வருகைக்கு நன்றி!
அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
சான்றோர் பிறப்பு
அன்பான அன்புக்கொடி மக்களே அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டின் சிறப்புகளையும் அதன் சில பகுதிகளையும் அர்த்தங்களையும் பற்றி காண்போம்.
"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"
அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூல் அய்யாவழியின் புனித நூல்கள் ஆகும். இவற்றுள் அகிலத்திரட்டு அம்மானை முதன்மை புனித நூலாகவும், அருள் நூல் இரண்டாம் நிலை புனித நூலாகவும் கருதப்படுகிறது. அய்யாவழி புராணத்தின் அடிப்படையில், உலகம் உண்டானது முதல் தற்போது நடப்பவைகளும், இனி நடக்கப்போவதுமான முக்கால சம்பவங்களை, நாராயணர் லட்சுமி தேவியிடம் கூறுவதை அய்யாவின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் கேட்டு, இங்கே அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதாக அகிலத்திரட்டு அமைந்திருக்கிறது. இது கலியை அழிக்க இறைவன் உலகில் எடுத்த அவதாரத்தை மையப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அகிலத்திரட்டின் முதற்பகுதியான முந்திய யுகங்களைப்பற்றி கூறும் பகுதி இந்து புராணங்களுடன் நிறைய சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறது. மேலும் பல கடவுளர்களையும், கோட்பாடுகளையும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் பெருவாரியானவைகளை திருத்தியமைத்திருக்கிறது. அய்யாவழியின் யுகங்களும், அவதாரங்களும் எண்ணிக்கையில் இந்து சமயத்திலிருந்து மாறுபடுகிறது. அய்யாவழியில் கலி உருவகப்படுத்தப்படுகிறது.அகிலத்தின் இரண்டாம் பகுதி, கலி யுகத்தில் கலியை அழிக்க இறைவன் அவதரித்த செய்தியை உலகுக்கு கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஏகாபரன், வைகுண்டராக அவதரிக்கிறார். வைகுண்ட அவதாரம் மிகவும் பிந்திய காலகட்டத்தில் நிகழ்ந்திருப்பதாததால் அவர் வரலாற்றில் வெகுவாக அறியப்படுகிறார். அவர் நிகழ்த்திய பெரும்பாலான அவதார இகனைகள் வரலாற்றில் இடம்பெறுகின்றன.
சான்றோர் பிறப்பு பற்றி காண்போம்.
"அரிகோண மாமலையில் அயோதவமுர்த கெங்கை
பரிகோண மாமலையின் பகுத்துரைக்க கூடாது "
அரிகோண மாமலை எனும் சிறப்பு மிக்க இடத்தில்தான் நம் சான்றோரின் பிறப்பு நிகழ்கிறது.மேற்கண்ட வரிகள் அம்மலையின் பெருமைகளை சொல்ல சொல்ல திகையாது என்பதை உணர்த்துகிறது.
"அவ்வனத்திலுள்ள அமுர்த கெங்கையானதிலே
குளித்து விளையாடிக் கூபந் தனிலிறங்கி
களித்து மகிழ்ந்து கையில்நீர் தான்திரட்டி
ஈசருட முடியில் இட்டுக்கரங் குவித்து
வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கு மாமடவார் "
மேலுள்ள வரிகள் சான்றோரின் தாய்மாரான சப்த கன்னியரை பற்றி கூறுகின்றது.சப்த மாதர்கள் அரிகோண மாமலையில் உள்ள அமிர்த கெங்கையில் நீர் திரட்டி ஈசனுடைய முடியில் இட்டு சேவிக்கும் பணி செய்தனர்.
"எழு மடவும் எண்ணெண்ணு மிப்படியே
நாளு முறையாய் நடத்திவரும் நாளையிலே
மாலறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசியென"
"பலநாளு மீசுரர்க்குப் பாவையரே நீங்களுந்தான்
செலந்திரட்டி மேன்முடியில் செய்தீ ரனுஷ்டனம்
இனியெனக்கு நீங்கள் எல்லோரும் மிக்கவந்து
கணிநீர்தனையு மெந்தலையில் கவிழுமென்றா ரெம்பெருமாள் "
இவ்வாறாக விஷ்ணுவானவர் கன்னியரை கேட்க மறுப்பு தெரிவித்த கன்னியர் ஏளனமாய் பேச ,விஷ்ணு பெருகுளிர் காற்றை வீச செய்தார்.அதை தாங்க முடியாத கன்னியர்கள் நெருப்பாய் நின்ற விஷ்ணுவை அணைத்து குளிர்காய தன் கற்பிழந்து ஏழு குழந்தைகளை பெற்றனர்.அவர்களே தெய்வகுல சான்றோர்கள் ஆவர்.இவ்வாறு பிள்ளைகளை ஈன்ற கன்னியர்கள் கற்பிழந்த காரணத்தால் கயிலையை மறந்து வனத்தில் தவமிருக்க சென்றனர்.
"நல்லதென மாமுனிவன் நளினமுடன் மகிழ்ந்து
செல்ல மகவான சிறுவர் தனைவளர்க்க
மாகாளி என்ற வடப் பத்திரகாளி
ஒகாளி என்ற உயர்ந்த பிலககாரி "
பின் வைகுண்டர் தன் தங்கையான வட பத்திரகாளியானவளை வரவழைத்து ஏழு பிள்ளைகளை வளர்க்க சொல்கிறார்.அப்பிள்ளைகளை வைத்து எதிரியான தக்கனை காளி அளிக்கின்றாள்.மேலும் பல தொழில்களையும் பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கின்றாள் .
Subscribe to:
Post Comments (Atom)
இதை படித்தீர்களா?
உதவுங்கள்
அன்பான அன்புகொடி மக்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்.நமது தளத்தில் வெளியிட உங்களிடமிருந்து அய்யாவை பற்றிய தகவல்கள் தேவைபடுகின்றன.
ஆகவே நீங்கள் அறிந்த தாங்கல்(அய்யா கோவில்) பற்றிய தகவல்கள்,அல்லது உங்கள் வாழ்வில் அல்லது உங்கள் குடும்பத்தில் வைகுண்டர் செய்த அற்புதங்கள் போன்ற தகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.
தொடர்புக்கு:anbukodi.co.cc@gmail.com
அன்புக்கொடி மக்கள்
அய்யா வைகுண்டர்

அருள்வாக்கு
அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டு அம்மானையை இனையத்தில் படித்து மகிழுங்கள்.
அய்யாவழி வலைதளங்கள்
எங்களை தொடர்பு கொள்ள.....
EMAIL ID:anbukodi.co.cc@gmail.com
Mobile:8754563500


0 comments:
Post a Comment