வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon அய்யா வழி மக்கள் அறிய வேண்டிய சடங்கு முறைகள்..........

அய்யா வழி சடங்கு முறைகள் இந்து மதத்திலிருந்து சற்று வேறுபட்டவைகளாகும்,
பூப்பெய்திய பெண்ணுக்கு நடைபெறும் சடங்கு முறைகள் 
                  அய்யா வழி மக்கள் பெண்கள் பூப்பெய்திய  நாளிலிருந்து 41 நாட்கள் கழித்து தான் சடங்கு முறைகளை நடத்துவர்.அதுவரை பூப்பெய்திய பெண் வீட்டார் புனித இடங்களுக்கு செல்வது கிடையாது.

                      அதன் பின்னர் ஒரு தாங்கலிலோ அல்லது தலைமை பதிக்கோ சென்று ஐந்து முறை பதம் எடுத்து எரிந்து தீட்டினை அகற்றி கொள்ளலாம். அல்லது வீட்டில் வைத்து சடங்கு செய்ய நினைப்பவர்கள் குருவையோ,அல்லது சீடரில் ஒருவரையோ வீட்டிற்கு அழைத்து,ஐந்து முறை பதம் எரிந்து தீட்டினை  போக்கி கொள்ளலாம்.விருந்து விழா நடத்துபவர்கள் திரு விளக்கு ஏற்றி ,வெற்றிலை,பாக்கு,பழம் படைத்து ஐந்து முறை மலர் தூவி பதம் தெளித்து தீட்டினை போக்கி கொள்ளலாம்.பூப்புனித நீராட்டு விழாவுக்கு வாழ்த்து பாடல் பாட வேண்டியதில்லை.

குழந்தை பிறந்த வீடு
              குழந்தை பிறந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பதினாறு நாட்கள் தீட்டாகும்.பெற்ற  தாய்க்கு 41 நாட்கள் தீட்டாகும்.அதுவரை புனித தலங்களுக்கு செல்லவது தவிர்க்கப் படுகிறது.

புதுமனை புகுவிழா
             புதுமனை புகுவிழா நடத்தும் போது குரு முறையில் இருப்பவரை விளக்கு ஏற்ற  வைத்து வெற்றிலை,பாக்கு,பழம் வைத்துச் சுத்தமான மண்பானையில் நாமம் இட்டு நடு வீட்டில் பால் காய்க்க  வேண்டும்.பால் பொங்கி வரும்போது குரவையொலி முழங்க "அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா"எனும் மந்திரத்தை சொல்லிப் பாணையை  இறக்கி வைக்க வேண்டும்,பிறகு வெற்றிலை ,பாக்கு,பழம் வைத்த இடத்தில் நின்று போதித்து மாப்புக் கேட்டுப் பாலினைத் தருமம் இட்டு விருந்து நடக்கலாம்.

குழந்தைக்கு பெயரிடுதல்
                    குழந்தைக்கு பெயரிடும் போது "அய்யா நிச்சயித்தபடி (பெயர்) என்னும் பெயர் வைக்க வேண்டும்"என்று சொல்லிப் போதித்து ஐந்து முறை குழந்தையின் பெயரைக் கூறிக் குழந்தையின் மேல் பதம் தெளிக்க வேண்டும்.அதுபோல குழந்தைக்கு முடி இறக்கும் போது "அய்யா நிச்சயித்தபடி முடி இறக்க வேண்டும்" என்று சொல்லி போதித்து ,பின் முத்திரிப் பதம் தெளித்து முடி இறக்க வேண்டும்.குழந்தைக்கு முதலில் அன்னம் கொடுக்கும் போது ,தலைமை பதில்  உள்ள நித்தியப் பால் வாங்கி கொடுக்கலாம் முடியாதவர்கள் ,"அய்யா நிச்சயித்தபடி அன்னம் கொடுக்க வேண்டும்"என்று கூறி போதித்து முத்திரிபதம் சிறிது வாயில் இட்டு பின் அன்னம் கொடுக்க வேண்டும்.

3 comments:

Lalithakandasamy said...

good to know ..

ANBUKODI said...

thank u friend

Anonymous said...

இறுதிச்சடங்கு பற்றிய தகவல்கள் இல்லை

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter