வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon இறைவன் நம்மிடம் எதை வேண்டுகிறான்? -3



       அன்பான அன்புகொடி மக்களுக்கு பணிவான வணக்கங்கள். இறைவன் நம்மிடம் எதை வேண்டுகிறான் என்ற தலைப்பின் கீழ் இதற்க்கு முன் சிலவற்றைப் பார்த்தோம்.இங்கு அதன் தொடர்ச்சியாக பொறுமையைப் பற்றிக் காண்போம்.
முந்தைப்  பதிவில் அன்பு பற்றியும் அதன் வலிமைகளைப்  பற்றியும் பார்த்தோம். இந்த பதிவில் உயர்ந்த குணங்களில் ஒன்றான 'பொறுமை' பற்றியும் அதனைப் பற்றி வைகுண்டர் கூறுவன பற்றியும்,அவர் எவ்வாறு அதனை கடைபிடித்தார் என்பது பற்றியும் சிறிது காண்போம். அய்யா உண்டு!
 பொறுமை:
"பொறுமை பெரிது புவியாழ்வாய் என்மகனே"
என்ற அகிலத்தின் வரி  பொறுமையின் வலிமையையும் அதனுடைய பலனையும் பற்றி தெளிவாக கூறுவதைக் காணலாம்.ஆம், பொறுமை என்னும் மிகப்பெரிய ஆயுதத்தை உடையவரே இந்த உலகத்தை ஆளப்போகிறார்கள் என்கிறார் அய்யாவைகுண்டர்.பொறுமை என்பது ஆயுதமா?ஆம் ஆயுதம்தான் மிகப்பெரிய ஆயுதம்.இந்த கேடுகட்ட கலியை அழித்து பொன்னான தர்மயுகத்தை உருவாக்கப் போகின்ற ஒரு ஆயுதம்தான் இந்த பொறுமை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.பொறுமையே உலக வரலாறுகளில் பல்வேறு வெற்றிகளைப் பெற்று கொடுத்துள்ளதை அனைவரும் அறிவோம்.அதனையே வைகுண்டரும் தம் மக்களுக்கு போதித்தார்.அதுமட்டுமல்லாது அதனையே கலிக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துகிறார்.

வைகுண்டரின் பொறுமை:

அத்தகைய சிறப்புமிக்க பொறுமையை வைகுண்டர் கலிக்கு எதிராக எவ்வாறு கையாண்டார் என்று காண்போம்.செந்தூர் கடலினுள் தான் பெற்ற விஞ்சைகளின் படி பொறுமையை மிகப்பெரிய முக்கியமான பண்புகளில் ஒன்றாக கடைபிடித்தார்.துளி அளவுகூட பொறுமையை இழக்காத வைகுண்டர் தன் பிள்ளைகளுக்கும் பொறுமையைப் போதித்தார்.

தன்னை பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கி கொடுமை படுத்திய கலி நீச மன்னனின் சோதனைகளை, தன் பொறுமை என்னும் ஆயுதத்தாலேயே வெற்றி கொண்டார். 

"அடித்த அடியையெல்லாம் ஆபரணமாலையென்று 
அகத்திலணிந்து கொண்டேன் சிவனே அய்யா"

"பகைவன் அடித்துவந்த அடியும் தங்கச்
சரப்பளியென்று எண்ணினேன்  சிவனே அய்யா"

கந்தனென்று அறியாமல் எந்தனைத் தொட்டடித்த
கையும்தான் நோகலையோ சிவனே அய்யா"

என்ற வரிகள் அய்யா வைகுண்டரின் பொறுமயை தெளிவாக விளக்குகின்றன.

வைகுண்டர் பொறுமை பற்றி என்ன கூறுகிறார்:

தன் மக்களுக்கு பொறுமையை போதித்த வைகுண்டர்,பொறுமையை கடைபிடிக்கும் மக்களே இந்த உலகத்தை ஆளப்போவதாக கூறுகிறார்.ஆம் பின்வரும் வரிகளை பாருங்கள்,

"பொறுமைப் பெரியோராய்ப் பூதலமெல்லாம் வாழ்வார்
அப்போது நீயரசு ஆள்வாய் என்மகனே"

இந்த வரிகள் கூறுவது என்ன? பின்வரும் தர்மயுகத்தை வைகுண்டர் ஆளப்போகிறார்.அவ்வாறு வைகுண்டர் ஆட்சி செய்யும் போது அந்த யுகம் முழுவதும் பொறுமையை உடைய மக்களே பெரியோர்களாய் வாழ்வார்கள்.என்பதையே இவ்வரிகள் உணர்த்துகின்றன.
அத்தகைய சிறப்புமிக்க தர்மயுகத்தில் தன்னுடைய மக்கள் அனைவரும் வாழ வேண்டும் என்று விரும்பிய வைகுண்டர் தன்னை நம்பிய மக்களுக்கு மட்டுமல்லாது தன்னை நம்பாத பேர்களுக்கும் பொறுமையை போதித்தார்.அதனையே 

"பொறுமை பெரிது பெரிய திருமகனே"
என்கிறார்.அத்தகைய பொறுமையை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நமது பொறுமை:

பொறுமைப் பற்றியும்,அதனைப் பற்றி வைகுண்டர் கூறியவற்றையும் பார்த்தோம்.அத்தகைய சிறப்புமிக்க பொறுமையை நாம் நம் வாழ்நாளில் எந்த  அளவுக்கு கடைபிடிக்கிறோம் என்று சிறிது சிந்தித்து பார்ப்போமா?........................................................என்ன நன்பர்களே அதனை சிந்தித்து பார்க்கும் பொறுமை கூட நம்மிடம் இல்லை என்பது புரிகின்றதா?அப்படியெனில் வைகுண்டரின் பொறுமை எவ்வளவு பெரியது என புரிகிறதா?நாமும் அதனை நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டாமா?நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.வைகுண்டர் வழி நடப்போம்,பொறுமையை கடைபிடிப்போம்,பெரியோராய் வாழ்ந்திருப்போம்.

அய்யா உண்டு!

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter