வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon உலக தெய்வம்


      இந்த பரந்து விரிந்த உலகத்தில் எத்தனையோ வகையான மக்களும்,மதங்களும்,தெய்வங்களும் உள்ளன.இந்த மதங்கள் மக்கள்,இறைவனை காண உதவும் ஒருவகை ஆடியாக உள்ளன.
மனிதர்கள் தங்கள் கண்களின் தன்மைக்கு ஏற்ப பல வேறுபட்ட கண்ணாடிகளை அணிவதைபோல,தங்கள் அறிவுக்கு எட்டியவாறும் தான் உணர்ந்து கொண்ட அளவிற்கு ஏற்ப்பவும், தங்கள் பழக்கவழக்கத்திற்கு  ஏற்ப்பவும் இறைவனை காண்கின்றனர்.
   இது மனிதனால் ஏற்பட்ட பிரிவே அன்றி இறைவனில் எந்த ஒரு பிரிவும் இல்லை.இறைவன் மனிதனின் நம்பிக்கைக்கு ஏற்ப திகழ்ந்து, தன்னை உண்மையாக நம்பியவர்களுக்கு அருளும்,  நற்கதியும் அளிக்கிறார்.   
        இதையே அய்யா

"நினைக்கின்ற நினைப்புக்கு தக்க இருந்து விளையாடுவேன் நான் சுவாமி"

என்கிறார்.
    இதன் பொருள் மனிதன் இறைவனை எப்பொருளினுள் வைத்து பார்கிறானோ அப்பொருளாகவே இறைவன் இருந்து அருளுகிறார் என்பதாகும்.
         பல ஆயிரம் ஆண்டுகட்கு முன் இறைவன் இயேசுவாக அப்பகுதில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பிறந்து பல அறிவுகளை கூறி அற்புதங்கள் செய்தார்.  அது போலவே இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நபிகளாக தோன்றினர்.
     அதே இறைவனே இந்து மக்களின் நம்பிக்கையான சிவன்,  பிரம்மா,விஷ்ணு ஆகியோரின் கலவையாக அய்யா வைகுண்டர் எனும் நாமத்தோடு அவதரித்து சான்றோரை காத்தார்.
   இவைகளின் அடிப்படையில் இறைவன் பல்வேறு நாமங்களை உடையவன் ஆவான்.அவன் தன் பக்தர்களை காக்க பல நேரங்களில் பல வடிவில் தோன்றுகிறான்.அவைகளில் மனிதன் அறிந்து கண்டவை அய்யா,இயேசு,நபிகள் என்றால் அறியதவைகள் இன்னும் ஏராளம் ஆகும்.

 இருப்பினும் இறைவனை வழிபடுவதில் ஒருமைப்பாடு வேண்டும் என்பதற்காக வைகுண்டர் வெவ்வேறு தெய்வங்களை வழிபடுவதை நிறுத்தி இறைவனை ஜோதி வடிவில் வழிபட வைத்தார்.
                                          
                                                        அய்யா உண்டு.  


1 comments:

Balaji said...

மேலும் அகிலத்திரட்டில் வைகுண்டருக்கு சொன்ன உபதேசத்தில்,

"நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று
வான்பெரிதென்று அறியாமல் மாள்வார் வீண்வேதமுள்ளோர்
ஒருவேதம் தொப்பி உலகமெலாம் போடென்பான்
மற்றோருவேதம் சிலுவை வையமெலாம் போடென்பான்
அத்தறுதிவேதம் அவன் சவுக்கம் போடென்பான்
குற்றம் உரைப்பான் கொடுவேதக்காரன் அவன்
ஒருத்தர்க்கு ஒருத்தர் உனக்கெனக் கென்றேதான்
உறுதி அழிந்து ஒன்றிலும் கைகாணாமல்
குறுகி வழிமுட்டி குறைநோவு கொண்டுடைந்து
மறுகித் தவித்து மாள்வார் வீண்வேதமுள்ளோர்"

என்றும் கூறப்பட்டுள்ளது

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter