வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon அஞ்சாமல் பிடித்திடுங்கோ அடங்கிடுவார் அக்குருவும் !

அய்யா உண்டு 
       அன்புக்கொடி மக்களே தலைப்பை பார்த்து விட்டு இதை பற்றி என்ன இருக்கும் என யோசிக்கிறீர்களா ?பெரிய அளவில் இல்லா விட்டாலும் எதோ எனக்கு தெரிந்தவற்றை எழுதுகிறேன்.
                இன்று உலகில் வாழும் பெருபான்மையான  மக்கள் கடவுளை ஏதோ வணங்க வேண்டுமே என்பதற்காகவே வணங்குகின்றனர் .காரணம் இறைவனின் மீது நம்பிக்கையில்லை,நம் முன்னோர்கள் சொல்லி விட்டார்களே என்பதற்காகவே பல பேர் கடவுளை வணங்குகின்றனர்,இன்னும் சில பேர் உண்டு ஏதேனும் ஒரு கடவுளை வணங்குவார்கள் மிகவும் பயபக்தியோடு தொழுவார்கள்,அவர்களை விட பக்தியானவர் இல்லை என என்னும் அளவுக்கு இருப்பார்கள்.அப்படி பக்தியாய் இருந்தவர்கள் தன் வாழ்வில் ஏதேனும் சோகமான சம்பவம் நிகழ்ந்து விட்டால் போதும் ஆகா இந்த இறைவன் நம்மை காக்க வில்லையே இவனையா நாம் இவ்வளவு நாளாய் வணங்கினோம் ,பதிலாக வேறு தெய்வத்தை வணங்கி இருந்தால் கூட நாம் காப்பாற்ற பட்டிருப்போமே தவறு செய்து விட்டோமே என எண்ணி தெய்வத்தை குற்றம் சொல்லி மாற்றி விடுவார்கள். இப்படிப்பட்டவர் தன் வாழ்வில் சோகமே வர கூடாது என்று நினைப்பார்கள் போலும்.
                தேவர்கள் வாழ்வில் சோகமே இல்லாமல் இருந்ததன் விளைவு தானே இந்த கலியுகம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் .வாழ்வில் துன்பமே இல்லாத தேவர்கள் இறைவனை மதிக்கவில்லை விளைவு குறோணி என்ற அசுரனின் பிறப்பும் ,இன்றைய கலியின் கொடுமையும் ஆகும்.வாழ்வில் துன்பம் இல்லை என்றால் இறைவனுக்கு மதிப்புதான் என்ன,அவனை நினைப்பதற்கே நேரம் இன்றி போய்விடுமே!துன்பம் வரும்போது தான் மனிதனுக்கு இறைவனின் நினைப்பே வருகிறது.எத்தனை துன்பம் வந்தாலும் இறைவனை நினைத்துக்கொண்டே இருக்கும் ஒருவனே சிறந்த பக்தனவான்,பல இன்னல்களையும் துயர்களையும் தாண்டினால்தான் இறைவனை அடைய முடியும். இதைத்தான் அருள் நூல்,
"அஞ்சாமல் பிடித்திடுங்கோ அடங்கிடுவார் அக்குருவும் !"
வாழ்வில் எத்தனை சோகங்கள் துன்பங்கள் வந்தாலும் ஒரு நினைப்பாய்  இறைவனை மனதில் நிறுத்தி எந்த வெறுப்பும்  இன்றி தன் தாயாகவோ, தந்தையாகவோ ,சிறந்த நண்பனாகவோ எண்ணி இறைவனை பிடித்தால்   நம் அன்புக்கு இறைவன் அகப்படுவான்,அடங்குவான் என்பதே இவ்வரியின் அர்த்தமாகும்.அதை விட்டு இறைவனுக்கு தேவையில்லாத காணிக்கைகள்,காவடிகள்,வைத்து புண்ணியமில்லை இதைத்தான் அய்யா,
"அன்பு மலரெடுத்து அனுதினமும் பூசை செய்தால் அய்யா நான் வருவேன்" 
என்கிறார்.
மேலும் அய்யா 
"பக்தி மறவாமல் பதறாமல் நீயிருந்தால் 
புத்தி சொல்ல நான்வருவேன் புலம்புவேன் என்மகனே!"
என்கிறார்,
           உண்மையான பக்தியுடன் எந்த தீய சக்திகளுக்கும் பயப்படாமல் வைகுண்டமே துணை என்ற ஒருமனதோடு இருக்க வேண்டும் என்கிறார்,அவ்வாறு இருந்தால் பல புத்திமதிகளை கூறி ஆபத்திலிருந்து காக்க நான் வருவேன் என்மகனே என்கிறார்.
ஆனால் இன்றைய காலத்தில் சிலர் பகலில் கடவுளிடம் பிரச்சினைகளை கூறி இறைவா  என்னை கப்பாட்ட்று என முறையிடுவார்கள்.அவர்களே பொழுது சாய்ந்ததும் இறைவனை மறந்து மந்திரவாதிகளிடம் சென்று முறையிட்டு அழுவார்கள்.இதற்கு ஏன் இறைவனை வணங்க வேண்டும்.செய்வினைகாரனையே வணங்கலாமே! 
               மக்களை காப்பதற்கு மக்களுள் ஒருவராகவே தோன்றி மக்களுக்காய் அடிகள் பட்டு,பல சோதனைகளையெல்லாம் சாதனைகளாக்கி தாழ்ந்து கிடந்த மக்களையெல்லாம் இன்று நல்ல நிலைமைக்கு உயர செய்து கலியின் கொடுமைகளையெல்லாம் விவரித்து,அதிலிருந்து தப்பும் வழிகளையும் கூறிய    உண்மையான இறைவனை விட்டு கலியை நிலை என்று நம்பி செல்லும் மக்களை வைகுண்டர்தான் நல்லபுத்தி ஈந்து காக்க வேண்டும்.
அய்யா உண்டு  


1 comments:

Anonymous said...

Ayyava Nambidunko Arul Yavum Petridungo!

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter