வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon கலியனின் பிறப்பு

கலியனின் பிறப்பு பற்றிக் காண்போம்,


       "முன்பிறந்த குறோணி உடலாறு துண்டதிலே 
        தன்பிறவி யோடறு தான்பிறந்தான் சூத்திரமாய்
        மண் தானுடம்பு வந்துதித் தோன்றனக்கு
        விண் தானுடம்பு விலாசக் குருவோடு
         சலந்தா  னுடம்புக்கு உறுதி தைரியங்கள்
         வலந்தா னிளகி வன்னியோ டுங்கூடி
         கலந்து திரண்ட கட்டைமுண்ட மானதுக்கு
         பிலந்தூக்கு வாயு பிராணன் காணம்மனை" 
இவ்வாறாக அகிலத்தில் நாராயணர் கலிநீசனின் தன்மை பற்றிக் கூறுகின்றார்.முதலாம் யுகமான நீடிய யுகத்தில் பிறந்த குறோணியின் கடைசி துண்டான ஆறாவது துண்டு தானாகவே பூமியில் இருந்து வெடித்து பிறந்து கலியனாக  வருகிறது என்று அகிலம் கூறுகின்றது. இவ்வாறு பிறந்த கலியனுக்கு மண்தான் உடம்பு,சலத்தை போன்ற குருதிதான் உடம்புக்கு பலமாகும்.இந்த கலியனுக்கு உயிர் வாயு ஆகும்.ஒன்பது ஓட்டைகளை கொண்ட உடம்பை உடையவனின்  கூடானது காற்று அடைத்த  பாண்டமாகும்,காற்று வெளியேறி விட்டால் விறகுக்கும் ஆகாது அவனின் உடம்பு.இதை அகிலம் பின்வருமாறு கூறுகின்றது, 
"ஆர்க்க எலும்பு அடைக்கும் நரம்புடனே
மூர்க்க தசையும் உதிரப் புனலுடம்பும்
மண் தண்ணீரோடு வகைக்காக பாண்டமிது " 
"ஓட்டை மடத்துக்கு ஒன்பது கொந்துடனே
வீட்டை பிரித்தால் விறகுக்கு மாகாது"
இவ்வாறு பிறந்த நீசன் தலை பூமியில் புதைந்து எழ முடியாமல் கிடந்தவனை கவையை கொண்டு பூமிதனில் எறிந்தனர்.பின்னர் கலியன் சிவனை சந்தித்து அவரின் சக்திகளின் மீது சந்தேகம் கொள்கிறான் ,அவனிடம் நந்தி தேவர் வரம் கேட்க சொல்கிறார் ,கலியன் பல்வேறு வரங்களை கேட்கிறான் .முதலில் அவன் சக்தி தேவியின் அழகில் மயங்கி அவளை போல பெண்ணொருத்தியை கேட்கிறான் .உடனே அவனது விலா எலும்பை எடுத்து கலிச்சியை படைக்கிறார்.அதன் பின் கலியன் பல வகையான வரங்களை சிவனிடம் கேட்டு பெருகின்றான்.இவ்வாறு கலியன் பெரும் வரங்கள் அனைத்தும் உலக மக்களையும் , உலகையும் சீர்குலைக்க தக்கதாகவே உள்ளது.
கலியன் கேட்ட வரங்கள்
  1. மாயவனாரின் திருமுடி, சக்கரம் மற்றும் இரதம். 
  2. சிவனுடைய வெண்ணீறு 
  3. அந்தணரின் பிறப்பு 
  4. சக்திக்குரிய வலக்கூறு 
  5. சிவனின் மூல மந்திரம் 
  6. சக்தி மூல மந்திரம் 
  7. தவத்துக்குரிய மூல மந்திரம் 
  8. பிரம்ம தேவரின் மூல மந்திரம் 
  9. நாராயணரின் மூல மந்திரம் 
  10. இலட்சுமியின் மூல மந்திரம் 
  11. தெய்வ சக்திகளின் மூல மந்திரம் 
  12. காலனின் மூல மந்திரம் 
  13. காமாட்சி மூல மந்திரம் 
  14. கன்னி சரஸ்வதி மூல மந்திரம் 
  15. காளி தன் மூல மந்திரம் 
  16. கணபதியின் மூல மந்திரம் 
  17. சுப்பிரமணியரின் மூல மந்திரம் 
  18. கிங்கிலியர் தன் மூல மந்திரம் 
  19. ஆயிரத்து எட்டு அண்டத்துக்குரிய மூல மந்திரம் 
  20. கூடு விட்டு கூடு பாயிம் வித்தை 
  21. நாட்டை அழித்து நகரில் கொள்ளை அடித்தல் 
  22. உலகம் அனைத்தையும் தூங்க வைக்கும் தந்திரம் 
  23. அயர்த்தி மோகினியின் கரு (உற்பத்தி விதி) 
  24. ஆவடக்கு மோகினி உருவாக்கும் வித்தை 
  25. அழைக்க வெகு மோகினியை கட்டுப்படுத்தும் இரகசியம் 
  26. ஆண்களையும் பெண்களையும் பிரிக்கும் தந்திரம் 
  27. கோள்களின் செயல்பாடுகளை பயன்படுத்தி குடிகெடுக்கும் தந்திரம் 
  28. உலகம் அனைத்தும் இயங்காவண்ணம் ஏகம் தனை ஸ்தம்பிக்கச்செய்யும் வலிமை 
  29. மந்திர வித்தைகள் மற்றும் அதன் கரு 
  30. பூசை விதிமுறைகள் 
  31. புவனச்சக்கரத்தின் இயக்க கட்டுப்பாடு 
  32. தீட்சை விதிமுறைகள் மற்றும் சிவ விதி 
  33. நீர் மற்றும் கனல் ஆகியவற்றின் மேல் மிதக்கும் வித்தைகள் 
  34. கலையை ஆட்சி செய்யும் வித்தை 
  35. மிருகங்களை கட்டுப்படுத்தி வேலை வாங்கும் வித்தை 
  36. வாதைகளை கட்டுப்படுத்தும் திறமை 
  37. அட்ட-கர்மங்களிடத்தும் ஆதிக்கம் செலுத்தும் தன்மை 
  38. மொட்டைக் குறளியை ஏவல் செய்யப் பணிக்கும் உரிமை 
  39. மந்திரஜாலம், இந்திரஜாலம் மற்றும் மாய்மாலத் தந்திரம் 
  40. தனக்கு இடையூறு செய்யும் கோள்களை அறிய உதவும் குளிகை 
  41. வரும் நோய்களை தீர்க்க வைத்திய சாஸ்திரம் 
  42. தந்திரத்துக்கான சாஸ்திர வகைகள் 
  43. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரின் வடிவம் 
  44. தனது முற்பிறப்பை அறியும் அறிவு 
  45. தேவர்களின் பிறப்பு இரகசியம் 
  46. பறக்கும் குளிகை 
  47. சிவனை அழைக்கும் குளிகை 
  48. அனைத்தையும் கண்காணாமல் மறைக்கும் குளிகை 
  49. திருமாலை அழைக்கும் குளிகை 
  50. மாயாஜாலம் செய்யும் குளிகை 
  51. சக்தியை வரவளைக்கும் குளிகை 
  52. வேதங்களை வரவளைக்கும் குளிகை 
  53. காளிதனை வேலைவாங்கும் குளிகை 
  54. கூளிப்பேய் கணங்களை அழைத்து ஏவல் செய்யப் பணிக்கும் குளிகை 
  55. தேவரையும் வானவரையும் வரவழைக்கும் குளிகை 
  56. மூவரையும் அழைத்து வேடிக்கை காட்டும் குளிகை 
  57. தனக்கு பழி செய்தவரை வெல்லும் குளிகை 
  58. தலைவிதி முதலியவற்றை அறியப் பயன்படும் குளிகை 
இவ்வாறு  பல்வேறு வரங்களை பெற்று வரும் கலியனிடம், திருமால் பண்டார வேடமிட்டு சூதாக பேசி பண்டாரத்தை அடிக்க மாட்டேன் என சத்தியம் பெறுகின்றார்.மீறி அடித்தால் வரங்கள் அனைத்தையும் இழந்து கொடு நரகம் போவேன் என சத்தியம் செய்கிறான் நீசன்.  மேலும் தனுடைய சக்கரத்தை காசாக மாற்றி கொடுக்கிறார்.

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter