வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon வைகுண்டர் வென்ற சோதனைகள் பகுதி-1


                                                               அய்யா உண்டு!

                      அன்பான அய்யாவின் பிள்ளைகளுக்கு அன்பான வணக்கங்கள்! சான்றோரின் குறை தீர்த்து,கலி அழித்து,தர்மயுக வாழ்வை வகுக்க வந்த வைகுண்டர்,இந்த கலி நிறைந்த உலகில் அடைந்த வேதனைகளுக்கு அளவே இல்லை."சாணார் குலத்தில் சாமி வந்தானோ" எனக் கூறி வைகுண்டரை இகழ்ந்து அடிக்காத நீசர்களே இல்லை.கலியை அழித்து சான்றோரின் குறை தீர்க்க வந்த வைகுண்டரின் வரவை அறிந்த திருவிதாங்கூர் மன்னன் வைகுண்டருக்கு பல சோதனைகளை கொடுத்தான்.இது அய்யாவழி மக்கள் அனைவரும் அறிந்த செய்திதான்,இருப்பினும் அறியாத அன்பர்கள் வைகுண்டர் எவ்வாறு சோதனைகளை பொறுமை எனும் ஆயுதத்தால் சாதனைகளாக்கினார்,என அறிந்து கொள்ள இப்பதிவை சர்ப்பிக்கிறேன்.அய்யா உண்டு!

கெளடனின் சோதனைகள்:

                ஆதிக்க சாதிகளின் அதிகாரம் மிகுந்த அந்த காலகட்டத்தில் ,அவர்களின் அதிகாரத்தை எதிர்த்து ,சமத்துவத்தை போதித்த வைகுண்டரை,ஆதிக்க சாதியினர், "மக்களை தூண்டி வீண் கலவரங்களை உண்டாக்குகிறான்,மேலும் தாந்தான் விஷ்ணுவின் அவதாரமெனவும் கூறி உலகை ஆளப்போவதாக கூறுகின்றான்',அவனை அடக்கி தண்டிக்க வேண்டுமென கலி நீச மன்னனிடம் வசை பாடினர்.இதனால் வைகுண்டரின் மீது கோபங்கொண்ட ஆதிக்க சாதியினரின் அன்பிற்குரிய மன்னன் வைகுண்டரை சிறை பிடிக்க தன் தளபதியான கெளடனிடம் உத்தரவு பிறப்பித்தான்.  

       உத்தரவை பெற்ற கெளடன் அதிக கோபத்துடன் வைகுண்டரை பிடிக்க பெரும்படைதனை திரட்டி வந்து கொண்டிருந்தான்.பின் நடக்கப் போகும் வினைகளை தன் தந்தையாகிய நாரயணரின் மூலம் அறிந்த வைகுண்டர் கலியனின் வரவுக்காக காத்திருந்தார்.கெளடன் வைகுண்டரை பிடிக்க வருவதை அறிந்து கொண்ட அன்புகொடி மக்கள் ,கலியர்களை எதிர்க்க வைகுண்டரிடம் உத்தரவு வேண்டினர்.கோபங்கொண்ட சான்றோரை அமைதிபடுத்திய வைகுண்டர்,பொறுமையை போதித்து ,இதுவெல்லாம்,விதிப்படி நடக்கும் நிகழ்வுகள்.இவை நடந்தால் தான் கலியை அழிக்க முடியும் என்று கூறி அவர்களை அமைதி படுத்தினார்.

                  இதை பயன்படுத்திக் கொண்ட கெளடனின் படைகள் வைகுண்டரை தாக்கி குதிரையில் கட்டி இழுத்து சென்றனர்.அய்யா வைகுண்டர் சிறிதும் எதிர்க்காமல் அமைதியாக அடங்கி இருந்தார்.இதனை தன் அருள் நூலில் "அடித்த அடியையெல்லாம் ஆபரனமாலையாக அகத்தில் அணிந்து கொண்டேன்" என கூறுகிறார்.இவ்வாறு   இழுத்து செல்லப்பட்ட வைகுண்டர் சுசீந்திரத்தில் கலினீச மன்னன் முன் நிறுத்தப்பட்டார்.

மன்னனின் சோதனை:

            தன் முன்னால் நிறுத்தப் பட்ட வைகுண்டரை எளனமாய் பார்த்த மன்னன்,சரி சாமி என்கிறானே நாமும் ஒரு சோதனை செய்து பார்ப்போம் என எண்ணிய மன்னன்,தனது கை விரலில் இருந்த மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் கழற்றி தன் கையில் வைத்து கொண்டான்.பின் வைகுண்டரை நோக்கி 'நீ உண்மையான சாமி என்றால் என் கையில் இருப்பதை கூறடா"என்றான். எல்லாம் அறிந்த வைகுண்டர் "தாழ்ந்துயிரு என்மகனே சட்டைக்குள்ளே தான்பதுங்கி" என்ற தனது தந்தையாகிய நாரயணரின் உபதேசத்துக்கு ஏற்ப தன் சக்திகளை வெளிக்காட்டாமல் இருந்தார். மேலும் "இப்போது இவனிடம் இதை உரைத்தால் நம்மை அறிந்து அவர்களுடன் நம்மையும் சேர்க்க பார்ப்பான்.ஆகவே நாம் நினைத்த காரியம் நிறைவேறாமல் போகும்"என்று எண்ணி அமைதியாக இருந்தார்.பின் மன்னனை நோக்கி "இறைவனின் எண்ணப்படி எது இருக்குமோ அது இருக்கும்" என்று உரைத்தார்.

சரடனின் சோதனை:

      கோபங்கொண்ட மன்னன் "இவனா சாமி?இவன் கள்ளச் சாமி,  இவனை கொடுமையான சரடனிடம் அழைத்து செல்லுங்கள்" என உத்தரவிட்டான்.பின்னர் வைகுண்டர் கொடிய சரடன் முன் கொண்டு நிறுத்தப்பட்டார்.கொடிய சரடன் தன்னிடமிருந்த சாரயத்தில் ஐந்து கொடிய விஷங்களை கலந்து ,நல்ல பால் எனக் கூறி வைகுண்டரை குடிக்கச்சொன்னான்.விஷமென்பதை அறிந்த நாராயணர் சிரிதும் அச்சமின்றி முழுவதும் பருகினார்.அந்த விஷமானது வைகுண்டரை வெகு நேரமாகியும் ஒன்றும் செய்யவில்லை.விஷத்தால் பாதிக்க படாத வைகுண்டர் எவ்வாறு விஷத்தின் கொடுமையிலிருந்து தப்பினார் என்று எண்ணாத சரடன்,மேலும் ஒரு சோதனை செய்வோம் நினைத்தான்....

                                                                       அய்யா உண்டு!
                                                                                                                             தொடரும்................  


0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter