வருகைக்கு நன்றி!
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
சான்றோர் எனப்படுபவர் யார்?
அன்பான அய்யாவழி அன்பர்களே அகிலத்திரட்டு மற்றும் அருள்நூல் ஆகமங்கள் முழுவதும் சான்றோரைக் காக்க நான் வருவேன் என்று அய்யா உரைக்கிறாரே.இத்தனை சிறப்பு மிக்க இந்த சான்றோர்கள் யார் எனக் காண்போம்.
பகவான் விஷ்ணு தன் கிருஷ்ண அவதாரத்தை முடித்து விட்டு வரும் வேளையில் அயோத அமிர்த கங்கையில் நீராடிய ஏழு கன்னியர்களை காண்கிறார் .அவர்கள் தினமும் கைலையில் உள்ள சிவனுக்கு பணிவிடை செய்யும் பெண்கள் ஆவார்கள்.அவர்களை வழிமறித்து அய்யா பண்டார வேசமிட்டு தனக்கு பணிவிடை செய்ய சொல்லி வம்பு செய்தார்.அப்போது சற்று ஆணவமாக பேசிய பெண்களை சோதிக்க பெரும் குளிரை ஏவுகின்றார்.குளிரை தங்காத கன்னியர்கள் நெருப்பாய் நின்ற விஷ்ணுவை கட்டி அனைகிறார்கள்.அதனால் எழு கன்னியர்களுக்கும் ஏழு பிள்ளைகள் பிறந்தன.அந்த ஏழு பிள்ளைகளே சான்றோர்களாவார்கள்.இந்நிகழ்வு தேவர்களை பூமியில் படைக்க பரம்பொருள் ஆடிய திருவிளையாடல் ஆகும்.
இவ்வாறு கற்பிழந்த கன்னியர்கள் செய்த தவறை கண்டு வருந்தி பிள்ளைகளை வனதிலிட்டுவிட்டு தவம் செய்ய சென்றனர்.பின் தன் பிள்ளைகளை நாராயணர் தங்கை காளியை வரவழைத்து அவளிடம் வளர்க்க சொல்கிறார். இதனை அகிலம் பின்வருமாறு உரைக்கிறது
"சீலமுள்ள காளிஎன் சித்திரப் பாலருக்கு
மதலைதனக் கொர்தீங்கு வந்ததே யுன்டானால்
குதலையரே யுன்றனக்குக் கொடுஞ்சிறைதான் சிக்குமென்று
சொல்லியே காளிகையில் சிறுவரையுந்தான் கொடுத்து"
இவ்வாறு காளியிடம் வளர்ந்த பிள்ளைகளுக்கு அமிர்தமதை கொடுக்க முயன்ற போது ஒரு வேதியனும் அவர் குடும்பமும் அனைத்து அமிர்தத்தையும் குடித்து விட்டனர்.கோபமுற்ற நாராயணர் அவர்களை பூமியில் பனை மரமாய் வளர சாபமிட்டார்.இந்த ஏழு சான்றோர்களும் பல தொழில்களை காளியின் மூலமாக கற்று உலகமெல்லாம் பரவி வாழ்கின்றனர்.
இதனை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் "இந்தியாவில் உள்ள சானார் சாதி மட்டும்தான் சான்றோர் என கூறமுடியாது" என்றும் "சான்றோர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் பரவியிருக்க கூடும்" என்றும் கூறுகின்றனர்.
ஆனால் அகிலத்தில் வரும் ஆன்மீக கருத்துக்களை வைத்து பார்த்தோமானால் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்து தன் தலைவனாகிய வைகுண்டரையும் அறியும் பட்சத்தில் சான்றோன் எனும் தகுதியை அடைகிறான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
ஆகவே தம்மை திருத்தி கலியை விரட்டி வைகுண்டம் எனும் அழியாத தலைவனை அடைந்து சான்றோராகி அழிவில்லா தர்மயுக வாழ்வை பெறுவோமாக!
அய்யா உண்டு!
Subscribe to:
Post Comments (Atom)
இதை படித்தீர்களா?
உதவுங்கள்
அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அன்புக்கொடி மக்கள்
அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.
அய்யாவழி வலைதளங்கள்
எங்களை தொடர்பு கொள்ள.....
EMAIL ID:anbukodi.co.cc@gmail.com
Mobile:8754563500


0 comments:
Post a Comment