வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon அய்யாவின் வாக்கும் அதிசய பிறப்பும்

அன்புள்ள அய்யாவழி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்.நமது அய்யா தன் அன்புக்கொடி மக்களுக்கு அருளிய அற்புதமான விஷயங்கள் தான் அருள் நூலும்,அகிலத்திரட்டும்.அந்த ஆகமங்களில் பல வருங்கால நடப்புகள் பற்றி அய்யா தெளிவாக விளக்கியுள்ளார்.


ஆனால் நம் அய்யாவழி மக்களில் சில பேருக்கு அவற்றில் உள்ள விஷயங்கள் அவ்வளவாக தெரிவதில்லை.சில பேர் அறிந்திருந்தும் அவற்றை முறையாக படிக்க விரும்புவதில்லை.அத்தகையோர் அய்யாவின் அருளால் அவற்றை படித்து அய்யாவின் பூரண அருளை பெற வேண்டும் என அனைவரும் அய்யாவை வேண்டிக்கொள்வோம்.அய்யா உண்டு!

இந்த உலகில் அய்யா வைகுண்டர் சொன்ன விஷயங்கள் எத்தனையோ நடந்துள்ளதை நாம் அறிவோம்.அவற்றில் ஒரு விஷயத்தைப் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.நீங்கள் ஏற்கனவே இதை பற்றி அறிந்திருப்பீர்கள்.இருப்பினும் இத்தகவல் நம்முடைய இந்த தளத்தில் நிச்சய்மாக இடம்பெற வேண்டும்,என்ற நோக்குடன் இதை இங்கு சமர்பிக்கிறேன்.அய்யா உண்டு!

ஒருபெண்ணுக்கு கருதரிப்பு என்பது ஒரு விந்து செல்லானது பெண்ணின் ஒரு கருமுட்டையுடன் இணைவதால் உண்டாகிறது.சிலசமயங்களில் பெண்ணின் அந்த ஒரு கருமுட்டையானது சில காரணங்களால் இரண்டாக பிரிந்து விடுவதால்தான் இரட்டைகுழந்தைகள் பிறக்கின்றன.இந்த கருமுட்டை சரியாக வளர்ச்சி அடையாத பட்சத்தில் அவைகள் ஒட்டி கொண்டு இரண்டு தலை,நான்கு கால்,கைகளுடன் பிறப்பதை நாம் காண்கிறோம். இத்தகைய நடப்புகள் இப்போதய காலகட்டதில் பரவலாக நடைபெறுவதை நாம் கண்கூடக் காண்கிறோம்.

இந்த நடப்புகளை பற்றியும் அய்யா தன் மக்களுக்கு முன்னறிவிப்பாக அறிவித்துள்ளார்.அவர் கூறியதை காணும் முன் பின்வரும் தகவல்களை சற்று காண்போம்,

இரண்டு தலை:
நகரி, ஏப். 5-
உத்தரபிரதேச மாநிலம் கவுதமபுத்த மாவட்டம் சைனி கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் சிங். விவசாயி. இவரது மனைவி சுஷ்மா.இவர்களுக்கு கடந்த மாதம் 11-ந்தேதி அங்குள்ள ஆஸ்பத் திரியில் பெண் குழந்தை பெற்றார். அந்த குழந்தைக்கு 2 முகம், 4 கண், 2 மூக்கு, 2 வாய் இருந்தது. அதைப் பார்த் ததும் சைனி கடும் அதிர்ச்சி அடைந்தார். அவரது குடும்பத் தினரும் இரட்டை முக அதிசய குழந்தையைப் பார்த்து மிரண்டு போனார்கள்.

பொதுவாக இதுபோல் பிறக்கின்ற குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்திலேயே இறந்து விடுவதுண்டு.ஆனால் இந்த குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருக்கிறது. இதனால் அதை டாக்டர்கள் தினமும் பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவி கள் செய்து வருகிறார்கள்.

சுஷ்மாவின் குடும்பத்தினர் அந்த குழந்தைக்கு `லாலி' என்று பெயரிட்டனர். லாலியை அப்பகுதி மக்கள் தெய்வமாக நினைக்கிறார்கள். தினந்தோறும் சுஷ்மாவின் வீட்டுக்கு திரண்டு வந்து `லாலி'யைப் பார்த்து பயபக்தி யுடன் கும்பிடுகிறார்கள். காணிக்கைகளும் வாரி வழங்குகிறார்கள். சிலர் தேங்காய், பழம் கொண்டு வந்து லாலியின் அருகில் வைத்து பூஜை செய்கிறார்கள்.இதனால் சுஷ்மாவின் வீடு தற் போது கோவிலாகவே மாறி விட்டது.

தனது குழந்தையை கிராம மக்கள் வழிபடுவதை கண்டு சுஷ்மா மகிழ்ச்சி அடைந்துள் ளார். அவர் கூறும்போது, "என் வயிற்றில் கடவுளின் உருவமான `லாலி' பிறந்திருப் பது பெருமையாக உள்ளது. அவளை நான் மட்டுமல்ல எனது ஊர் மக்களும் தங்கள் குழந்தையாக எண்ணி மகிழ் கிறார்கள். அதை நல்ல முறை யில் வளர்ப்பேன். 2 நாளைக்கு ஒரு தடவை லாலியை டாக்டரிடம் சென்று காட்டி வருகிறேன்'' என்றார்.

மூன்று கண்:

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள அங்காரா பிளாக்கில் வசித்து வருபவர் சுக்லால் மகோதா. இவரது மனைவிக்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை முகத்தைப் பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியில் ஆடிப்போய் விட்டனர்.அந்த பெண் குழந்தை 3 கண்கள் மற்றும் 2 மூக்குகளுடன் பிறந்திருந்தது. முகத்தின் மத்தியில் 2 மூக்கு இருக்கிறது. அந்த 2 மூக்குகளுக்கு மேல் மத்தியில் 3-வது கண் உள்ளது.

3 கண்களுடன் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தை சிவனின் மறு அவதாரம் என்று திடீரென ஒரு வதந்தி கிளம்பியது. இந்த தகவல் ராஞ்சி முழுக்க பரவி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 3 கண் குழந்தையை பார்க்க மருத்துவ மனைக்கு தினமும் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர்.

ராஞ்சி நகரின் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் இருந்தும் மக்கள் படையெடுத்தப்படி உள்ளனர். சிலர் மருத்துவமனை வெளியே தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபட்டனர். இது அதிசய பெண் குழந்தையின் பெற்றோரை கதி கலங்க செய்துள்ளது.அதிசய குழந்தையின் 2 கண்களும் மற்றவர்களுக்கு உள்ளது போல சாதாரணமாக உள்ளது. மத்தியில் உள்ள 3-வது கண் இன்னமும் திறக்கவில்லை. இதுபற்றி குழந்தையின் தந்தை சுக்லால் மகோதா கூறுகையில், "என் மகளை சிவ அவதாரம் என்று மக்கள் சொல்கிறார்கள். கடவுள் இப்படி ஒரு குழந்தையை கொடுத்து என்னை சோதித்து விட்டார். என்றாலும் இந்த குழந்தையை நான் வளர்ப்பேன்'' என்றார்.

என்ன நன்பர்களே செய்திகளை படித்து விட்டீர்களா ,இப்பொழுது அய்யாவின் அந்த வாக்கியங்கள் உங்களுடைய மனதில் உதித்திருக்கும் என்று நம்புகிறேன்.ஆம் நமது அய்யா தன்னுடைய அருள் நூலில் சாட்டு நீட்டோலையில் கூறிய

" இரண்டுதலை மூன்று கண்ணுமாகப் பிள்ளை தரித்துப் பிறக்கக்கண்டேன் சிவனே அய்யா "
என்ற வாசகங்கள் இங்கு நிறைவேறியிருப்பதை காணுங்கள்.பல்வேறு அறிவியல் காரணங்களால் இச்சம்பவங்கள் நடந்திருந்தாலும், இது இவ்வாறு தான் நடக்கும் என அன்றே கூறிய வைகுண்டரின் அருளை எண்ணும்போது மனம் சிலிர்க்கிறது.

அய்யா உண்டு!

5 comments:

munimurugan said...

ayya unndu

vijay21 said...

*nagariga bothaiyalea nadu thadumaruthada* ithuwum inru nadanthu kondu than irukkiradhu, nam thinamum parthukondu than irukkirom,

vijay21 said...

ayyavin pillaigal melai nattu kalacharathukkul pogamal irukka vendum, nam tamilnattin kalacharathin padi vazhala vendum... Nam kovilgal kal kattuvathai thavirkka vendum, thiyanathin valiyaga ayyavai kanavendum,

vijay21 said...
This comment has been removed by the author.
vijay21 said...
This comment has been removed by the author.

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter