வருகைக்கு நன்றி!
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
அய்யா வழியும் சிலை வழிபாடும்
Sunday, June 10, 2012 |
Posted by
ANBUKODI |
Edit Post
அன்புள்ள அய்யாவழி நன்பர்களுக்கு இனிய வணக்கங்கள். அன்பர்களே இந்த பதிவில் "அய்யா வழியும் சிலை வழிபாடும்" என்னும் தலைப்பின் கீழ் இந்து மதத்தில் பின்பற்றப் படும் சிலை வழிபாடு பற்றியும் அய்யாவழியில் அதன் நிலையைப் பற்றியும் காண்போம்.
சிலை வழிபாடு:
சிலைவழிபாடு என்பது ஆதி காலம் தொட்டே இந்துமதத்தில் பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும்.இன்ன இன்ன தெய்வங்கள் இந்த வடிவில் தான் இருக்கும் என்று கற்பனை செய்யப்பட்டு சிலையாக வடிக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன.இந்த சிலை வழிபாட்டிற்க்கு பல விளக்கங்கள் கூறப்பட்டாலும்,பின்வரும் விளக்கத்தை மட்டும் இங்கு காண்போம்.
இறைவனையே அறியாத ஒருவன் ,ஆன்மீக உணர்வே இல்லாத ஒருவன் இறைவனை அறிந்து கொள்ள முற்படும் போது இறைவன் எப்படி இருப்பான்,அவனை எங்கே காணமுடியும் என்ற எண்ணங்கள் எழுகின்றது.
இந்த சூழ்நிலையில் அதாவது இறைஈடுபாட்டின் தொடக்க நிலையில் தன் மனதை ஒருநிலைப்படுத்த தேவைப்படும் ஒரு பொருள் தான் சிலை.அந்த சிலைக்குள்
இறைவன் இருப்பதாக எண்ணி தன் மனதை இறைவழிபாட்டில் செலுத்துகின்றனர்.இப்படியாக இறையாண்மையின் தொடக்க நிலையாக அதாவது இறைவனை அறிய துடிக்கும் முயற்சியின் முதற்படியாக இந்த சிலை வழிபாடு விளங்குகிறது.
ஆனால் சிலை மட்டும்தான் இறைவன் என எண்ணுவது முட்டாள்தனமாகும்.
அய்யாவழியில்......:
அய்யாவழியில் சிலை வழிபாடு முற்றிலும் தவிர்க்கப் படுகிறது. இதற்க்கு காரணம் அய்யா வைகுண்டர் சிலை வழிபாட்டினை தவிர்க்க நினைத்தார் என்பதுதான்.ஒருவேளை அவர் சிலை வழிபாட்டை விரும்பியிருந்தால் இன்று அனைத்து அய்யா வழி தாங்கல்களிலும் அய்யா வைகுண்டரின் சிலைவடிவம் பூஜிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்.
ஆனால் அப்படி நடக்கவில்லை. அய்யா ஏன் சிலைவழிபாட்டை தவிர்த்தார்? காரணம் தன் மக்கள் இறைவழிபாட்டில் முழு நிலையை எட்டி இறைவனைக் காணவேண்டும் என்பதே ஆகும்.
இன்றும் பல்வேறு மக்கள் சிலை மட்டும்தான் இறைவன் என நினைத்து அதை மட்டுமே வணங்குகின்றனர். அதனால் அவர்கள் இறைவழிபாட்டின் அடுத்த நிலையை அடையமுடியாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். ஆம் மெய்பொருளை உணரமுடியாமல் அவர்கள் தடுக்கப்படுகின்றனர்.
தனக்குள் இருக்கும் இறைவனை, இறைநிலையை உணருவதுதான் அய்யாவழியின் நோக்கமாகும்.தனக்குள் இருக்கும் மெய்ப்பொருளை உணரும்போதே ஒருவன் முழுமையாக இறைவனை காண்கிறான்.மேலும் இறைவன் எனும் இன்பத்தை அடைகின்றான்.
ஆனால் சிலை வழிபாடு அந்தநிலையை அடையவிடாமல் அதாவது நமக்குள் இருக்கும் இறைவனை அறியவிடாமல், சிலைக்குள் இருக்கும் இறைவனையே சிந்திக்க வைக்கிறது.எனவே தான் பலர் கோவிலில் மட்டும்தான் இறைவன் இருப்பதாக எண்ணி, கோவிலில் இருக்கும் இறைவனுக்கு மட்டுமே பயந்துவாழ்கின்றனர். தன் மனதில் இருக்கும் இறைவனை கண்டு யாரும் பயப்படுவதில்லை.உடலே கோவில் ,மனமே தெய்வம் எனும் நிலையை அறியாமல் அலைகிறார்கள்.
உடலே கோவில் ,மனமே தெய்வம் எனும் நிலையை தன் மக்கள் அடைய வேண்டும் என்பதற்காகவே வைகுண்டர் சிலை வழிபாட்டை தவிர்த்தார்.
..........அய்யா உண்டு..........
Subscribe to:
Post Comments (Atom)
இதை படித்தீர்களா?
உதவுங்கள்
அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அன்புக்கொடி மக்கள்
அய்யா வைகுண்டர்
அருள்வாக்கு
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.
அய்யாவழி வலைதளங்கள்
எங்களை தொடர்பு கொள்ள.....
EMAIL ID:anbukodi.co.cc@gmail.com
Mobile:8754563500
2 comments:
Good Explanation
சரியாகக் கூறியுள்ளீர்கள். சிலை வழிபாடு என்பது ஆன்மீகத்தேடலின் முதல் படியே.
ஆர்வமுள்ளோர் விக்கிப்பீடியாவில் அய்யா வழிக் கட்டுரைகளை எழுதலாம்.
அய்யா வழிக் கட்டுரைகளின் பட்டியல் - https://ta.wikipedia.org/s/3ajr
Post a Comment