வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon அன்புக்கொடி கிராமமும் ஆடும் வாகனமும்......

                       என்னதான் கடவுள்மீது அதிகமான பக்தி இருந்தாலும் சிலர் சில  நேரங்களில் கலியின் பிடியில் சிக்கி பல தவறுகளை செய்துவிடுகிறார்கள்.இன்னும் பலர் ஏதோ கடமைக்கு கடவுளை வணங்கி விட்டு தன் வழியிலேயே போய் கொண்டு இருப்பார்கள்.இன்னும் பலர் கடவுளை கண்டு கொள்வதே இல்லை,கடவுள் இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. 
       இத்தகைய கலி சூழ்ந்த இந்த உலகில் ,விஞ்ஞான மயமான இந்த உலகில் கடவுளை மட்டுமே நம்பி வாழும் மக்கள் உள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?நம்பிக்கை என்றால் சாதாரண நம்பிக்கையல்ல அவர்களுக்கு எல்லாமே இறைவன்தான்.வீட்டில்,ஊரில் என எங்கு  என்ன பிரச்சினை வந்தாலும் இறைவனிடமே கூறி முறையிட்டு நல்ல முடிவுகளையும் பெற்று செல்கிறார்கள்.அண்ணன் தம்பி பிரச்சினையா ,சொத்து தகராறா,பணபிரசினையா,உடல், நோய் சார்ந்த பிரச்சினையா அனைத்தையுமே இறைவனிடம் முறையிட்டு நல்ல தீர்வு கண்டு செல்கிறார்கள். 
               இத்தகைய மக்கள் எங்கு வாழ்கிறார்கள் இவர்களின் நம்பிக்கைக்கு ஆதாரமிட்ட  இறைவன் யார் என பார்ப்போமா?
                       இம்மக்கள் வேறு எங்கும் இல்லை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் அருகே உள்ள அழகிய ,பசுமையான கிராமமான அய்யனார் குளத்தில் தான் இத்தகைய மக்கள் வாழ்கிறார்கள்.இவர்கள் நம்பி வழிபடும் ,இவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்கும் இறைவன் யார்? அவர் வேறு யாருமல்ல செந்தூர் கடல் நாயகன்,தெற்றனத்து தேவன் அய்யா வைகுண்ட பரம்பொருளே ஆவார்.இங்கு அப்படி என்ன அதிசயம் நடக்கிறது என்று கேட்கிறிர்களா?சொல்கிறேன் இங்கு வாழும் மக்கள் வைகுண்டரே உண்மையான தெய்வம் என்ற நம்பிக்கையோடு வாழ்கிறார்கள்,மக்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அய்யாவே தீர்ப்பு சொல்கிறார்,அந்ததீர்ப்பை  மக்களும் ஏற்று கொண்டு அதன் படியே வாழ்கிறார்கள்.இங்கு வைகுண்டரின் காவிக்கொடியை தவிர வேறு எந்த அரசியல் கட்சிகளின் கொடிகளும் பறப்பதில்லை.இவ்வூரில் உள்ளவர்கள் மட்டுமல்ல அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களும் அய்யாவை நம்பி வந்து குறைகளை தீர்த்து செல்கிறார்கள்.
அய்யாவின் அருளால் இவ்வூரில் எந்தவித பஞ்சமும், தட்டுபாடும்  விளைவதில்லை.மக்களின் மனம் போலவே பயிர்களும் செழித்து வளர்கின்றது.
                  மேலும் ஒரு அற்புதமான சிறப்பை அய்யா கொடுத்திருக்கிறார்,திருவிழாவின் போது அய்யா அமர்ந்து வரும் வாகனம் தானாகவே ஆடுகின்றது.மற்ற கோவில்களில் எல்லாம் வாகனத்தை தூக்கி செல்பவர்கள்  தான் அதனை ஆட்டுவார்கள் ஆனால் இங்குதான் வாகனம் ,தூக்கி செல்பவர்களை ஆட்டும் அதிசயம் நடக்கிறது.
               இவ்வூரில் உள்ள பதிக்கு துலங்கும் பதி துவரயம் பதி என பெயர் சூட்டி உள்ளனர்.இப்பதிக்கு திருப்பதியை போன்ற சிறப்பை தருவதாக  அய்யா அருள்வாக்கு கூறியிருக்கிறாராம்.திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அய்யா பதிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த பதி இதுவாகும்.வாரந்தோறும் வெள்ளி,ஞாயிறு கிழமைகளில் கணக்கு நடக்கிறது இதில் பெருபான்மையான மக்கள் கலந்து அருள்வாக்கு பெற்று செல்கின்றனர்.உடல்நலம் பாதிக்க பட்டோர்கள் இங்கு தங்கி குணமடைந்து செல்கிறார்கள்.இத்தகைய சிறப்புமிக்க பதிக்கு சென்று வாகன ஆட்டத்தை நாமும் பார்த்து வரலாமே!



                                                                   அய்யா உண்டு

2 comments:

Parthibanmtech said...

அண்மையில் அய்யனார்குளத்தில் பல அதிசியங்கள் நடந்து வருகிறது அய்யனார்குளம் வாகனம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள ஊர்களில் உள்ள வாகனமும் அய்யனார்குளம் வந்து அய்யனார்குளம் அய்யாவுடன் அதிசய கட்சி தருகிறார்......

மேலும் 96 அடி ராஜகோபுரம் கட்டும் பனி இங்கு நடந்து வருகிறது...

சில வீடியோ link இதில் உள்ளது மேலும் many videos விரைவில் தருகிறேன்....

http://www.youtube.com/watch?v=eXvLhVJjs_Q

http://www.youtube.com/watch?v=VCNolg5BcEw

Parthibanmtech said...

அய்யனார்குளத்தில் நடக்கும் அதிசியங்களை இனி நீங்கள் கீழே கொடுக்கபட்டுள்ள link-இல் பார்க்கலாம்....

www.youtube.com/ayyanarkulamayya

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter