வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon அய்யா வைகுண்டர் விஷ்ணுவின் கல்கி அவதாரமா?

   அன்பான அய்யாவின் அன்புக்கொடி பிள்ளைகளுக்கு என் அன்பான வணக்கங்கள்.கல்கி அவதாரம்,கலியை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்பது எல்லோரும் அறிந்ததே. என்று கலியுகம் தோன்றியதோ அன்றே கல்கியின் வருகைக்கான எதிர்பார்ப்புகள் தோன்றிவிட்டது. கலியானது முடியும் காலத்தில் கல்கியின் அவதார நிகழ்வு நடக்கும் என்பது பண்டைய புராணங்களின் அறிவிப்புகள் ஆகும்.

ஆனால் இன்றைய காலத்தில் பல்வேறு சாமியார்கள் தான் தான் கல்கி அவதாரம் என்று தமக்கு தாமே சொல்லி கொள்கிறார்கள்.ஆனால் நம் அய்யாவழி மக்கள் வைகுண்டர்தான் கல்கி அவதாரம் என்று வணங்கி கொண்டு இருக்கிறோம்.

கல்கியின் அவதார காலம்:

        இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவே சிக்கி தவிக்கும் கல்கி அவதாரம் எப்போது நிகழும் அதன் பண்புகள் என்ன என நம் முன்னோர்கள் கூரிய சில கருத்துக்களை முதலில் காண்போம்.  
                   இந்தியாவில் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸூரதாஸர் எனும் ஞானி விக்கிரமாதித்த வருடம் 1900க்குப்பின் உலகில் ஒரு பெரும் நிகழ்வு உண்டாகும் என போதித்துள்ளார். விக்கிரமாதித்த வருடம் ஆங்கில வருடத்திற்கு 56 வருடங்கள் அதிகமாகும். அதாவது ஆங்கில வருடம் 1844   வள்ளலார் இராமலிங்கர் கலி யுகம் 1900ஆம் வருடத்திற்கு முன்பே முடிவுறும் என கூறி பின் வரும் செய்யுளையும் பாடியுள்ளார்:

நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடுந் தனித்தலைவ ரொருவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே

பல கிருஸ்தவ சமயப்பிரிவுகளும் இயேசு நாதரின் மறுவருகை 1900 க்கு முந்தய காலத்துலேயே என போதித்துள்ளன. இஸ்லாமிய சமயத்தில் ஹிஜ்ரி 1260ல், அதாவது அதற்கு சமமான ஆங்கில வருடம் 1844ல் ஒரு தூதர் உலகிற்க்கு வெளிபடுவார் எனும் நம்பிக்கையும் உள்ளது.இந்து மதத் துறவி விவேகானந்தரும் 1900 க்கு முன்பே கல்கி தோன்றி கலி அழிந்து விடும் என்கிறார்.
          இதைதான் நமது அகிலமும் 
"நாரணர் வைகுண்டமாகி நாட்டினில் வந்த அன்றே காரணமில்லாமாச்சு கலியுகம் அழிந்து போச்சு"
என்று கூறுகிறது,ஆம் அன்பர்களே நாராயணர் வைகுண்டமாக வந்தது ஆங்கில வருடம் 1933 ஆகும்.
ஆக கல்கி அவதரிக்கும் காலம் என முன்னோர்கள் கூறிய இந்த காலத்திலேயே(1809-1851) வைகுண்டர் நாராயணரின் மகனாக கடலில் இருந்து அவதரித்து வந்தார்.

கல்கி அவதாரம் நிகழும் இடம்:

ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார்.    

    இக்கூற்று உலக தீர்க்கதரிசிகளிலேயே வைகுண்டர் ஒருவருக்குதான் பொருந்தும்.ஏனெனில் வைகுண்டர் ஒருவர்தான் நீரினால் சூழப்பட்ட செந்தூரின் கடலுக்குள்ளே அவதரித்தார். மற்ற யாவரும் நிலத்திலேயே அவதரித்துள்ளனர்.

       மேலும் கல்கி சம்பல கிராமம் எனும் இடத்தில் அவதரிப்பாராம்.இங்கு சம்பலம் என்பது,பெளதீகம் சார்ந்த இடமல்ல.அது ஆன்மீகமும்,லெளகீகமும் இணையும் இடம்.அதாவது ஒருவனது மனதில் ஆன்மீகமும்,லெளகீகமும் இணையும் போது கல்கி அவனுடைய மனதில் அவதரிக்கிரார் என்பது பொருளாகும்.

கல்கியின் தந்தை:

             கல்கியின் தந்தை பெயர் விஷ்ணு யாஸஷ் என புராணம் கூறுகிறது.இங்கு யாஸஷ் என்பதற்க்கு ஜோதி என்று பொருள்.அதாவது ஜோதிமயமான விஷ்ணுவின் மகன் தான் கல்கி என்பது பொருள். வைகுண்டரும் தனது தந்தை விஷ்ணு எனவும் அவரே பரம்பொருள் என்றும் அவர் ஜோதிமயமாக விளங்குகிறார் எனவும் தனது அகிலத்தில் உணர்துகிறார்.  


     சரி அவ்வாறே கலி அழிக்க கல்கியாக வைகுண்டர் அவதரித்து விட்டார் என்றால் இன்னும் ஏன் கலியுக கொடுமைகள் தொடர்ந்து நடகின்றன,என நீங்கள் கேட்கலாம்.இதற்கு டாக்டர் முஞ்சே என்பார் ஒரு விளக்கம் தருகிறார். இவர் கலி முடிந்துவிட்டதற்கு பல ஆதாரங்களை வழங்கியுள்ளார். கலி முடிந்துவிட்டால் உலகம் ஏன் இன்னும் இவ்வாறு இருக்கின்றது என கேட்கப்பட்டதற்கு அவர் கலி புருஷன் இறந்துவிட்டான். அவனை இன்னமும் நடுவீட்டிற்குள் வைத்துக்கொண்டு அவன் இறக்கவில்லை என கூறிக்கொண்டிருந்தால் இறந்து போன பிணம் நாற்றம் எடுக்கவே செய்யும். இன்று உலகில் காணப்படும் பிரச்சினைகள் இந்த பிணநாற்றமே. பிணத்தை தூக்கியெரிந்துவிட்டு நடக்கவேண்டியதைப் பற்றி சிந்தித்தோமானால் உலகில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்றார்.
இவரது கூற்றும் ஏற்கதக்கதாகவே உள்ளது.

            இருப்பினும் எனது சிற்றறிவுக்கு அய்யா அருளிய சில விஷயங்களை இங்கு கூறுகின்றேன் .அதற்கு முன் இந்த கொடுமையான கலியின் தன்மைகளை சற்று காண வேண்டும்.கலியானது வாளை கொண்டோ,அம்பைக் கொண்டோ அழிப்பதற்க்கு உடலுருவம் கொண்டது அல்ல.அது உணர்வுகளால் ஆனது.மனிதனின் எண்ணங்களால் ஆனது.இறைவன் மனிதனை ஒரு நாளும் அழிக்க எண்ணுவதில்லை,மாறாக அவனில் காணப்படும் கெட்ட எண்ணங்களையே அழிக்க நினைக்கிறார்.ஆகவே வாள்,அம்பு போன்ற ஆயுதங்களோடு கல்கி வரமாட்டார்.
இதைத்தான் அகிலம் 

"கலியென்றால் எலியல்லவே கணையாளி வேண்டாமே
வலிமாய நினைவு மாய்மாலம் என்மகனே
ஆனதால் ஆயுதங்கள் அம்புதடி வேண்டாமே
மானமாக இருந்தால் மாளும் கலி தன்னாலே"

என்கிறது.
எனவே ஆயுதங்களை வைத்து கொண்டு கலியை அழிக்க முடியாது என்பது தெளிவாகிறது.

            ஆகவே கல்கி இந்த உலகில் ஒரு மனித உருவத்தில்(வைகுண்டராக) அவதரித்தால் மட்டும் போதாது.பிறருடைய மனதில் உள்ள கலியை அழிப்பதற்கு சிலவிசயங்கள் அந்த அவதாரத்திற்க்கு தேவை படுகிறது.அவைகள்

1.கல்கியானது கலி நிறைந்த ஒவ்வொரு மனிதனின் அகத்திலும் இரண்டாம் வருகையாக அவதரிக்க வேண்டும்.அதாவது முதல் வருகை வைகுண்டராக பூமியில் நிகழ்ந்து விட்டது.

2.அவ்வாறு அகத்துள் அவதரிக்கும் கல்கிக்கு மிக வேகமாக பறக்க கூடிய வெள்ளை குதிரை வழங்கப் படவேண்டும்.(பண்டைய புராணங்களின் கூற்றுபடி கல்கிக்கு வேகமாக பறக்கும் குதிரை கிடைக்குமாம்)

3.அக்குதிரையில் அமர்ந்து கலிஎண்ணங்கள் அங்கு ஆட்கொள்ளாத வண்ணம் வாளைக் கொண்டு  அதனை அழிப்பார்.

         சற்று விளக்கமாக காண்போம்.கல்கி அவதாரமான வைகுண்டர் ஒவ்வொரு மக்களின் அகத்திலும் வரவேண்டும்,அதாவது அவதரிக்க வேண்டும்.அவ்வாறு அவதரிக்கும் வைகுண்டரான கல்கிக்கு மிக வேகமாக பறக்ககூடிய வெள்ளை குதிரை வழங்கப்பட வேண்டும்.இங்கு வெள்ளை குதிரை என்பது மனிதர்களின் தூய மனதை காட்டுகிறது.இந்த உலகில் மனதை விட வேகமாக பயனிக்க கூடிய பொருள்,வேறுவொன்றுமில்லை.மேலும் வாள் என்பது ஆயுதத்தை குறிக்காமல் ,ஆயுத்ததை விட கூர்மையான உபதேசங்களை குறிக்கின்றது.

      ஆகவே எவனொருவன் தன்னையும் தன் மனதையும் முழுமையாக வைகுண்டரிடம் சமர்பிக்கிறானோ,அவன் மனதில் வைகுண்டர் அவதரித்து மனமாகிய வெள்ளை குதிரையில் அமர்ந்து, தனது உபதேசங்களாகிய வாளை கொண்டு கலியை அகற்றுவார்.அதன்பின் தருமயுக வாழ்வை அருள்வார் என்பது திண்ணமாகிறது.வைகுண்டரே கல்கி அவதாரம் என்பதும் தெளிவாகிறது.

                                "தவறுகள் இருப்பின் அய்யா பொருத்து அய்யா மாப்பு தரனும்"


                                                              அய்யா உண்டு!

1 comments:

Anonymous said...

நல்லதுகாண்! அப்படியே ஆகட்டும்.

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter