வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon அகிலத்திரட்டு கதை சுருக்கம்(நீடிய யுகம்,சதிரயுகம்)-பகுதி 1

அய்யா உண்டு!
           அன்பான அன்புக்கொடி மக்களே இங்கு நாம் அய்யா வைகுண்டர் அருளிதந்த அகிலத்திரட்டு ஆகமத்தின் கதையை சுருக்கமாக காண்போம்.

         அகிலத்திரட்டில் காப்பு, தெட்சனத்தின் புதுமை,தெய்வ நீதம்,மனு நீதம்,கைலை வளமை போன்றவை பற்றிக் கூறிய பின்பு யுகங்களின் தோற்றமும்,இறைவனின் அவதாரங்கள் பற்றிய  செய்திகள் கூறப் பட்டுள்ளன.இந்த தகவல்கள் யாவும் பாற்கடல் நாயகன் ,பள்ளிகொண்ட தேவன் ,நல்லோர் உள்ளம் வாழ்பவனாகிய  நாராயண பரம்பொருள் தன் நாயகியாகிய லட்சுமி தேவிக்கு உரைப்பதை போன்று அருளப்பட்டுள்ளது.

நீடிய யுகம் 
           
               அதன் படி தேவசங்கங்கள் கூடி,விஷ்ணு, சிவன்,பிரம்மா ஆகிய மூவரும் கூடி உலகை படைத்து புதிய யுகத்தை படைக்கின்றனர்.அவ்வாறு படைக்கப்பட்ட யுகத்திற்கு என்ன பெயர் இடலாம் என ஆகமத்தைப் பார்த்து நீடிய யுகம் என நாமம் சூட்டினர்.பின் அந்த யுகத்தில் உயிர்களை படைக்க எண்ணுகிறார் சிவன். அப்போது அதற்காக ஒரு velviyai  வளர்த்தார் சிவன். அதன் முடிவில் ஆணவமே வடிவான குறோணி எனும் ஒரு அசுரன் பிறந்து வருகிறான்.தேவர்கள் தங்களுக்கு எதிரிகளே இல்லை என்ற ஆணவத்தில்  மூவரையும் மதிக்க தவறினார்கள்.அவர்களின் ஆணவத்தை அழித்து பாடம் புகட்டவே ஆணவமே வடிவான குறோணியை இறைவன் படைக்கின்றார்.

                     அவ்வாறு படைக்கப் பட்ட குறோணி மிகக்கொடியவானாக  விளங்கினான்.பெரிய மலையைப் போல பிறந்த அவனுக்கு அறம் என்றால் என்னவென்றே தெரியாதவனாய் இருந்தான்.முகத்தில் அமைய வேண்டிய கண்களெல்லாம் அவனின் முதுகில்  காணப்பட்டன.ஒரு கோடி கைகளையும் ஒருகோடி கால்களையும் கொண்ட அவனின் உயரம் நான்கு கோடி முழமாகும்.அவன் அடியெடுத்து வைத்து நடக்கும் போது இந்த பரந்த உலகமும், கைலையும் கிடுகிடுவென நடுங்கியது.

                 அத்தகைய கொடிய குறோணி எந்நேரமும் உறங்கி கொண்டு இருந்தான் .திடீரென விழித்தவன் பசியில் கட நீரத்தனையும் குடித்து வயிறு எறிய கண்டு  உலகத்தையே விழுங்க முயன்றவன் கண்களில் அழகான கைலை தென்பட அதனை எடுத்து விழுங்க முயன்றான் அதனைக் கண்ட மாயவர் நாராயணர் அங்கிருந்து மண்ணுலகில்   குதித்து தப்பி ஓடினார்.கோபங்கொண்ட நாராயணர் குறோணியை அளிக்க எண்ணி  சிவபெருமானை நோக்கி கொடிய குறோணியை ஆறு துண்டுகளாக வெட்டி வீச வரம்  தாரும் என  தவம் இருந்தார். 

                            தவத்தைக் கண்டு மெச்சிய சிவன் பண்டார வேசமிட்டு வந்து யார் நீ ?என்னை நினைத்து தவமிருக்க காரணம் என்ன என்று கேட்டார்.அவரிடம் நடந்ததை கூறிய நாராயணர் அந்த கொடிய குறோணியை ஆறுதுண்டுகளாக வெட்ட வரம் வேண்டினார்.அப்பொழுது சிவன் , நாராயணரை நோக்கி நாராயணா,இப்பொழுது இந்த அசுரனை ஆறுதுண்டுகளாக வெட்டி அழித்தால் அவனுடைய ஒவ்வொரு துண்டுகளும் பின்வரும் யுகங்களில் உனக்கே எதிரியாக தோன்றி தருமத்திற்கு எதிரான செயல்களை புரிந்து வருவான், அப்பொழுதும் நீயே அவதாரமாக அவதரித்து அவனை அழித்து தருமத்தை நிலைநாட்ட வேண்டும் எனகூறுகிறார்.பின் ஒரு வீரவாளை நாராயணரிடம் கொடுத்து குறோணியை வெட்ட வரம் கொடுக்கிறார்.

           பின் நாராயணர் குறோனியுடன்  யுத்தம் செய்து அவனை ஆறுதுண்டுகளாக வெட்டுகிறார்.வெட்டப் பட்ட துண்டுகளை  ஆறு குழிகள் தோண்டி குறோணியின் ரத்தமும் சேர்த்து புதைத்தனர். இத்துடன் இறைவன் படைத்த முதல் யுகமாகிய நீடிய யுகம் முடிகிறது.

சதிர யுகம்:

                       நீடிய யுகத்தின் முடிவை தொடர்ந்து சதிர யுகம் என்ற இரண்டாம் யுகத்தை வகுத்தார் சிவபெருமான்.அந்த இரண்டாம் யுகமதில் குறோணியின் ஆறு துண்டுகளில் ஒரு துண்டை  எடுத்து அதனை குண்டோமசாலி என்ற அசுரனாகவும் ,அத்துண்டுக்குரிய உதிரத்தை எல்லாம் அவனுக்கு துணையாக அசுர குலமாக பிறவி செய்தார் ஈசன்.அந்த குன்டோமசாலி என்ற அசுரன் குறோணியின் கெட்ட எண்ணங்களில்  சிறிதும் மாறாதவனாக இருந்தான்.அவனுடைய உயரம்  நானூறாயிரம் முழங்களாகவும் ,முந்நூறு கைகளையும்,முந்நூறு கால்களையும் கொண்டு யானையின் துதிக் கையை போன்ற தோலினை கொண்டவனாகவும் இருந்தான்.

                      இறை சிந்தனையே இல்லாத அவன் எந்நேரமும் அட்டை போலவே சுருண்டு கிடந்தான்.வயிறு பசிக்கும் போதெல்லாம் தன்னுடன் படைக்கப்பட்ட அசுரர்களையே அள்ளி உட்கொண்டான்.அப்படியே அவன்  இனமும் அழிந்து போனது.நீண்ட நாளாக உறங்கிய அசுரன் குண்டோமசாலி திடீரென விழித்து பசியால் துடிக்க உன்ன உணவில்லாமல் பெரும் சத்தத்தை எழுப்பினான்.   அதைகேட்டு அதிர்ந்த திருமால் சிவனிடம் உரைத்து கேட்கையிலே சிவன் ,சதிர யுகத்தில் படைக்கப்பட்டுள்ள குண்டோமசாலியனை பற்றிக் கூறினார்.அவனை அழிக்கும் காலம் நெருங்கியது என்றெண்ணி மாயவர் அவனை அழிக்க திட்டமிடுகிறார்.

              அதன்பின் மேலோக தேவர்களை எல்லாம் இரைகளாக்கி ,மறையதனை  கயிறாக்கி ,வாயுவை தோணியாக்கி,வருணனை நிரப்பாக்கி கடலை ஓடையாக்கி அதில் மூவரும் ஏறி தோணியை  தள்ளினார்கள்.பின்னர் மாயவர் தூண்டிலை போட அதில் உள்ள தேவர்களை இரை என்று எண்ணிய குண்டோமசாலி இரையை உண்பதாக எண்ணி தூண்டிலை கவ்வி தன் உயிரை இழந்தான்.இத்துடன் இறைவன் படைத்த இரண்டாவது யுகமான  சதிர யுகம் முடிவுக்கு வந்தது.

                                                                      அய்யா உண்டு!
                                                                                                                               தொடரும்........


0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter