வருகைக்கு நன்றி!
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
அன்பு என்னும் கோட்டைக் கட்டி அரசாட்சி செய்பவரே ....
Tuesday, May 17, 2011 |
Posted by
ANBUKODI |
Edit Post
அன்பு என்னும் கோட்டைக் கட்டி அரசாட்சி செய்பவரே
வம்பு கலி வேரறுக்க வையமதில் வந்தவரே
அருள் வேண்டி பாடுகின்றேன்
உம் அடி வேண்டி தேடுகின்றேன்
அய்யா உம் அடி வேண்டி தேடுகின்றேன்
மண்ணிலுள்ள தெய்வமெல்லாம் மண்சிலையாய் நின்றதைய்யா
மக்கள் பட்ட இன்னல்களை மாற்றி தரவில்லையய்யா
ஆண்டி வேடம் பூண்டு வந்தாய்
அடிகள் பட்டும் பொறுமை கொண்டாய்
எனக்காய் அடிகள் பட்டும் பொறுமை கொண்டாய்
பாவிநீச கலியனெல்லாம் பரம்பொருளை அறியவில்லை
பரிட்சைகள் பலவைத்தும் மாயவரை மதிக்கவில்லை
சாதித்து நின்றாய் அய்யா
போதித்து வென்றாய் அய்யா
கலிக்கு போதித்து வென்றாய் அய்யா
சாதியாலே ஒதுக்கப்பட்ட சான்றோரை காத்து நின்றாய்
ஆதிகுருவாக நின்று அன்பினாலே அரவணைத்தாய்
அன்புவழி தந்தாய் அய்யா
அகிலமாள வைப்பாய் அய்யா
சான்றோரை அகிலமாள வைப்பாய் அய்யா
~~~~~~அய்யா உண்டு~~~~~~~~
எழுதியவர்:Administrator,www.anbukodi.co.cc
எழுதியவர்:Administrator,www.anbukodi.co.cc
Subscribe to:
Post Comments (Atom)
இதை படித்தீர்களா?
உதவுங்கள்
அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அன்புக்கொடி மக்கள்
அய்யா வைகுண்டர்
அருள்வாக்கு
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.
அய்யாவழி வலைதளங்கள்
எங்களை தொடர்பு கொள்ள.....
EMAIL ID:anbukodi.co.cc@gmail.com
Mobile:8754563500
0 comments:
Post a Comment