வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon பெரும்பத்து ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கல்




     அன்பான அய்யா வழி மக்களுக்கு பணிவான வணக்கங்கள்,இங்கு  பெரும்பத்து ஸ்ரீமன் நாராயண சுவாமி அய்யா வைகுண்டர் நிழல் தாங்கல்
பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் காண்போம்.முதலில் ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிக் காண்போம்.

வருடந்தோறும் நடைபெறும் சிறப்புகள்:
                           
           புரட்டாசி மாதம் கொடி ஏறி நான்கு நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதம் திரு ஏடு வாசிப்பு இரண்டாவது வெள்ளி கிழமை தொடங்கி பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். மாதம் தோறும் கடைசி ஞாயிறு திருவிளக்கு பணிவிடை நடைபெறும். வாரத்தில் அனைத்து ஞாயிற்றுகிழமையும் மதியம் உச்சி படிப்பு நிறைவடைந்து பால் இனிமம் வழங்குதல் நடைபெறும்.மற்றும் இரவு அன்னதர்மம் நடைபெறும்.

திருவிழாவின் சிறப்புகள்:
                          வருடம்தோறும் புரட்டாசி முதல் வெள்ளி கிழமை கொடி ஏற்றத்துடன் திருவிழா இனிதே ஆரம்பமாகி திங்கள் இரவு 2 மணிக்கு(செவ்வாய் அதிகாலை 2 மணிக்கு) கொடிஇறக்கி தர்மம்(மலையாள கஞ்சி)கொடுத்து திருவிழா நிறைவுபெறும்.

வெள்ளி:
     காலை: கொடியேற்றம் முடிந்தவுடன் பால்,பாயாசம்,தேங்காய்,பழம் தர்மம் நடைபெறும்.
    
      மதியம்: உச்சிப்படிப்பு
      இரவு: உகப்படிப்பு முடிந்தவுடன் அன்னதானம்

சனி:
       காலை: உகப்படிப்பு
       மதியம்: உச்சிப்படிப்பு முடிந்தவுடன் பால்,பாயாசம்,தேங்காய்,பழம் தர்மம்            
                      நடைபெறும்.
       இரவு: உகப்படிப்பு முடிந்தவுடன் அன்னதானம்
                   இரவு 10மணிக்கு "அய்யாவழி இன்னிசை புலவன் செந்தில்குமார்"                    
                   அய்யாவழி கச்சேரி நடைபெறும்

ஞாயிறு:
     காலை: உகப்படிப்பு
     மதியம்:உச்ச்சிபடிப்பு முடிந்தவுடன் கடுகு பிச்சை கொடுக்கப்படும்
     இரவு: உகப்படிப்பு முடிந்தவுடன் அன்னதானம்

திங்கள்:
    காலை:4மணிக்கு அய்யா கருட வாகனத்தில்  ஊர் முழுவதும் பவனி வருதல்
    மதியம்:உச்சிப்படிப்பு
    இரவு:உகப்படிப்பு முடிந்தவுடன் அய்யா பள்ளி கணக்கர் மற்றும்        
            சிவாயி(அய்யாவின் காவல் தெய்வம்) மற்றும் அனுமான் கருட ஆழ்வார்     
           தெய்வங்களுடன் பெரும்பத்து ஊர் முழுவதும் வீடு வீடாக சென்று
           மக்களுக்கு அருள்பாளிப்பார்கள்.ஊர் முழுவதும் அய்யா மற்றும் காவல்      
           தெய்வங்கள் சுற்றி முடிந்தவுடன் பதியின் முன்புறத்தில் வேம்படியின் கீழ் 
          சாமியாட்டம் சிறிது நேரம் நடக்கும்.பின் சாமியாட்டம் முடிந்தவுடன்  
          செவ்வாய் அதிகாலை 2மணிக்கு கொடிஇறக்கி தர்மங்கள் கொடுத்து 
          திருவிழா இனிதே நிறைவுபெறும்.
  
ஏடு வாசிப்பு:
      வருடந்தோறும் சித்திரை மாதம் இரண்டாம் வெள்ளி முதல் திரு ஏடு வாசிப்பு 10நாட்கள் நடைபெறும்.10நாட்களும் அன்ன தர்மம் நடைபெறும். 8ஆம்  நாள் திருஏடு வாசிப்பில் அய்யா வைகுண்டர் ஏழு அம்மைமாரையும் கல்யாணம் செய்யும் நிகழ்ச்சி திருகல்யாணம் ஆகும்.
      10வது நாள் திருஏடு வாசிப்பில் அய்யா வைகுண்டர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறு.இரவு 10மணிக்கு அய்யா பூ வாகனத்தில் ஊர் முழுவதும் பவனி  வருவார்.

அற்புதங்கள்:
        பெரும்பத்து ஊரில் கருட வாகனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.மிகமிக நன்றாக இருக்கும்.புரட்டாசி மாதம் திருவிழாவில் போதும் கருடன் மூன்று முறை    
        கொடி மரத்தை 30நிமிடத்தில் சுற்றி வரும். திருவிழாவில் வீதி உலா வரும்போது அனுமான் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
        அய்யா வைகுண்டர் கேட்ட வரத்தை கொடுப்பார் என்று அனைவரும் நம்பி செல்லலாம்.


தகவல் தந்து உதவியவர்

பார்த்திபன்,
பெரும்பத்து

2 comments:

Unknown said...

Good.... but how you write tamil lang on blog.?.. please tell me ,

anbukodi said...

i have azahi software it is used to write in tamil.

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter