வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon அகிலத்திரட்டு கதைச்சுருக்கம்(கிரேதா யுகம்)-பகுதி 3

கிரேதா யுகம்

நெடியயுகம் முடிந்த பின்னர் அடுத்த யுகத்தை படைக்க வேண்டும் என திருமால் மனம்மகிழ்ந்து சிவனிடம் உரைத்தார்.அதனை கேட்டு மகிழ்ந்த சிவ பெருமான் ஆகமப் படி நெடியயுகத்திற்க்கு பின் வர வேண்டிய கிரேதா யுகத்தை படைத்தார்.குறோணியின் ஆறு துண்டுகளில் மீதமுள்ள நான்கு துண்டுகளில் ஒன்றை இரண்டாகப் பிரித்து சிங்கமுகா சூரன்,சூரபத்மன் என்ற இரண்டு பெரும் அசூரர்களையும் படைத்தார்.

சூரர்களின் தவமும் பெற்ற வரமும்:

அவ்வசூரர்கள் தொள்ளாயிரத்து நூறு சிரசினை உடையவர்களாகவும்,வலிமையான கால்,கைகளையும் பெற்று மிகுந்த பலம் கொண்டவர்களாக இருந்தனர்.பின்னர் அவர்களை பூமியை சென்று ஆழுமாறு விடை கொடுத்து அனுப்பினார் சிவபெருமான்.பூமியை ஆண்ட அசூரர்கள் பின்னர் சிவ பெருமானை நோக்கி தவசிருந்தனர்.நீண்ட தவத்துக்கு பின்னர் சிவனை காண முடியாமல் சூரபத்மன் தீயில் விழுந்து பலியானான்.அதனைக் கண்ட சிங்கமுகா சூரன் தானும் தன் தலையை அறுத்து எறிந்தான்.

பின்னர் அவர்களது தவத்துக்கு இறங்கிய சிவனும்,உமையாளும் அவர்கள் முன் தோன்றி பல வரங்களை அளித்தனர்.அதன் மூலம் இறந்த சூரன் உயிர் பெற்று மீண்டும் பிறந்து வந்தான்.மேலும் அவர்கள் சிவபெருமானாலும்,ஐந்து முகம் கொண்டவர்களாலும்,உலகத்தில் பண்ணிய ஆயுதத்தாலும்,பல மன்னர்களாலும்,இந்திரனாலும் அழிக்க முடியாத கொடிய வரத்தை பெற்றனர்.மேலும் கையிலை மலையையும்,தேவர்களையும்,தேவ கன்னிகளையும் பணியாட்களாக தர வேண்டும் என வேண்டி பெற்றனர். அவர்கள் கேட்ட அனைத்து வரங்களையும் கொடுத்த சிவன் தன் தேவியுடன் கயிலைக்கு செல்ல முடியாமல்,பாற்கடலில் திருமால் அருகில் போய் அமர்ந்தார்.

சூரர்களின் கொடுமையும்,கந்தர் அவதாரமும்


பல்வேறு வரங்களையும் பெற்ற சூரர்கள் தேவர்களை அடிமைகளாக்கி புவியை அரசாண்டு வந்தனர்.அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள் பகவான் விஷ்னுவை நோக்கி முறையிட்டு வேண்டினர்.தேவர்களின் குறை தீர்க்க எண்ணி,சிவனிடம் விஷ்னு சென்று,அசுரர்கள் பெற்ற வரங்களை பற்றி கேட்டு அதற்க்கு ஏற்றபடி ஒரு அவதாரம் எடுக்க அதற்கு துணையாக,சக்தி தேவியானவள் வேலாயுதமாக மாறினாள்.இதுவே ஆறுமுகன் என்ற ஆறுமுகங்களையும்,பன்னிரு கரங்களையும் கொண்ட கந்த அவதாரமாகும்.

சிறந்த பலமுள்ள ஒன்பதுவீரர்களை தனக்கு துணையாக படைத்து,சன்னாசிகளை படைகளாக்கி ருத்திராட்சமனிந்து,படைகளுடன் ஒருமலையின் மேல் வந்து கூடாரமிட்டார் கந்த பெருமான்.பின்னர் "சூரர்களை அழித்து தேவர்கள் துயர் துடைத்து தர்மம் காக்க திருமால் ,கந்த கோலமிட்டு வந்து மலைமேல் கூடாரமிட்டு இருப்பதை" வீரபாகு தேவனை தூதாக அனுப்பி அசுரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.தூதை சூரர்களிடம் உரைத்த தேவன் கந்தனை வணங்கி,அவரை பணிந்து தேவர்களை விட்டுவிடுமாறு சூரர்களிடம் உரைத்தான்.அதை மதிக்காத சூரரகள் கந்தரை ஏளனமாக பேசி,தூதனிடம் பண்டாரத்தை போருக்கு வரச்சொல் என உரைத்தனர்.

சூரர்களின் முடிவும் தேவர்கள் விடுதலையும்

அதை அறிந்த கந்த பெருமாள் வேலாயுதமெடுத்து அதிக கோபங்கோண்டு சூரனை வதைக்க படையுடன் நடந்தார்.கந்தபெருமானை கண்ட மாத்திரத்திலேயே தனது வலுவையிழந்தான் சூரன்.பின்னர் சூரனை நோக்கி பல்வேறு புத்திமதிகளை கூறி அநியாயம் விட்டுவிடுமாறு கூறினார்.அறிவுரைகளை ஏற்க்க மறுத்த அசுரர்கள் கந்தருடன் போர் புரிந்தனர்.சூரனின் படைகள் அனைத்தையும் வென்ற கந்தபெருமான் முடிவில் தனது வேலாயுதத்தை எடுத்து சூரன் மேல் ஏவினார்.

வேலாயுதத்தால் தாக்கபட்ட சூரன் குறையுயிராய் வீழ்ந்து கிடந்தான்.பின்னர் அவனை நோக்கி என்பேச்சு கேளாமல் வீணாக மாண்டாயே என உரைத்த கந்தரிடம்,சக்தி அம்சமான வேலாயுதமே என்னை அழித்ததே தவிர உன்னால் என்னை வெல்ல முடியாது என கூறினான்.கோபங்கொண்ட கந்தர் அசூரனை முழுமையாக அழித்து தேவர்களுக்கு விடுதலை அழித்தார்.

அதன் பின் சூரனை கிழித்த வேலானது கடலில் மூழ்கி திருமால் பதம் போற்றி சாபம் தீர்ந்து,சக்தி உமையாக மாறி கையிலை சென்றாள்.

அய்யா உண்டு

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter