வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

PostHeaderIcon தாமரை ஜோதி

                  





" சத்துரு வோடும் சாந்தமுடனே இரு புத்திர ரோடும் பேசியிரு என்மகனே "


அய்யாவழியின் சமயச்சின்னமாவது சுடரை தாங்கும் தாமரையாகும். இதில் தாமரை, 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யாவழியின் சின்னத்தில் பயன்படுத்தப்படும் தாமரை சஹஸ்ராரச் சக்கரமாதலால் இதன் தாமரைக்கு தண்டு வரையப்படாது. ஏழு(மேல்) + ஏழு(கீழ்) என பதினான்கு இதழமைப்பு பொதுவாக வழக்கத்திலிருக்கிறது. மேலும் தாங்கல்களில் இச்சின்னத்தையே தலைகீழான தாமரை இதழ்களுடன் (சஹஸ்ராரத்தில் உள்ளது போல்) பயன்படுத்தும் ஒரு புதிய கட்டிடக் கலையமைப்பு அண்மைகாலத்தில் வழக்கத்துக்கு வந்திருக்கிறது.
         

              அகிலத்தின் புராணவோட்டம் கூறும் எட்டு யுகத்தை தத்துவ ரீதியாக மனித உடம்பின் எட்டு ஆதாரங்கள் எனவும் கூறுவர். முதல் நீடிய யுகம் விந்து எனவும், கடைசி மற்றும் பரிபூரண நிலையான சஹஸ்ராரம் என்பது தர்ம யுகம், எனவும் இத்தத்துவம் விளக்கம் பெறுகிறது. இக்கருத்தோட்டத்தில் குண்டலினி எனப்படும் தன்னுணர்வு (சக்தி) பரஞானத்தின் துவக்கமான விந்து எனப்படும் நீடியயுகத்திலிருந்து அது பரிபூரணமடையும் சஹஸ்ராரமெனப்படும் தர்ம யுகத்தை அடையவேண்டும். அங்கே ஏகம் எனப்படும் பரிபூரண ஒருமையுடன் ஜீவான்மா சங்கமித்து, தனக்கு இனமான தனி நாமரூபம் அழிந்து, தன்னிலை கெட்டு, அதுவும் ஏகமாகிறது. ஏகமென்பது வைகுண்டம் (வைகுண்டர்) ஆதலால் வைகுண்டர் தர்ம யுகத்தை ஆள்கிறார் அல்லது வைகுண்டர் சஹஸ்ராரத்தில் ஜீவாத்மாக்களால் முழுமையாக உணரப்படுகிறார்.

          

0 comments:

Post a Comment

இதை படித்தீர்களா?

உதவுங்கள்

அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அய்யா உண்டு!

அன்புக்கொடி மக்கள்

அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு

நாட்டுக்கு அரிவிதி நான் நாராயணனும் நான் பட்சி பறவை பல சீவசெந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவர்ண நாதனும் நான் மண் ஏழும் அளந்த மாயப்பெருமாள் நான் விண் ஏழும் அளந்த விஷ்ணு திருவுளம் நான் ஏகம் படைத்தவன் நான் எங்கும் நிறைந்தவன் நான் நாதக்கடல் துயின்ற நாகமணி நான் அல்லவோ ஆகப் பொருள்மூன்றும் அடக்கம் ஒன்று ஆனதால் சீவசெந்துக்கு எல்லாம் சீவனும் நான் அல்லவோ
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ள.....

EMAIL ID:anbukodi.co.cc@gmail.com

Mobile:8754563500

எங்களுடன் இணையுங்கள்

Follow Vaikundar on Twitter