வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon பிச்சையம்மாளுக்கு செய்த அற்புதம்

" எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே வலியோரைக் கண்டு மகிழாதே என்மகனே "

அய்யா வழியின் பிறப்பிடமான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய கிராமம் சாரையோடு ஆகும்.அவ்வூரில் வாழ்ந்து வந்த வண்ணார் வகுப்பை சேர்ந்த பெண் பிச்சையம்மாள்.பிச்சையம்மாள் இளம் வதிலேயே அவளின் பெற்றோர்கள் இறந்து விட்டனர்.பெட்ட்றோரின் மறைவிற்கு பின் பிச்சையம்மாள் தனது சித்தப்பாவின் வீட்டில் வளர்ந்து வந்தால்.
பெயருக்கு ஏற்றது போல் வறுமை அவளது குடும்பத்தில் காணப்பட்டாலும் அழகில் பணக்காரியாகவே இருந்தாள் இந்த பிச்சையம்மாள்.இந்த பிச்சையம்மாள் தன் குல தொழிலான துணி துவைக்கும் வேலையையே செய்து வந்தால்.அவளுக்கு வயது 18 ஆனபோது அவளின் சித்தப்பாவும் இறந்து விட தனியாக தவித்தாள் தன் வருங்கால வாழ்வை எண்ணி அவள் அழாத நாட்களே இல்லை.
தனியே தவித்த அவள் நீசர்கள் நிறைந்த உலகில் வாழ்வை கடப்பது மிகவும் கடினமாக இருந்தது.பிச்சையம்மாளின் வயது 26ஐ தொட்டு விட்டது. தோள் கொடுத்து உதவ உற்றார்-உறவினர்கள் இல்லாததால் அவளது வாழ்க்கை பாலைவனமாய் வெறுமனே கிடந்தது.
"எனது வாழ்க்கை கடைசி வரைக்கும் இப்படியே போய்விடுமா?" என்று அவள் தனக்குள் புலம்பி அழுத நாட்கள் ஏராளம்! ஏராளம்!

ஒரு நாள் சாமிதோப்புக்கு சென்ற பிச்சையம்மாள் அய்யா வைகுண்டரின் பாதத்தில் விழுந்து வணங்கினாள்.அவளை "பிச்சையம்மா!" என்று அழைத்தார் அய்யா.
அப்போது பிச்சையம்மாளுக்கு ஒன்றும் ஓடவில்லை. நமது பெயர் எப்படி அய்யாவுக்குத் தெரியும்? என்று மனதுக்குள் பேராந்த பரவசத்திற்கு ஆனாள்.

அய்யாவிடம் தனது மனக்குறைகளை கொட்டி, அதற்கான தீர்வை வேண்டினாள். 26 வயது ஆகியும் இதுவரை திருமணம் ஆகவில்லை என்பதையும் சொன்னாள்.எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட அய்யா, "இன்று முதல் உன் துயரம் எல்லாம் நீங்கும். இன்னும் சில நாட்களில் நீ துணையோடு வருவாய்!" என்று வாழ்த்தினார்.

அய்யாவின் வாழ்த்தில் உள்ளம் பூரித்துப் போனாள் பிச்சையம்மாள். அய்யாவிடம் விடைபெற்று தனது ஊருக்கு திரும்பினாள்.ஒரு நாள் இரவு பிச்சையம்மாளின் கனவில் அய்யாவே தோன்றினார்."மகளே! உன் வீட்டுக்கு நாளை காலை எனது சீடர்கள் சிலர் வரவார்கள். அவர்களுக்கு உன் வீட்டிலேயே உண்ண உணவு கொடு" என்றார்.

ஏற்கனவே அய்யாவை நேரில் கண்டு பரவசம் ஆன பிச்சையம்மாள், தற்போது மீண்டும் அய்யாவே கனவில் தோன்றி அருளியதால் இன்னும் அதிகமான பரவசத்திற்கு ஆளானாள்.மறுநாள் காலை அய்யாவின் சீடர்களை எதிர்பார்த்து வீட்டு வாசலில் வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு பரிமாற அறுசுவை உணவும் தயாரித்து வைத்திருந்தாள்.சிறிதுநேரத்தில் அய்யாவின் சீடர்களான தர்ம சீசர், வீம சீசர், அர்ச்சுன சீசர், நகுல சீசர், சகாதேவ சீசர் ஆகிய 5 பேர் வந்தனர்.

தன் பெயரைத் தெரிவித்து, அவர்களை உள்ளம் மகிழ வரவேற்ற பிச்சையம்மாள், தனது குடிசை வீட்டிற்குள் அவர்களை அழைத்துச் சென்றாள். அய்யா கனவில் வந்து சொன்னது அப்படியே நடந்து விட்டதால் அப்போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது.அய்யாவின் வேண்டுகோளின் பேரில் தயாரித்து வைத்திருந்த உணவை அவர்களுக்கு பரிமாறத் தயாரானாள்.ஆனால், அந்த சீடர்கள் என்ன நினைத்தார்களோ, உணவு உட்கொள்ளாமல், திருநாமத்தை மட்டும் அவளுக்கு பூசிவிட்டு திரும்பி விட்டார்கள்.

பிச்சையம்மாளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தயார் செய்த உணவு வகைகளை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.சிறிதுநேர யோசனைக்கு பிறகு அந்த முடிவை எடுத்தாள்.தயார் செய்த அன்னம், சாம்பார் மற்றும் பதார்த்தங்களை, வீட்டின் பின்புறம் உள்ள காலியிடத்தில் ஆழமாகக் குழி தோண்டி, அதற்குள் பானையோடு புதைத்து விட்டாள்.

ஆசை ஆசையாய் தயார் செய்த உணவு வீணாகி விட்டதே என்று வெகுநேரம் அழுதாள். பிறகு, தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.இதற்கிடையில், பிச்சையம்மாள் வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பிய அய்யாவின் சீடர்கள் 5 பேரும் மறுநாள் சாமிதோப்பை அடைந்தார்கள்.அய்யாவை வணங்கி, கடந்த 7 நாட்களாக நாட்டு மக்களின் நிலையை அறியச் சென்ற போது தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை சொல்ல முயன்றனர்.

அப்போது அய்யா வைகுண்டரே குறுக்கிட்டு பேசினார்.

"பிச்சையம்மாள் உங்களுக்கு உண்ண உணவு கொடுத்தாளா?" என்று கேட்டார்.சீடர்கள் அப்படியே திகைத்துப் போய்விட்டார்கள்."எதற்காக வெளியே சென்று வந்தோம் என்பது பற்றி கேட்காமல், பிச்சையம்மாள் என்ற பெண்ணைப் பற்றி கேட்கிறாரே..." என்று எண்ணி அமைதியாக இருந்தனர்.மீண்டும் அதுபற்றி அய்யாவே கேட்க, அங்கு சாப்பிடவில்லை என்ற உண்மையை பயந்தபடியே ஒத்துக் கொண்டனர் அவர்கள்.

அப்போது அய்யாவே பேசினார்.

"சீடர்களே! பாவிகளால் வகுக்கப்பட்ட சாதி என்ற பேதத்தை உங்கள் மனதைவிட்டு அகற்றி விடுங்கள். எல்லோரும் என் மக்களே! அந்த பிச்சையம்மாள் என் மகள். அவள் உங்களுக்காகத் தயார் செய்த சாப்பாட்டை நீங்களே சாப்பிட்டாக வேண்டும். எங்கு யார் சாப்பாடு கொடுத்தாலும், அங்கே வேண்டாம் என்று நீங்கள் சொல்லக்கூடாது. இப்போது, உடனே பிச்சையம்மாள் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்று சாப்பிட்டு வாருங்கள்" என்று உத்தரவிட்டார் அய்யா.அடுத்த நிமிடமே அந்த 5 சீடர்களும் பிச்சையம்மாளின் ஊரான சாரையோடுக்கு புறப்பட்டனர். மறுநாள், அவளது வீட்டை அடைந்தனர்.

அங்கே பிச்சையம்மாள் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். அவளது வாடிய முகமும், தேகமும், அவள் சாப்பிட்டு சில நாட்கள் ஆகிவிட்டது என்பதை தெளிவுப்படுத்தின.சீடர்கள் அவளை இந்தக் கோலத்தில் பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த விவரங்களை தெளிவாகக் கூறி அவளுக்கு ஆறுதல் கூறினர். அய்யாவே சாப்பிட்டு வருமாறு பணித்ததையும் தெரிவித்தனர்.இதைக் கேட்ட மாத்திரத்தில் சோகத்தில் இருந்து மீண்டு மகிழ்ச்சி அடைந்தாள் பிச்சையம்மாள். உணவு படைக்க தயார் ஆனாள்.

அப்போதுதான் அவளுக்கு சமைக்கவே இல்லையே என்பது நினைவுக்கு வந்தது. இருந்தாலும், சோர்ந்து போய்விடவில்லை அவள்.4 நாட்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த சாப்பாட்டை எடுக்கத் தோண்டினாள்.அய்யாவே சீடர்களைச் சாப்பிட்டு வருமாறு தனது சீடர்களை அனுப்பி இருப்பதால், ஏற்கனவே புதைத்து வைத்து சாப்பாடு கெட்டுப்போய் இருக்காது என்ற நம்பிக்கையுடன் தோண்டினாள்.

புதைத்து வைத்திருந்த உணவு பானையை வெளியே எடுத்தாள். மூடியை திறந்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே உணவு கெட்டுப் போகாமல், அன்று சமைத்த உணவு போல் அப்படியே இருந்தது.அவளது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. அய்யாவின் சீடர்களும் அதைப் பார்த்து பரவசம் ஆனார்கள்.

சிறிது நேரத்தில் விருந்து நடைபெற்றது. சீடர்கள் 5 பேரும் பிச்சையம்மாள் பரிமாறிய சாப்பாட்டை மனமார ஏற்றுச் சாப்பிட்டனர்.விருந்து முடிந்ததும் அவளை ஆசீர்வதித்துவிட்டு சாமிதோப்புக்கு திரும்பினர்.இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் பிச்சையம்மாளுக்கு ஏற்ற வரன் அவளைத் தேடி வந்தது. அவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை தொடங்கினாள் அவள்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு என்ற இடத்தில் அவதரித்த அய்யா வைகுண்டர் நடத்திய அற்புதங்களில் இதுவும் ஒன்று.


Thanks to:nellaicharal.blogspot.com

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter