வருகைக்கு நன்றி!
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
நம்மிடம் இறைவன் எதை வேண்டுகிறான்?-1
Wednesday, March 23, 2011 |
Posted by
ANBUKODI |
Edit Post
அய்யா உண்டு
அன்பான அய்யா வழி மக்களுக்கு பணிவான வணக்கங்கள்.
நம்மிடம் இறைவன் எதை வேண்டுகிறான்? என்ற தலைப்பில் சில கருத்துக்களை இங்கு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.இதற்க்கு முன் வந்த சில பதிவுகளில் இறைவன் மிகப் பெரியவன்,அவனன்றி அனுவும் அசையாது அவனால் முடியாதது எதுவும் இல்லை என குறிப்பிட்டிருந்தேன்.இவ்வளவு சக்தி படைத்த இறைவன் நம்மிடம் எதிர்பார்க்க என்ன இருக்கிறது? என்ற கேள்வி உங்களுக்கு தோன்றும்.அது மிகச் சரியான கேள்விதான்.
நம்முள் இந்த கேள்வி தோன்றிவிட்டாலே இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன என்பது அனைவருக்கும் விளங்கி விடும்.ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு இந்த எண்ணம் வருவதே இல்லை.அவர்கள் மஹா சக்தி படைத்த இறைவனை சதாரண மனிதனை போலவே கருதிக்கொண்டு இறைவனுக்கு காணிக்கை ,படையல்,பலி இடுதல் இன்னும் அதிகமாக தங்களையே துன்புருத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
சாதாரண மனிதனிடம் ஒரு பொருளை கொடுத்து ஒருபொருளை வாங்குவதை போல கடவுளிடமும் வியாபாரம் நடத்துகிறார்கள்.எப்படியாவது இறைவனின் அருளை பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்,இவைகள் அதற்கான வழிகள் அல்ல.
இதை புரிந்து கொள்ளாமல் ஆடு மாடு கோழி போன்ற உயிர்களை பலியிடுதல்,காணிக்கை,காவடி வைத்தல் போன்ற செயல்களை செய்கின்றனர்.அனைவரும் ஒரு கணம் யோசித்து பார்க்க வேண்டும்.நாம் கொடுக்கும் காணிக்கையை வைத்துகொண்டு இறைவன் நகையோ,வீட்டு மனையோ வாங்க போவதில்லை.
நாம் கொடுக்கும் ஆடு,கோழி பலிகளை இறைவன் ஏற்று கொண்டு .அவற்றை உண்டு மகிழ்வதும் கிடையாது.நாம் பக்தி என்ற பெயரில் தன்னைதானே வருத்துவதை இறைவன் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
இதைதான் வைகுண்டர் தன் அருள் நூலில்,
"ஆடு கிடா கோழி பன்றி அறுத்துப் பலி கேட்கவில்லை
பொங்கரிசி கோழிமுட்டை பொரித்த கறி கேட்கவில்லை
உருகச் சுட்ட பணியாரம் அவல் உருண்டை கேட்கவில்லை
கருகச் சுட்ட முருக்குகளும் கடையாப்பால் கேட்கவில்லை"
பொங்கரிசி கோழிமுட்டை பொரித்த கறி கேட்கவில்லை
உருகச் சுட்ட பணியாரம் அவல் உருண்டை கேட்கவில்லை
கருகச் சுட்ட முருக்குகளும் கடையாப்பால் கேட்கவில்லை"
என்று உரைக்கிறார்.
காணிக்கை என்ற பெயரில் நாம் வாரி இரைக்கும் பணமும்,பொருளும் குறிப்பிட்ட மனிதனையே போய் சேருகிறது.அய்யா வழியை பற்றி தெரியாத எவறேனும் மேற்கண்ட வரிகளை படித்தால் "இவருக்கு என்னதான் வேண்டுமாம்?" என நினைக்கலாம்.
நாமும் அய்யா என்ன வேண்டும் என்கிறார் என காண்போம்.
காணிக்கை என்ற பெயரில் நாம் வாரி இரைக்கும் பணமும்,பொருளும் குறிப்பிட்ட மனிதனையே போய் சேருகிறது.அய்யா வழியை பற்றி தெரியாத எவறேனும் மேற்கண்ட வரிகளை படித்தால் "இவருக்கு என்னதான் வேண்டுமாம்?" என நினைக்கலாம்.
நாமும் அய்யா என்ன வேண்டும் என்கிறார் என காண்போம்.
அடுத்த பதிவில்...........................
அய்யா உண்டு!
தொடரும்.........
Subscribe to:
Post Comments (Atom)
இதை படித்தீர்களா?
உதவுங்கள்
அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அன்புக்கொடி மக்கள்
அய்யா வைகுண்டர்
அருள்வாக்கு
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.
அய்யாவழி வலைதளங்கள்
எங்களை தொடர்பு கொள்ள.....
EMAIL ID:anbukodi.co.cc@gmail.com
Mobile:8754563500
1 comments:
அயயா உன் துணைதான் வேண்டும்
Post a Comment