வருகைக்கு நன்றி!
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
நாரணன் சொன்னசொல் காலமும் சரியாச்சே சிவனே அய்யா!
Thursday, May 19, 2011 |
Posted by
anbukodi |
Edit Post
அய்யா உண்டு!
அன்பான அய்யாவழி மக்களே, இந்த பதிவில் உலகின் மிக முக்கியமான பிரச்சினையை பற்றியும் அதை பற்றி அய்யா என்ன சொல்லியிருக்காருன்னும் பார்ப்போம்.
உலகத்தின் மிக முக்கியமான பிரச்சினைனா ஏதோ தீவிரவாதம்,அல்லது ஊழல் பற்றி இருக்கும்னு நீங்க நினைக்கலாம்,அதுவும் முக்கியமான பிரச்சினை தான் ஆனால் இப்ப இன்னொரு முக்கியமான பிரச்சினையை பார்ப்போம்.
உலகத்தின் மிக முக்கியமான பிரச்சினைனா ஏதோ தீவிரவாதம்,அல்லது ஊழல் பற்றி இருக்கும்னு நீங்க நினைக்கலாம்,அதுவும் முக்கியமான பிரச்சினை தான் ஆனால் இப்ப இன்னொரு முக்கியமான பிரச்சினையை பார்ப்போம்.
இப்ப எல்லாம் எங்க பார்த்தாலும்,மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்,வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், இப்படின்னு ஒரே மரம் வளர்க்க சொல்லி விளம்பர பலகைகள் வைத்திருப்பதை நாம் பார்க்கலாம்.காரணம் இருந்த மரத்தையெல்லாம் ஒன்னு விடாம வெட்டி பணமாக்கிவிட்டோம்.விளைவு மழை இல்லை,விவசாயம் இல்லை.அதுமட்டுமா பூமி வேற சூடாயிட்டே இருக்குதாம் காரணம் காடுகள் அழிந்து விட்டது,மழை நின்று விட்டது.
மரமே ஒருஇடத்தின் வளத்திற்க்கும்,வளர்ச்சிக்கும் வித்திடுவதாகும்.ஆனால் பல்வேறு காரணங்கள் காட்டி அவற்றை நாம் அழித்து வருகிறோம்.எத்தனையோ சட்டங்கள் இருந்தாலும் அவற்றை நம்மால் தடுக்க முடியவில்லை.இந்த மரங்களும் காடுகளும் அழிவதற்க்கு முக்கிய காரணம் மக்கள் தொகை பெருக்கம்.அதிக மக்கள் தொகை பெருக்கத்தால் அவர்களின் பல்வேறு தேவைகளுக்காக காடுகள் அழிக்கபடுகின்றன.
பெரும்பாலும் மக்கள் இருப்பிடத்திற்காகவே அனேக காடுகள் அழிக்கப் படுகின்றன.காடுகள் என்றால் மலை காடுகள் மட்டுமல்ல.வயற்காடுகள்,தோப்புகள்,ஏன் சுடுகாடுகள் கூட இன்று பட்டா போட்டு விற்பனை செய்யும் அளவுக்கு வந்துவிட்டது.உதாரணமாக ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோவாளை-நாகர்கோவில் நெடும்சாலையின் இருபுறமும் வயற்காடுகளாக இருந்தது,ஆனால் இப்போது பெரும்பாலும் கட்டடமாக மாறிவிட்டது.

இந்தனிலை இங்கு மட்டுமல்ல உலகின் அனைத்து இடங்களிலும் இதே நிலைதான்.இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் விளை நிலமாக இருந்ததெல்லாம் தற்போது வீடுகளாக மாறிவிட்டது.
அரசாங்கமே காடுகள் வழியாக பெரிய சாலைகளை போடுகிறது.பின்னர் அந்த சாலைகளை சார்ந்து வீடுகளும் நிறுவனங்களும் கட்டப்படுகின்றன.பின் அங்கு ஒரு பெரிய ஊராட்சியே உருவாகி விடுகிறது.இதுதான் இன்றைய காடுகளின் நிலைமை.இன்னும் சில வருடங்களில் அனைத்து காடுகளும் நாடாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.
என்ன நன்பர்களே அய்யா என்ன சொல்லியிருக்காருன்னு ஞாபகம் வந்துட்டா!
அதுதான் அய்யா அழகா சொல்லியிருக்காரே

"காடுநாடாகு மென்று நாரணன் சொன்னசொல்
காலமும் சரியாச்சே சிவனே அய்யா"
காலமும் சரியாச்சே சிவனே அய்யா"
அய்யா உண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
இதை படித்தீர்களா?
உதவுங்கள்
அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அன்புக்கொடி மக்கள்
அய்யா வைகுண்டர்
அருள்வாக்கு
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.
அய்யாவழி வலைதளங்கள்
எங்களை தொடர்பு கொள்ள.....
EMAIL ID:anbukodi.co.cc@gmail.com
Mobile:8754563500
0 comments:
Post a Comment