வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon பெண்கள் பற்றி அய்யா வைகுண்டர்...

"உந்தன் பலன்குலைக்க உலகில் பெண்ணை வகுத்து விட்டேன்"







     ஆம் அன்பர்களே இங்கு நாம் அய்யா வைகுண்டரின் பார்வையில் பெண்களின் அன்றைய, இன்றைய நிலைமை பற்றிக் காண்போம்.


      அய்யா வைகுண்டர் தனது அகிலத்தின் முதல் பகுதியிலேயே மனுநீதம் என்னும் தலைப்பில் அன்றைய தெச்சணத்து பெண்களின் பெருமைகள் பற்றி கூறுகின்றார்.அன்றைய பெண்களின் நிலைமையானது அத்தகைய சிறப்பு மிக்கதாய் இருந்தது. அதை அகிலம் பின்வருமாறு கூறுகின்றது,

"தெய்வ நிலைமை செப்பிய பின் தேசமதில்
நெய்நீதப் பெண்கள் நிலைமை கேள் அம்மானை
கணவன் மொழிய கலவுமொழி பேசாத
துணைவி நிலைமை சொல்லுவேன் அம்மானை
கற்கதவு போலக் கற்பு மனக்கதவு
தொற்கதவு ஞானத் திறவுகோல் அம்மானை
அன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும்
முன்பான சோதி முறைபோல் உறவாடிப்
போற்றியே நித்தம் பூசித்து அவள்மனதில்
சாற்றிய சொல்லைத் தவறாமலே மொழிவாள்
அரசன் துயில ஆராட்டி ஓராட்டிக்
கரமானது தடவிக் கால் தடவி நின்றிடுவாள்
துயின்றது அறிந்து துஞ்சுவாள் மங்கையரும்
மயன்ற ஒரு சாமம் மங்கை எழுந்திருந்து
முகத்தில் நீரிட்டு நான்முகத் தோனையும் தொழுது
அகத்துத் தெருமுற்றம் அலங்காரமாய்ப் பெருக்கி
பகுத்துவமாக பாரிப்பார் பெண்ணார்
தவத்துக்கு அரிய தையல் நல்லார் த்ங்களுட
மனுநீதம் சொல்லி வகுக்க முடியாது
கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல்
இனிதாக நாளும் இருக்கும் அந்த நாளையிலே" 


மேற்கண்ட அகிலத்தின் வரிகள் அன்றைய பெண்களின் கற்பொழுக்கம் பற்றி சிறப்பாக கூறுகின்றது .கற்பு விஷயத்தில் பெண்களின் மனமானது கல்லால் செய்த கதவை போன்றதாக இருந்தது.தன்கனவனை தவிர வேறெந்த ஆணையும் மனதில் எண்ணிக்கூட பார்க்காத ஒழுக்க நிலைமையில் வாழ்ந்தனர்.தன்னை பெற்றெடுத்த தாய்,தந்தைக்கும் மேலாக கனவனை மதிக்கும் பெண்கள் அன்று வாழ்ந்ததாக அகிலத்தில் அய்யா வைகுண்டர் உறைகின்றார்.மேலும் பெண்கள் உளைத்து விட்டு களைப்பில் வரும் தன் கணவனை ஆராட்டி ,ஓராட்டி,கைதடவி கால்தடவி தூங்க செய்வளாம் மேலும் தன் கணவன் தூங்கிய பின்னரே தானும் தூங்குவாளாம். காலையில் விடியும் முன்பாகவே எழுந்து நான்முகனை தொழுது  தெரு முற்றம் பெருக்கி தன் பணிகளை சிறப்பாக செய்வார்கள் என அகிலத்தில் அய்யா உரைக்கின்றார்.  அன்றைய பெண்கள் கற்பையும் ,கனவனையும் இறைவனுக்கு மேலாக மதித்தனர்  என்பது இவ்வரிகளின் மூலம் தெரிகின்றது. 

இத்தகைய பெண்களின் நிலைமையானது வைகுண்டர் காலத்தில் மிகவும் கொடுமையானதாக இருந்தது.ஆம் சாதி என்னும் பேயால் பல கொடுமைகளை அனுபவித்து வந்தனர். தன் மார்பை மறைக்கும் உரிமை கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை,அவர்களின் மார்பின் அளவிற்கும் வரிகள் விதிக்கப்பட்டன.இத்தகைய கொடுமைகளை கண்டு வெகுண்டெழுந்த வைகுண்டர் தோள்சீலை அணிய நீசர்களை எதிர்த்து போராடி அதில் வெற்றிக்கண்டார்.
தன் செய்த மூன்று பெரிய தவங்களில் ஒரு தவத்தை பெண்களுக்காகவே செய்தார்.

அனால் அத்தகைய பெண்களின் நிலைமை தற்போது எப்படி இருக்கின்றது?எப்படி இருக்கும் என வைகுண்டர் கூறியுள்ளார் பார்ப்போம்,

வைகுண்டர் கூறியுள்ளதை பார்க்கும் முன் இன்றைய பெண்களின் நிலைமைகளை சிறிது யோசித்து பார்ப்போம் ,உலகின் எல்லா  மூலையிலும் இன்று பெண்களின் ஆதிக்கம் பெருகி காணபடுவதை காணலாம்.இதை ஆதிக்கம் என்பதை விட அறிவு என்று கூறினாலும் தவறில்லை.ஆம் அனைத்திலும் பெண்கள் வந்துவிட்டார்கள் .இன்று நாட்டில் எது நடந்தாலும் அதில் பெண்களின் பங்கு இல்லாமல் இல்லை என்பது அனைவராலும் ஏற்று கொள்ளகூடிய ஒன்றாகும்.பாரதியின் பெண்கள் பற்றிய கனவுகள் நிறைவேறி விட்டது என்றே சொல்லலாம்.கல்வி,கலை,விஞ்ஞானம்,மருத்துவம்,காவல்துறை,இராணுவம்,அரசியல் என எல்லா இடத்திலும் பெண்களின் முன்னேற்றம் ஆண்களை மிஞ்சும் நிலையில் காணப்படுகிறது.இதை நாம் இன்று கண்ணால் காணும் ஒரு நிகழ்வு.ஆனால் இதையெல்லாம் சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பே தன் அகக் கண்ணில் கண்டு மகிழ்ந்தவர் அய்யா வைகுண்ட சாமி ஆவர். 
ஆம் அய்யா வைகுண்டர் தன் அகிலத்திரட்டு,அருள்நூலில் பெண்களின் முன்னேற்றம் பற்றி கூறி இருக்கிறார்.

அதை அகிலம் ,
"நாரியர்கள் கூட நாடெங்கும் வாசமிட்டு ஒருகுடைக்குள் ஆழ்வார்" 
"பெண்மூப்பு பெருகும்"
எனகூறுகின்றது இவ்வாறு பெண்கள் பல துறைகளில் முன்னேறி பெண்கள் சமுதாயதிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
             பெண்களின் இத்தகைய சிறப்புகளை கூறிய வைகுண்டர் பின்வரும் செய்திகளையும் சேர்த்தே கூறுகின்றார்.

"உந்தன் பலன்குலைக்க உலகில் பெண்ணை வகுத்து விட்டேன்"
"பெண்ணாலே ஆணழிவுழிவு பெருகுமடா  இப்புவியில்"  
       என்றவரிகள் பெண்களால் ஆண்களின் பலம் அளிக்கப்படும் என்பதை காட்டுகிறது.இந்த வாக்கியம் இன்றைய காலகட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளால் உண்மையாகிறதை மறுக்க இயலாது.

        மேலும் அகிலம், 
            "கள்ளக் கணவருட கருத்துமிக மாதருக்காம் "
"கற்பிகழாம் மாதர்கற் பேயிழந்து தனுவாய்ப் புருசருட தன்வாக்கு கேளார்கள் "

 என கூறுகின்றது,
    இத்தகைய பெண்கள் இன்றைய காலகட்டத்தில் நிறையவே பெருகி விட்டனர் என்பது தினசரி செய்திகள் மூலமாக நாம் அனைவரும் அறிந்ததே ஆகும்.அகிலத்தில் முதல் பகுதியில் மனுநீதில் கூறப்பட்ட பண்புகளை உடைய பெண்கள் தற்போது மிக குறைவாகவே உள்ளனர் எனலாம்.
                வைகுண்டர் எதற்காக இவற்றை எல்லாம் முன்னரே கூறினார்? அவரின் பெருமையை உலகம் அறிய வேண்டும் என்பதற்கா? ஒருபோதும் இல்லை கலியின் கொடிய தன்மையை உணர்ந்த வைகுண்டர் தன் மக்கள் கலியின் பிடியில் சிக்கி இத்தகைய பாவ செயலில் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அய்யா வைத்த எச்சரிக்கையே இவ்வரிகள் ஆகும்.அதை புரிந்து அய்யா வழி பெண்கள் மற்ற பெண்களுக்கு ஒழுக்க நெறிகளில் முன்னுதாரமாக இருக்க வேண்டும்.


                                                                    அய்யா உண்டு 

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter