர்ந்த பரதேவதை என்ற பெண் மீது கொண்ட காதலால் பிறக்க மறுக்கிறான் .அவளையும் தன்னோடு சேர்த்து பிறக்க செய்ய வேண்டும் என்கிறான்.அதை கேட்ட விஷ்ணு எமகுலத்தை சேர்ந்த பெண்ணை மணக்க இருவரும் சேர்ந்து ஒரு தவம் செய்ய வேண்டும் எனவும் அத்தவதில் நீ நினைப்பவைஎல்லாம் கிட்டும் என்றும் கூறி அனுப்புகிறார். அதனை அகிலம்,
சம்பூரண தேவனின் மறுப்பு 
"மூவருரை மாறாமல் மூர்க்கமுள்ள தேவரெல்லாம்
போகும் பொழுதில் பொன்னுலகத்  தேவர்தன்னில்
தாவும்பெரிய வொரு சம்பூரணத் தேவன்
 பரதேவதை யான பார்மறலி  தன்னுகத்தில்
உரமான தேவியவள் உடைய மன்னனைநீக்கித்
தெய்வச்சம்  பூரணனுஞ் சேர்ந்தவளோடே நடப்பாள்
மாயவளை மாய்கையினால் மாறியவன் பேசினனே
நான்பிறக்கப் போணுமென்றால்  நண்ணுதலை என்னோடு
தான்பிறக்கச்  சொல்லித் தாரம் போலாக்குவீரால் 
நான்பிறக்கப் போவேன் நாரணரே யல்லாது
தான்பிறக்கப்  போவதற்க்குச் சங்கடங்க  லுண்டும்மையா" 

நாராயணர் தவம் செய்ய சொல்லல்  
"கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால்
வேளமொத்த தேவா மிகுந்ததவஞ் செய்திடுநீ
மேலாக வேணுமென்று மேல்லியரும்னல்தவசு
காலால் கனலேழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல் 
தவசியிரு பெரும் தார்பரியமாக நின்று
சிவசுவசம் பெருக்கி சிறந்ததவம் செய்டிடச்சொல்
நின்ற தவத்தில் நிலையை நினைத்ததெல்லாம்
அன்றுங்  களுக்கு அருளுவே நானுமேன்று  
 சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து" 
என்றுரைக்கிறது.

இவ்வாறு தேவனும் ,தேவதையும் தவத்தில் நின்ற போது அதனை சோதிக்க விஷ்ணு,தன்னுடன் சிவன் மற்றும் இந்திரனை அழைத்து வந்தார்.அப்போது இந்திரன் தன் தலையில் விஷ்ணுவின் இரத்தின திருமுடியை அணிந்திருந்தான்.அதைக்கண்ட சம்பூரண தேவன் தன்னைமறந்து திருமுடியின் மீது ஆசைக் கொண்டு தன் தேவியிடம் கண்களால் பேசினான்."பெண்ணே நான் அந்த திருமுடியை அணிந்து சிம்மாசனத்தில் உன்னுடன் அமர்ந்து கன்னியர் பெற்ற சான்றோர்களை ஆட்சி செய்ய வேண்டும் என்றான்"இவ்வாறு மனம் தடுமாறிய சம்பூரண தேவனிடம் விஷ்ணு நீயும் ,பரதேவதையும் பூமியில் பிறந்து ,பரதேவதை  தன் முதல் கணவனை பிரிந்து உன்னுடன் வந்து வாழ்வாள்,பின்னும் நீ சில காலம் முன்வினை பயனால் நோய்வாய்ப்பட்டு  பின் உன்னுள் நீயே நானாகி தருமலோகம் ஆழ வைப்பேன் என்று கூறி இருவரையும் பூமியில் பிறவிசெய்தனர். 

சம்பூரண  தேவனின்  ஆசை 
"கண்டு சம்பூரணனுங் கைமறந்து நிஷ்டையது
பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான்
மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில்
 தானாகிய மான சங்குசரத் தங்கமுடி
என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு
தென்தலைவ ரத்தினச்  சிங்கா சனமீதில்
 இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப் 
பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை
எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள்
வல்லான நீத வையகத்தை ஆண்டிருந்தால்"
    
  பின் சம்பூரண தேவன் பூமியில் முத்துக்குட்டி என்னும் பெயரோடு தற்போதைய சாமிதோப்பு ஊரில் பிறக்கின்றார்.பரதேவதையும் அவ்வாறே எம வழியில் பிறந்து முன்வினையால் முதல் கணவனுக்கு ஊழியம் செய்து பின் முத்துக்குட்டியை மணக்கின்றாள்.அவளின் பூலோகப் பெயர் திருமாலம்மாள் ஆகும் .
              இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சம்பூரணதேவனை சோதிக்க ஏன் இந்திரன் திருமுடி சூடி,விஷ்ணுவுடன் வர வேண்டும்,சம்பூரண தேவனை முடியின் மீது இச்சைக் கொள்ள வைக்க வேண்டும். என்னென்றால் தவத்தில் நினைப்பதை தருவதாக விஷ்ணு கூறினார். எனவே இவ்வாறு தேவனை நினைக்க செய்கின்றார்.ஏன்னெனில்  கலியை மூவராலும நேரடியாக நின்று அழிக்க முடியாது எனவே விஷ்ணு கலியழிக்க எடுத்து கொண்ட ஆயுதம் தான் சம்பூரண தேவன்.இதனை அகிலம்,

"மாமுனியே நீகேளு வஞ்சக நீசக்கலியை
நான்முனின்று கொல்ல ஞாயமில்லை கேட்டிடுநீ"

"முனின்று கொல்ல மூவரா  லுமரிது
பின்னின் றவனவனால்  பேசாதே மாழவைப்பேன் "

 என்கிறது. 

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter