வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon சான்றோரின் பல்வேறு நாமங்கள்.


அய்யா உண்டு 

         அன்பான அய்யாவழி மக்களுக்கு பணிவான வணக்கங்கள்.அன்று அரிகோண மாமலையில் அப்பன் நாராயணன் அன்னைமார்கள் ஏழு பேர்களையும் கற்பிழக்கச்செய்து நம்முடைய சான்றோர்குல கண்மணிகளை ஈன்றெடுத்தார்.பெற்றெடுத்த பிள்ளைகளை அன்னை மாகாளியிடம் வளர்க்க சொன்னார் என்பது நாம் அறிந்த ஒரு நிகழ்வுதான்.அதன் பின்னர் அந்த ஏழு குழந்தைகளுக்கும் பல்வேறு நாமங்கள் சூட்டி தருமாறு அன்னை மாகாளி அப்பன் நாராயணனிடம் வேண்டினாள்.


      நாராயணரும் மகிழ்ந்து தான் பெற்ற மக்களுக்கு நாமம் இட சிவப்பெருமானையும் மற்றும் பல்வேறு கடவுளர்களையும் அழைத்தார்.அவ்வாறு அழைத்த பின்னர் நாராயணர் பெற்ற நல்ல சான்றோர்களுக்கு முதன் முதலில் சிவபெருமானும்,அதனை தொடர்ந்து பல தெய்வங்களும் நாமங்களை சூட்டி மகிழ்ந்தனர்.அவ்வாறு அவர்கள் இட்ட நாமங்களை இங்கு காண்போம்.


  • சாணார்


     முதன்முதலில் அப்பன் நாராயணன் தான் பெற்ற பிள்ளைகளுக்கு சிவனிடம் நாமமிட்டு தருமாறு வேண்டினார்.நாரயணனின் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் மகிழ்ந்து,'சாணார்' என நாமமிட்டார்.இதனை அகிலத்திரட்டு பின்வருமாறு கூறுகிறது,

" தோணாப் பொருளைத் துடர்ந்துகண்ட மன்னவருக்கு
சாணாரென நாமஞ் சாற்றினார் ஈசுரரும்"

  • சான்றோர்


        அதன்பின்னர் பிரம்ம தேவர் மகிழ்ந்து நாராயணர் பெற்ற பிள்ளைகளுக்கு 'சான்றோர்' என நாமம் சூட்டி மகிழ்ந்தார்.இதனை அகிலத்திரட்டு பின்வருமாறு கூறுகிறது,

" மதமான விந்து மாயமுனி சேயதற்க்கு 
சான்றோரென நாமஞ் சாற்றினார் வேதாவும்"

  • நாடாள்வார்


        அதன்பின்னர் நாராயணர் தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு மகிழ்ந்து நாமமிட்டார்.அவ்வாறு நாராயணர் இட்ட பெயர்தான் 'நாடாள்வார்' என்பதாகும். இது அகிலத்திரட்டில் பின்வறுமாறு கூறபடுகிறது,

"நாடாள்வா ரென்று நாமமிட்டார் பாலருக்கு"

  • சங்கு மன்னர்


          அதன் பின்னர் சக்தி உமை சான்றோருக்கு இட்ட பெயர்தான் 'சங்கு மன்னர்' என்பதாகும்.இதனை அகிலத்திரட்டு
"சங்கு மன்னரென்று தானுரைத்தாள் சக்தியுமை"
என உரைக்கிறது.

  • பொர்ப்பமுடி மன்னர்


     அதன் பிறகு பார்வதி, பிள்ளைகளுக்கு "சென்ற இடமெல்லாம் வென்று சீமைகட்டி ஆளும் 'பொர்ப்பமுடி மன்னர்'" என மகிழ்ந்து பெயரிட்டாள்.இதனை அகில்திரட்டு
பின்வருமாறு கூறுகிறது,

"  பொர்ப்பமுடி மன்னரென பேரிட்டாள் பார்வதியும்"


  • வெள்ளானை வேந்தர்


    சரஸ்வதி தேவி 'வெள்ளானை வேந்தர்' என நாராயணர் பெற்ற பிள்ளைகளுக்கு நாமமிட்டாள் இதனை அகிலத்திரட்டு பின்வருமாறு கூறுகிறது,

" வெள்ளானை வேந்தரென்று வெண்டாமரையா உரைத்தாள்"

  • வீர நகுல வேந்தர்


           வீர நகுல வேந்தர் என்பது பிள்ளையார் சான்றோருக்கு இட்ட பெயராகும், அகிலத்திரட்டு இதனை பின்வறுமாறு கூறுகிறது,

 "  நன்றான வீர நகுல வேந்தரெனவே
அன்றானை முகத்தோன் அருளினர் காணம்மானை"

  • தவலோக மன்னர்


           சண்முகர் மனமகிழ்ந்து சான்றோருக்கு இட்ட பெயரே 'தவலோக மன்னர்' என்பதாகும்,இதனை அகிலத்திரட்டு 
" சண்முகனுந்தான் மகிழ்ந்து தவலோக மன்னரென்று
விண்ணகமும் மெய்க்க விளம்பினர் காணம்மானை"
என உரைக்கிறது.

  • தர்மகுல மன்னர்


         வானோர்கள் மாமுனிவர்கள் சான்றோர்களுக்கு 'தர்மகுல மன்னர்' என நாமமிட்டு மகிழ்ந்தனர்.இதனை அகிலத்திரட்டு

"  வானோர்கள் வேத மாமுனியோர் தான்மகிழ்ந்து
தானான மாயவனார் தான்பெற்ற பாலருக்கு
தர்மகுல மன்னரென்று சாத்தினா ரம்மாணை"
என உரைக்கிறது.

  • தெய்வகுல மன்னர்


   'தெய்வகுல மன்னர்' என்பது கர்மமில்லாத தேவர்கள் சான்றோர்களுக்கு இட்ட நாமமாகும்.இதனை அகிலத்திரட்டு

"கர்மமில்லாத் தேவர் கரியமால் பாலருக்கு 
மெய்யுடைய பாலர் மென்மேலும் வாழ்ந்திருக்க 
தெய்வகுல மன்னரென்று திருநாம மிட்டனரே"
என கூறுகிறது.

  • சூரியகுல வேந்தர்


    சூரிய பகவான் அகமகிழ்ந்து சான்றோருக்கு 'சூரியகுல வேந்தர்' என நாமமிட்டார்.இது அகிலத்திரட்டில் பின்வறுமாறு கூறபடுகிறது.

"வீரியமாய்ச் சூரியனும் வெற்றிமால் பாலருக்குச்
சூரியகுல வேந்தரென்று சொன்னார் காணம்மாணை"

  • வீச விசய வேந்தர்


     இந்திரன் சான்றோருக்கு வைத்த பெயர் 'வீச விசய வேந்தர்' என்பதாகும் இதனை அகிலத்திரட்டு
"வாசவனுந்தான் மகிழ்ந்து மாயனுட பாலருக்கு
வீச விசய வேந்தரென்று நாமிட்டார்"

என்கிறது.

  • காட்டு ராசன்


      கற்புடைய சன்னாசியான நாரதமுனிவர் நாராயணர் பெற்ற மக்களுக்கு இட்ட பெயர்தான் 'காட்டு ராசன்' என்பதாகும்.இதனை அகிலத்திரட்டு பின்வருமாறு கூறுகிறது,
"கற்புடைய சன்னாசி கருத்தாகவே உரைப்பார்
நாட்டுக் குடைய நாதனுட கண்மணிக்குக்
காட்டு ராசனெனவே கருத்தாக நாமமிட்டார்"

இவ்வாறாக பல தெய்வங்களும், தேவர்களும் நாராயணர் பெற்றெடுத்த மக்களுக்கு பல்வேறு பெயர்களை சூட்டி மகிழ்ந்தனர். 

                                                                  அய்யா உண்டு!

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter