வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon அய்யா வழி ஒரு ஜாதி வழியா?

 அய்யா உண்டு
          

          அன்பர்களே இன்றும் அய்யா வழியை பற்றி சரியாக  அறியாதவர்கள்  கேட்கும்  முதல் கேள்வி அய்யா வழி என்பது நாடார் மக்களின் வழியா? என்பதாகும் . என்னிடமும் பல நண்பர்கள் அய்யா வழியின் வரலாற்றை கேட்ட பின்பு இக்கேள்வியை கேட்டுள்ளனர்.
                  ஏன் இந்த கேள்வி வைகுண்டர் உலகில் சாணார் (நாடார்) குலத்தில் பிறந்தது அவர் தவறா? உலகில் ஜாதி முறையை வைத்தது மனிதன் செய்த தவறாகும்.உலகில் அதர்மம் அதிகமாகும் பொது இறைவன் அவதாரம் எடுக்கிறார் என்பது உலக மக்களின் நம்பிக்கை. அவ்வாறு அவதாரம் எடுக்கும் போது மனிதன் உருவாக்கிய ஏதேனும் ஒரு ஜாதிலேதான் பிறக்க முடியும்.
                   அந்தப்படியே அய்யா வைகுண்டரும் மிகவும் தாழ்ந்து கிடந்த சாணர் குலத்தில் பிறந்து அவர்களின் குறைதீர்த்தார். ஜாதி என்னும் கொடிய கலியில் சிக்கி பல்வேறு கொடுமைகளை அனுபவித்த மக்களை காக்க அதே தாழ்ந்த ஜாதியிலேயே இறைவன் வைகுண்டமாய் பிறந்தார். ஜாதியை அளிக்க பிறந்த வழி அய்யா வழியாகும்,அதனை ஜாதி வழி என்பது தவறான ஒரு கருத்து ஆகும். ஜாதிக்காக அய்யா வழி உருவாக்க பட்டிருந்தால் ஆரம்ப காலத்திலேயே பெரும் அழிவை கண்டிருக்க வேண்டும் .

 "சாதி பதினெட்டும் தன்னால் கேடாகும் வரை  
நீதி அழியாதே நீ சாபங்கூராதே"

"சாதி பதினெட்டும் தலையாட்டி பேய்களையும்
வாரிமலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு"

என்று விஞ்சையில் நாராயணர் கூறுகின்றார் இவ்வரியின் நோக்கம் ஜாதிகளை அளிப்பதாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இவ்வாறு கூறிய இறைவன் எப்படி ஜாதியை,ஜாதி வழியை தோற்றுவிப்பார்?
சத்திரியனாக வந்த ராமனையும்,இடையனாக வந்த கிருஷ்ணனையும்,பிராமணனாக வந்த வாமனனையும்,யூதராக வந்த இயேசுவையும் ஏற்று கொள்ளும் மனம் ஏன் சாணாராக  வந்த வைகுண்டரை ஏற்க மறுக்கிறது?


   அய்யாவழி சாதி ஒடுக்குமுறையை கடைபிடிக்காத ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. சாதிகளற்ற, ஒரே குடும்பமாக வாழ்ந்த பண்டைய சமுதாயத்தைப் பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது. சாதியை உருவாக்கியவர்களை 'கலிநீசன்' என கடுமையாக சாடுகிறார் அய்யா. "18 சாதிகளையும், தீயசக்திகளையும் மலைகளிலும், தீயிலும், கடலிலிலும் எறிந்துவிடுங்கள்", "பலமுள்ளவர்கள், பலமிழந்தவர்கள் மத்தியில் அடக்குமுறைகள் கூடாது", "சாதி தானாகவே அழியும்" என பல இடங்களில் சாதி அமைப்பை பற்றி அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ளது.

அய்யா வழி தோன்றிய ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் நாடார்களே தாங்கல் வைத்து வணங்கினர். அனால் தற்போது அனைத்து ஜாதி மக்களும் அய்யாவை ஏற்று வணங்க தொடக்கிவிட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

அய்யா உண்டு 

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter