வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon சங்கும்,சக்கரமும்-ஒரு பார்வை


அய்யா உண்டு!

அன்பான அய்யாவின் பிள்ளைகளுக்கும்,அன்பு குடி கொண்ட சான்றோர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.நமது அய்யா வைகுண்டர் தனது தந்தையாக குறிப்பிடும் திருமாலின் கைகளில் உள்ள திருசங்கு மற்றும்,திருசக்கரம் பற்றி இந்த பதிவில் சிறிது காண்போம்.அய்யா வைகுண்டர் திருமாலை தனது தந்தையாக முதலில் கூறினாலும்,தான் செய்த தவத்தின் பலனால் முப்பொருளையும் தன்னுள் அடக்கினார்.எனவே அவரே திருமாலுமாகிறார்.

நமது அய்யா வழி தாங்கல் பலவற்றில் சங்கு சின்னம் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும்.சக்கரம் இருப்பதில்லை.அப்படியானால் சக்கரம் வைகுண்டருக்கு உதவாதா?அது தற்போது யாரிடம் உள்ளது ,எனக் காண்போம்.
திருமாலானவர் கலியுகத்திற்க்கு முந்தய யுகங்களில் சங்கு,சக்கரங்களை தனது ஆயுதமாக கொண்டிருந்தார்.ஆனால் கலியுகம் தொடங்கி கலியன் பிறந்து வரும் போதே திருமாலின் சக்கரத்தை வரமாக சிவனிடம் வாங்கி விடுகிறான்.திருமாலின் ஆயுதங்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது இந்த சக்கராயுதம்.ஆனால் அதனை கலியன் எடுத்து கொள்ள நேர்ந்தது ஏன்?

கலியனிடம் சென்ற சக்கராயுதத்தால் வைகுண்டருக்கு என்ன பயன் மற்றும் கலியனுக்குத்தான் என்ன பயன் என மனம் கேட்ட கேள்விகளுக்கு உணர்த்த பட்ட சில பதில்களை காண்போம்.உலகில் ஒரு பொருள் உருவாகும் போதே அதற்கான முடிவும் குறிக்கப்பட்டுவிடும் என்பார்கள்.அது கலிக்கும் பொருந்தும்,ஆம் அன்பர்களே,கலியன் இறைவனால் பிறவி செய்ய படுவதற்க்கு முன்பே தானாக தோன்றியவன்.அவன் தோன்றிய அன்றே அவன் அழிவதற்க்கான காரணிகள் படைக்கப்பட்டுவிட்டன.

கலியனின் வேண்டுகோளுக்கு இணங்கவே அவைகள் படைக்கப் பட்டன.ஆம் பார்வதி தேவியைக் கண்டு அவள் அழகில் மயங்கியவன் அவளை விட பல மடங்கு அழகுள்ள பெண்ணை சிவனிடம் கேட்டான்.சிவன் பெண்ணை படைத்து கொடுத்த அடுத்த கனமே அளவில்லாத காம எண்ணங்கள் அவனுள் தோன்றியது.இந்த காம எண்ணமே அவனது அழிவிற்க்கு முதல் காரணியாகும்.

அடுத்த படியாக சிவனிடம் பல்வேறு வரங்களை பெறுகிறான். அதில் ஒன்று தான் திருமாலின் சக்கராயுதமாகும்.அந்த சக்கராயுதத்தை கலியன் பெற்றது அவனுக்கு மிகப் பெரிய பயன் தான்.ஆனால் அடுத்த சில கனங்களிலேயே அவன் அதனுடய பலனையும் இழந்து விடுகிறான்.ஆம் நண்பர்களே திருமால் ஆடிய பண்டார வேஷத்தில் ஏமாந்து,பணத்தின் மேல் ஆசை கொண்டு வலிய சக்கராயுதத்தை பணமாக மாற்றிக் பெற்றுக் கொண்டான்.இதுதான் கலியன் அழிவிற்க்கு வகுக்கப் பட்ட இரண்டாவது காரணி.

அய்யாவின் அருனூலில் சக்கராயுதத்தை பற்றி பின்வரும் வரிகள் காணப்படுகின்றன.

"கலியுகம் முடிந்து போச்சு சக்கராயுதத்துக்கு இரை காணும் பருவமாச்சே சிவனே அய்யா"

"வையகத்தில் யாவருக்கும் ஒரு வலுச்சக்கரம் வருகுதப்பா"

இந்த வரிகள் கலியுகத்தில் வாழும் மக்களை(இறைவனை உணராத கலியர்களை)அழிக்க சக்கராயுதம் வருவதாக உணர்த்துகின்றன.

ஆனால் சக்கராயுதம் கலியன் கையில் இருப்பதால் அது எப்படி கலியனை அழிக்கும் என்ற கேள்வி எழுகிறதா?சக்கராயுதம் கலியன் கையில் பணமாக உள்ளதை சிந்தித்து பாருங்கள்.இன்றய உலகில் நடைபெறும் பல்வேறு அழிவுகள்,சண்டைகள்,கொலைகளுக்கு மூலகாரணியாக இருப்பது காமமும்,பணமும் ஆகும்.பணத்தாசையே பல்வேறு அழிவுகளுக்கு காரணமாகிறது என்பது தெளிவான ஒன்று.ஆகவே சக்கராயுதம் கலியனிடன் இருந்தாலும்,வைகுண்டர் கலியை அழிக்க அதுவும் பெருமளவு உதவுகிறது.பணத்தாசை கொண்டவர்கள் அந்த பணத்தாசையாலே அழிவதை நாம் இவ்வுலகில் இன்று காண்கிறோம்.

அடுத்ததாக சங்கினை பற்றிக் காண்போம்.சங்கு முழங்கும் இடங்களில் தீய சக்திகள் அழிந்து விடுமாம்.அனைத்து அய்யா வழி தாங்கல்களிலும் சங்கு முழங்கப் படுகிறது.இது கலி என்ற தீய எண்ணங்கள் அழிவதற்க்கான முழக்கம் ஆகும்.ஒரு சங்கினை எடுத்து நம் காதுகளில் வைக்கும் போது கடலலையின் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும்.இதை கேட்கும் போதெல்லாம் கடலுக்குள் இருக்கும் துவாரகயின் எண்ணம் தான் நம் மனதில் தோன்ற வேண்டும்.விடாது தொடர்ந்து ஒலிக்கும் ஒலியைப் போல வைகுண்டரின் உபதேசங்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.அவ்வாறு ஒலிக்கும் போது நம் மனதிலுள்ள கலியானது அழியும்.

ஆகவே சக்கரத்தால்(பணத்தாசையால்) அழியாமல் சங்கின் ஒலியை போன்ற அய்யாவின் உபதேசத்தின் படி நடந்து அழியாத தர்மயுக வாழ்வை பெறுவோம்.

தவறுகள் இருப்பின் அய்யா பொறுத்து அய்யா மாப்பு தரனும்!
அய்யா உண்டு!

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter